Advertisment

இந்திய ரயில்வேயின் கார்ப்பரேட் வரைவுத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

கார்ப்பரேட் ரயில் வரைவுத் திட்டம் இந்திய ரயில்வே துறையின்  புதிய முயற்சியாகும். இந்த வரைவுத் திட்டத்தை இந்திய ரயில்வே மிகவும் தீவிரமாக பரிசோதித்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India’s Railways’ corporate train model

IRCTC, India’s Railways’ corporate train model , Kashi Mahakal Express indian railway privatisation

IRCTC Kashi Mahakal Express: சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட  டெல்லி-லக்னோ தேஜாஸ்/மும்பை-அகமதாபாத்  தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளைத் தொடர்ந்து நாட்டின் மூன்றாவது 'தனியார் கார்ப்பரேட்’ ரயில் காஷி மகாகல் எக்ஸ்பிரஸ் ஆகும்.

Advertisment

'கார்ப்பரேட் ரயில் வரைவுத் திட்டம்' இந்திய ரயில்வே துறையின்  புதிய முயற்சியாகும். இந்த வரைவுத் திட்டத்தை  தற்போது இந்திய ரயில்வே மிகவும் தீவிரமாக பரிசோதித்து வருகிறது.

வழக்கமான பயணிகள் ரயில்களை இந்திய ரயில்வே பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) க்கு ‘அவுட்சோர்சிங்' (புறத்திறனீட்டம்) செய்வதே இதன் நோக்கமாகும். தனியார் ஆப்ரேட்டர்கள்  150 ரயில்களை இயக்க 100 ரயில் தளவாடங்களை குத்தகைக்கு விடுவதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த வரைவுத் திட்டம் காணப்படுகிறது.

கார்ப்பரேட் ரயில் வரைவுத் திட்டம் எவ்வாறு செயல்படும்: ரயில் சேவை இயக்குவதற்கான அனைத்து முடிவுகளையும் ஐஆர்சிடிசி எடுக்கும். உதாரணமாக  ரயில் கட்டணம், உணவு, உள் வசதிகள், பராமரிப்பு, புகார்கள் போன்றவைகள்.

ரயில்வே வழித்தடங்கள் உரிமையாளர் என்ற கணக்கில்  இந்திய ரயில்வே, ஐ.ஆர்.சி.டி.சியிடமிருந்து முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தொகையை பெற்றுக் கொள்ளும்

இந்தத் தொகை மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது - சரக்கு சேவை கட்டணம் ,குத்தகை மற்றும் பாதுகாப்பு சேவை கட்டணம்.

தற்போதைய தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சரக்கு சேவைகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ .800 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. நகர்த்துவதற்கு தேவையான தடங்கள், சிக்னலிங், டிரைவர், ஸ்டேஷன் ஊழியர்கள்,போன்ற நிலையான உள்கட்டமைப்பு  இந்த தொகையில் அடங்கும்.

அடுத்ததாக, ரயில்வே பெட்டிகளுக்காக குத்தகை கட்டணம் . இந்திய ரயில் பெட்டிகளை உற்பத்தியை அதன் நிதிக் குழுவான இந்திய ரயில்வே நிதிக் கழகத்திற்கு (ஐ.ஆர்.எஃப்.சி) குத்தகைக்கு விட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக பாதுகாப்பு கட்டண சேவை . பொதுத்துறை நிறுவனத்தின் காவலில் இருக்கும்போது, ​​ரயில் பெட்டிகள் பாதுகாப்பாக இருப்பதற்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புது தில்லி-லக்னோ தேஜாஸ் ரேக்கிற்கு ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க: Explained: How does India’s Railways’ corporate train model work?

ஐ.ஆர்.சி.டி.சிக்கு என்ன அதிகாரங்கள் உள்ளன: இயக்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களைக் கொண்ட ஒரு நிறுவன நிறுவனமாக இருப்பதால், ரயில்வேயில் இருந்து பெறும் ரயில் பேட்டிகள் புதியவைகளாக இருக்க வேண்டும் என்று ஐஆர்சிடிசி எதிர்பார்க்கும். ஏனெனில் ரயில் பெட்டிகளின் தரத்தில் தான் ஐஆர்சிடிசி-ன் லாபம்/நட்டம் அமைந்திருக்கிறது.

எனவே, ஐ.ஆர்.சி.டி.சி ரயில் சேவை அளவுகோளை தீர்மானிப்பதற்கும்,அவற்றை மாற்றுவதற்கும் முழு நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளது. ரயில்வே அமைச்சகம் அல்லது அதன் கொள்கைகளுக்கும் ஐ.ஆர்.சி.டி.சி உட்பட தேவையில்லை.லாப நோக்கத்துடன் வணிகத்தை  நடத்துவதற்குத் தேவையான சுதந்திரத்துடன் ஐ.ஆர்.சி.டி.சி இயங்கும். மேம்பட்ட சேவை தரம் மற்றும் பயணிகளுக்கான பயனர் அனுபவத்திற்கான சூழலை உருவாக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட பாதையில் நிறுத்தங்களின் எண்ணிக்கையைக் கூட தீர்மானிக்கும் (தேவைகளைப் பொறுத்து) சுதந்திரத்தைப் பெறுகிறது. உதாரணமாக, லக்னோ தேஜாஸுக்கு இரண்டு நிறுத்தங்கள் உள்ளன, மும்பை-அகமதாபாத் தேஜாஸுக்கு ஆறு நிறுத்தங்கள் உள்ளன. இந்த முடிவுகள் எல்லாம் வணிகம் சார்ந்த  முடிவுகள்.

இந்திய ரயில்வே துறை இதனால் அடையும் நன்மை என்ன: ரயில்களை இயக்குவது தொடர்பான இழப்புகளை (குறைந்த கட்டணம் ) இனி வரும் காலங்களில் இந்திய ரயில்வே துறை சந்திக்க வேண்டியதில்லை.

தனியார் டெய்ன் ஆப்பரேட்டர்களுக்கும் இதே யுகதி தானா: தனியார் ரயில் ஆப்பரேட்டர்களுக்கான வரைவுத் திட்டம் வேறுபட்டது, சரக்கு சேவைக் கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ரூ .668 என்பதை தாண்டி , வருவாய் பகிர்வுக்கு ஆபரேட்டர் ஒப்புக் கொள்ள வேண்டும்.

இந்திய ரயில்வே துறையுடன் அதிக சதவீத வருவாயைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் ரயில் ஆப்பரேட்டர்கள்  ஒப்பந்தத்தை வெல்வார்கள். தேர்ந்தெடுக்கப்படும் தனியார் நிறுவனகள் குத்தகை மற்றும் பாதுகாப்பு கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த ரயில் பெட்டிகளை மூலம் இயக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment