Advertisment

இறக்குமதிக்கு அதிக வரி: இந்திய உள்நாட்டு எலக்ட்ரானிக் சந்தையை பாதிப்பது ஏன்?

அதிக இறக்குமதி வரிகள் இந்தியாவின் உள்நாட்டு மின்னணுவியல் துறையை எவ்வாறு பாதிக்கின்றன? அதிக இறக்குமதி கட்டணங்கள் PLI திட்டங்களுக்கு எதிர்மறையானவை என்று ICEA நம்புவது ஏன்?

author-image
WebDesk
New Update
இறக்குமதிக்கு அதிக வரி: இந்திய உள்நாட்டு எலக்ட்ரானிக் சந்தையை பாதிப்பது ஏன்?

உலகளாவிய போட்டியிலிருந்து ஏற்படும் அபாயங்களைக் குறைக்கவும், உள்நாட்டு நிறுவனங்களைக் காப்பாற்றவும் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கும் இந்தியாவின் கொள்கை, மின்னணுப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலான திட்டங்களுக்கு எதிர்மறையாக இருக்கலாம் என்று இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) அறிக்கை தெரிவித்துள்ளது. கூறியுள்ளார்.

Advertisment

மற்ற எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது எப்படி?

சீனா, வியட்நாம், மெக்சிகோ மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் இந்தியாவின் செயல்திறனை ஒப்பிட்டு, அந்நிய நேரடி முதலீட்டை மேம்படுத்துவது போன்ற ஒரே மாதிரியான உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அனைத்து நாடுகளும் மின்னணு பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை அறிக்கை காட்டுகிறது.

உள்நாட்டு திறன்கள், போட்டித்திறன், ஏற்றுமதியை அதிகரித்து, தங்கள் உள்நாட்டு சந்தைகளை உலகளாவிய விநியோகத்துடன் இணைக்கிறது.

1980 முதல், தரவுகளை ஒப்பிடுகையில், அலுவலகம் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களின் ஏற்றுமதியில் சீனா தனது தரவரிசையை 35 லிருந்து 1 க்கு மேம்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் 1990 ஆம் ஆண்டு வரை மின்னணு தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யாத வியட்நாம், 20 ஆண்டுகளில் மிகப்பெரிய ஏற்றுமதி சாதனையை எட்டியுள்ளது.

மேலும், 1980களில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 37வது இடத்தில் இருந்த மெக்சிகோ, கடந்த இரண்டு தசாப்தங்களாக நிலையாக உயர்ந்து 11வது இடத்தைப் பெற்றுள்ளது.

1980 ஆம் ஆண்டில் 45 வது இடத்தில் இருந்த தாய்லாந்து, முதல் 15 மின்னணு தயாரிப்பு ஏற்றுமதியாளர்களில் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக இறக்குமதி வரிகள் எவ்வாறு பாதிக்கின்றன?

இந்த தரவரிசைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், அனைத்து நாடுகளும் உள்நாட்டு மின்னணுவியல் உற்பத்தியை உயர்த்துவதற்கு ஏறக்குறைய ஒரே கொள்கையைப் பின்பற்றினாலும், இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாடு சுங்கவரிகளை அதிகம் நம்பியிருப்பதுதான் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய விநியோக சந்தையில் இந்தியாவின் பங்கேற்பு குறைவாக இருப்பதால், உலகச் சந்தைகளில் இருந்து முதலீட்டாளர்கள் மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் இந்தியாவிலிருந்து விலகிச் செல்வதற்கு அதிக வரி கட்டணங்கள் காரணமாக திகழ்கிறது.

மேலும், இந்தியப் பொருளாதாரத்தின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் இருந்தபோதிலும், ஏற்றுமதி மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் அதன் பங்கு குறைவாகவே உள்ளது.

ஐசிஇஏ அறிக்கையின்படி, இந்தியாவில் மிகப்பெரிய பிஎல்ஐ திட்டம் பின்பற்றப்பட்டு வந்தாலும், இந்த கொள்கை உள்நாட்டு நிறுவனங்கள் பெரியதாக வளர்ந்து வருவதால் பெரும்பாலான நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்ற அனுமானம் தவறானது என குறிப்பிட்டுள்ளது.

பிஎல்ஐ திட்டம் என்பது உற்பத்தி ஊக்குவிப்பு திட்டமாகும், இதன் மூலம் இந்தியாவை உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களாக மாற்ற இலக்கும் வைக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக மொபைல் போன் துறையில் உள்நாட்டு சந்தையின் மதிப்பு 2025-26 க்குள் $55 பில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உலகளாவிய சந்தை $625 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, தற்போது, இந்திய உள்நாட்டு சந்தை மதிப்பானது, உலக சந்தையில் 6.5 சதவீதமாக உள்ளது. நிலையான வளர்ச்சி வலுவாக இருந்தால், 8.8 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தற்சமயம், இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையின் மதிப்பானது, அந்நிய நேரடி முதலீடுக்கு இந்தியாவை முதன்மையான இடமாகத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு போதுமானதாக இல்லை என கருதப்படுகிறது. குறிப்பாக செலவுத் திறனின்மையில் உள்ளஇந்தியாவின் கொள்கைகள், மிகப்பெரிய உலகளாவிய சந்தையை அணுகுவதற்கு தடைகளாக இருக்கும் வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக இறக்குமதி கட்டணங்கள் PLI திட்டங்களுக்கு எதிர்மறையானவையா?

மின்னணு உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்பட்டால், பிஎல்ஐ திட்டங்களின் ஆதாயங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை ஐசிஇஏ கூறுவதற்கு, பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, உலகளாவிய மதிப்புச் விநியோகத்தை கொண்ட நிறுவனங்கள், உதிரிபாகங்களுக்கான கட்டணங்கள் அதிகமாக இருக்கும்போது இந்தியாவுக்குள் நுழையத் தயங்குகின்றன என்பது தான்.

இந்தியாவின் பெரிய எலக்ட்ரானிக்ஸ் சந்தைகள் பெரியளவில் தோன்றினாலும், அவை உலகளாவிய சந்தையுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இருக்கிறது. கட்டணம் உயர்த்தப்பட்ட உதிரிபாகங்களில் 50% இந்தியா உற்பத்தி செய்வதில்லை. எனவே சுங்க வரிகளின் தாக்கம் இந்தியாவின் போட்டித்தன்மைக்கு பாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

உலகளவில் அமெரிக்கா போன்ற நிறுவனங்கள் மின்னணு உதிரிபாகங்களின் இறக்குமதிக்கான வரிகளை அதிகரித்துக் கொண்டிருந்தாலும், ஆசிய நாடுகளில் உள்ள சக நாடுகளிடையே போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்ய இந்தியா தனது கட்டணத்தை குறைந்தபட்சமாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஐசிஇஏ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment