Advertisment

2021 தேர்தல்: கமல்ஹாசன் கட்சியின் பங்கு என்ன?

கமல்ஹாசன் ஒரு நல்ல சொற்பொழிவாளரோ அல்லது தகவல் தொடர்பாளரோ அல்ல. ஆனால், அவர் தனது செய்திகளை எளிமையான சொற்களில் முவைப்பதில் அதிக திறமையுடன் இருந்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
kamal haasan, makkal needhi maiam, tamil nadu assembly elections 2021, கமல்ஹாசன், கமல், மக்கள் நீதி மய்யம், மநீம, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021, மநீம கூட்டணி, kamal haasan expected contest in alandhur, கமல்ஹாசன் ஆலந்தூரில் போட்டி, mnm, makkal needhi maiam alliance

Arun Janardhanan

Advertisment

கமல்ஹாசன் ஒருபோதும் எம்.ஜி.ஆர் அல்ல. ஆனால், அவர் ஓரளவுக்கு சிவாஜி கணேசன். அவர் தமிழ் சினிமாவில் மிகவும் மதிப்பிற்குரியவராகவும் அன்பான நடிகராகவும் இருந்தார். இருப்பினும், அவர் தனது அரசியல் கட்சியான மக்கல் நீதி மய்யத்தை பிப்ரவரி, 2018-ல் ஆரம்பித்தபோது, அவரது நட்சத்திர அந்தஸ்து ஓரளவு குறைந்தது. கமலுக்கு இருந்ததெல்லாம் கொஞ்சம் சோசலிச உயர்ந்த அரசியல் கனவுகள்தா. அவருடையது அரசியல் பின்னணியோ அல்லது கருத்தியல் நம்பிக்கையோ கொண்ட ரசிகர் பட்டாளமும் அல்ல.

மநீம சந்தித்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், அக்கட்சி சந்திக்கிற முதல் சட்டமன்றத் தேர்தலில் கமலின் நிலை என்ன?

கமல்ஹாசனின் சினிமா புகழ் காரணமாக 2019 தேர்தல்களில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் அவரது கூட்டங்களில் பெரிய அளவில் கூட்டம் கூடியட்து. இருப்பினும், கமல் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புற மக்களிடையே மிகவும் பிரபலமாகக் காணப்பட்டார். ஒருவேளை அது அவருடைய சிவாஜி போன்ற பிம்பத்தின் காரணமாக இருக்கலாம். எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினிகாந்த் மாஸ் ஹீரோக்களாக இருந்தனர். ​​கேப்டன் விஜயகாந்தின் பலம் கிராமப்புற மக்களிடையே பிரபலமாக இருந்தார்.

இருப்பினும், ஏழைகள் மற்றும் கிராமங்களுக்காக அடிக்கடி பேசும் கமல், இந்த முறை சென்னை மாநகரத்தில் உள்ள ஒரு தொகுதியில் இருந்து போட்டியிட வாய்ப்புள்ளது. அது பெரும்பாலும் அலந்தூர் தொகுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதி உயர் சாதி இந்து மக்கள் தொகை பெரும்பான்மை உள்ள தொகுதியாக அறியப்படுகிறது.

சென்னை மைலாப்பூர் தொகுதியை அவர் தேர்வு செய்ய வாய்ப்பில்லை என்பதற்கான காரணம் என்னவென்றால், காலப்போக்கில், அது ஒரு கலவையான மக்கள்தொகையாக வளர்ந்துள்ளது. குறைந்தது ஆறு குடிசைப் பகுதிகள், கோயில்கள், சபாக்கள் மற்றும் மடங்களைக் கொண்டுள்ளது. மேலும், அது இப்போது ஒரு சக்திவாய்ந்த பிராமண மேல்தட்டு வர்க்க கோட்டையாக இல்லை.

மறுபுறம், ஆலந்துர், ஒரு குறிப்பிடத்தக்க வகையில் நடுத்தர வர்க்க மக்களைக் கொண்டுள்ளது. சமீபத்தில் இந்த தொகுதியில் தோன்றிய குடியிருப்புகளில், குறிப்பாக சென்னையின் ஐடி துறையைச் சேர்ந்த இளம் வாக்காளர்கள் மற்றும் பிற நல்ல ஊதியம் பெறும் வேலைகளில் இருப்பவர்கள் என்று நிறைந்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யத்தின் வாக்கு சதவீதம்

கடந்த மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 3.72 சதவீத வாக்குகளைப் பெற்றது. மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும்போது அக்கட்சி தொடங்கி 14 மாதங்களே ஆகியிருந்ததால் அது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

மநீம ஒரு நல்ல வாக்கு சதவீதத்தைப் பெற்றது. மாநிலத்தில் பிரபலமான இடதுசாரி கட்சிகள் எப்போதும் உறுதிப்படுத்த முடியததைவிட அதிகமாக நகர்ப்புற வாக்காளர்களில் ஒரு பகுதியினரிடையே கமலின் புகழ் அதிகமாக இருந்தது. கமலின் மதமற்ற பிராமண அடையாளத்தை மீறி நேசிக்கும் உயர் சாதி வாக்காளர்கள் உட்பட பலரிடையே புகழ் பெற்றிருந்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில், கோயம்புத்தூரில் போட்டியிட்ட அவரது கட்சி வேட்பாளர் ஆர் மகேந்திரன் அதிகபட்ச வாக்குகளை (1.45 லட்சம்) பெற்றார். சென்னை நகரத்தில் உள்ள நான்கு இடங்களில் மூன்றில், கமல் கட்சிக்கு 1 லட்சம் வாக்குகள் கிடைத்தன.

மக்கள் ஏன் கமலுக்கு வாக்களிக்க வேண்டும்?

கமல் ஒரு நல்ல சொற்பொழிவாளரோ அல்லது தகவல் தொடர்பாளரோ அல்ல, ஆனால், அவர் தனது செய்திகளை எளிமையான சொற்களில் முன்வைப்பதில் அதிக திறமையுடன் இருந்து வருகிறார்.

அவர் மாநில உரிமைகள் அல்லது இடஒதுக்கீடு பற்றி அதிகம் பேசமாட்டார். ஆனால், அவரது பிரச்சாரங்கள் பெரும்பாலும் “நேர்மையான மற்றும் ஊழல் இல்லாத அரசாங்கத்திற்கான” முழக்கங்களில் கவனம் செலுத்துகின்றன. மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதியளிக்கின்றன.

மநீம கூட்டணி

கமல்ஹாசன் தனது கூட்டணித் திட்டங்களை மார்ச் 7ம் தேதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளுக்கு மாறாக கமல்ஹாசனுக்கு தென் தமிழகத்தில் நாடார் வாக்கு வங்கியைக் கொண்ட நடிகர் சரத்குமாருடைய சிறிய கட்சியின் ஆதரவு சமீபத்தில் கிடைத்துள்ளது. அவர் சிறிய கட்சிகளிடமிருந்து ஆதரவை சேகரித்து மூன்றாவது முன்னணியை நிறுவுவார் அல்லது அடுத்த ஒரு வாரத்தில் திமுக கூட்டணியில் இடம் பெறுவதற்கான தனது முயற்சிகளைத் தொடருவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக காங்கிரஸ் அல்லது எந்தவொரு பெரிய திமுக கூட்டணி கட்சிகள் விலகினால் கூட்டணிக்கு முயற்சிப்பார் என்று தெரிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Kamal Haasan Makkal Needhi Maiam Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment