Advertisment

பீகார்: கீழ்நிலை சமூகங்களிடம் அதிகாரம்; மேல் வகுப்பினரிடம் பொருளாதாரம்

சம்பள வேலைகளை அணுகுவதில் யாதவர்கள் முன்னேற்றம் கண்டாலும், பீகாரில் அதிகாரத்துவம் இன்னும் உயர் சாதியினரால் கட்டுப்படுத்தப்படுகிறது

author-image
WebDesk
New Update
How, in Bihar, political power is with lower castes while economic surplus remains with upper castes

Political power is with lower castes :  இந்தியாவின் இந்தி பேசும் பகுதிகளில் நேர்மறையான பகுப்பாய்விற்கு ஆய்வகமாக திகழ்கிறது பீகார். இந்தியாவின் சோசயலிசம், 1970களில் கர்பூரி தாக்கூரின் கீழ் லட்சிய இட ஒதுக்கீட்டின் கொள்கைகள் மூலம் துவங்கியது.

Advertisment

மற்றொரு சோசியலிஸ்ட் லாலு பிரசாத் ஜே.பி. இயக்கத்தின் சூழலில் அரசியல் இணைந்து 15 ஆண்டுகள் பீகாரில் ஆட்சி செய்தார். உயர் சாதியினரின் விமர்சனங்கள் நேராகவோ அல்லது மறைமுகமாகவோ அவர் மாநிலத்தை கட்டாயப்படுத்தினார் என்று கூறுகிறது. உண்மையாகவா? மற்றொரு ஓ.பி.சி தலைவரான நிதீஷ் குமாரும் அப்படி தான் செய்தாரா?

பாரிஸில் அமைந்திருக்கும் CERI- சயின்சஸ் போ / சி.என்.ஆர்.எஸ். நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார் க்றிஸ்டோஃபே ஜெஃப்ரெலோட். பீகாரில் அரசியல் அதிகாரம் குறைந்த சாதியினருடன் உள்ளது, அதே நேரத்தில் பொருளாதார உபரி மற்றும் அதிகாரத்துவ ஆட்சி உயர் சாதியினருடன் தீர்க்கமாக உள்ளதுபீகாரில் அரசியல் அதிகாரம் குறைந்த சாதியினருடன் உள்ளது, அதே நேரத்தில் பொருளாதார உபரி மற்றும் அதிகாரத்துவ ஆட்சி உயர் சாதியினருடன் தீர்க்கமாக உள்ளது என்று கூறியுள்ளார் அவர்.

பீகார் மாநிலம் 1990 ஆண்டுக்குப் பிறகான அமைதி புரட்சியில் முக்கிய பங்காற்றியது. அதன் விளைவு இந்தி பேசும் மாநிலங்களில் அதிகாரம் உயர் சாதியினரிடம் இருந்து ஓ.பி.சிகளுக்கு மாறியது. 1995ம் ஆண்டு தேர்தலின் போது 44% எம்.எல்.ஏக்கள் (26% யாதவர்கள் உட்பட) ஓ.பி.சி பிரிவை சார்ந்தவர்கள். அதற்கு முந்தைய காலம் வரை அதிக இடங்களை கைப்பற்றிய உயர்சாதியினரைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகம். 2000ம் ஆண்டி ராப்ரி தேவியின் ஆட்சியின் போது, மொத்த அமைச்சர்களில் ஓ.பி.சி. அமைச்சர்கள் 50% பேர் இடம் பெற்றனர். உயர் சாதியினர் 13% பேர் மட்டுமே இருந்தனர்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

ஓ.பி.சி.கள் வேலைக்கான இட ஒதுக்கீட்டிலும் பயன் அடைந்தார்கள். 2011 - 12 இந்திய மனிதவளம் மேம்பாட்டு கணக்கெடுப்பில் பிராமணர்கள் மற்றும் இதர உயர் சாதியினர்களுக்கு அடுத்து யாதவர்கள் வேலை வாய்ப்புகளில் சிறப்பாக பயடைந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. 10% நபர்கள் சம்பளம் பெற்றிருந்தனர். 9% குர்மிகளும் சம்பளம் பெறும் வேலையில் இருந்தனர். இந்த சாதனை 40 ஆண்டுகளுக்கு முன்பே உறுதியான நடவடிக்கைக் கொள்கைகளை பெற்ற தலித்களை காட்டிலும் அதிகம். 8.9% பஸ்வான்கள், 7.7% ஜாதவர்கள் அப்போது சம்பளம் பெறும் வேலைகளில் இருந்தனர்.

கட்டாயமாக்கல் என்ற அடிப்படையில் ஓ.பி.சிக்கள் வேலை மற்றும் அரசியல் அதிகாரங்களில் பயன் அடைந்தாலும் அவர்களால் இதர துறைகளில் சோபிக்க முடியவில்லை. உயர் சாதியினர் தங்கள் சடங்கு மற்றும் சமூக-பொருளாதார அந்தஸ்தால் அவர்களின் எண்ணிக்கையிலான பலவீனத்தை ஈடுசெய்கின்றனர், ”என்று க்றிஸ்டோஃபே கூறுகிறார்.

இறுதியாக நடத்தப்பட்ட இந்திய மனிதவள மேம்பாட்டு கணக்கெடுப்பில் பிராமணர்களின் தனிநபர் வருமானம் ரூ. 28,093 ஆக உள்ளது. அவர்களை தொடர்ந்து இதர உயர் சாதியினர் ரூ. 20,655 பெறுகின்றனர். குஷ்வாஹாஸ் மற்றும் குர்மீஸ் ரூ. 18, 811 மற்றும் ரூ. 17. 835 -ஐ முறையே வருமானமாக பெறுகின்றனர். இதற்கு மாறாக ஓ.பி.சியிலேயே குறைவான வருமானத்தை யாதவர்கள் ஈட்டுகின்றனர். ரூ .12,314 க்கு மிகக் குறைவான ஒன்றாகும், இது மற்ற ஓபிசிக்களை விட (ரூ. 12,617) சற்றே குறைவாகவும், ஜாதவர்களை விட (ரூ. 12,016) காட்டிலும் அது மிக அதிகமாக இல்லை.  "உயர் சாதியினருக்கு இன்னும் மாநில அதிகாரத்தின் தீர்க்கமான கட்டுப்பாடு உள்ளது. சம்பள வேலைகளை அணுகுவதில் யாதவர்கள் முன்னேற்றம் கண்டாலும், பீகாரில் அதிகாரத்துவம் இன்னும் உயர் சாதியினரால் கட்டுப்படுத்தப்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment