Advertisment

அயோத்தி ராமர் கோயில் போல, ஹனுமன் பிறந்த இடத்தை உருவாக்க கர்நாடகா திட்டமிடுவது எப்படி?

உண்மையான ஹனுமன் பிறந்த இடம் தொடர்பாக கர்நாடகாவும் ஆந்திரப் பிரதேசமும் மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. கர்நாடக அரசின் ஹனுமன் கோவில் திட்டம் என்ன? ஆந்திராவின் கோரிக்கை என்ன, அதை கர்நாடகா எப்படி எதிர்கொண்டது?

author-image
WebDesk
New Update
Karnataka Hanuman birthplace, Ram temple, Karnataka Ram temple, கர்நாடகா, ஹனுமன் கோயில், ஆந்திரப் பிரதேசம், அயோத்தி ராமர் கோயில், Karnataka Hanuman temple, Tamil Indian Express

இந்துக் கடவுளான ஹனுமனின் பிறப்பிடமாகக் கருதப்படும் கொப்பல் மாவட்டத்தில் உள்ள அஞ்ஜெயநாத்ரி மலையில் உள்ள கோயிலை மறுசீரமைக்கும் பணியைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மேம்பாட்டுப் பணிகளுக்கான வரைபடம் தயாராக உள்ளதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங் தெரிவித்துள்ளார்.

உண்மையான ஹனுமன் ‘ஜென்மஸ்தலம்’ தொடர்பாக கர்நாடகாவும் ஆந்திராவும் மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

வட கர்நாடகாவில் ஹம்பிக்கு அருகில் உள்ள கிஷ்கிந்தாவில் உள்ள அஞ்ஜெயநாத்ரி மலையில் இந்துக் கடவுள் ஹனுமான் பிறந்ததாக கர்நாடகா கூறும்போது, ​​ஆந்திரா ஹனுமன் பிறந்த இடமாக திருமலையின் ஏழு மலைகளில் உள்ள அஞ்சனாத்ரியைக் குறிப்பிடுகிறது.

கர்நாடக அரசின் ஹனுமன் கோவில் திட்டம் என்ன?

அஞ்ஜெயநாத்ரி மலையில் உள்ள அனுமன் கோவிலையும், அயோத்தியில் வரும் ராமர் கோவிலையும் சுற்றுலா வழித்தடத்தின் மூலம் இணைக்க முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு விரும்புகிறது.

அஞ்ஜெயநாத்ரி மலையில் ஏற்கனவே உள்ள கோவிலை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தில் அடங்கியுள்ளது. உலக பாரம்பரிய இடமான ஹம்பியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோவில் துங்கபத்திரை நதியைத் தாண்டி உள்ளது.

ஹம்பி என்பது ராமாயணத்தில் குறிப்பிடப்படும் 'வானரஸ்' அல்லது குரங்குகளின் பண்டைய இராச்சியமான ‘கிஷ்கிந்தா’ என்று நம்பப்படுகிறது.

இத்திட்டத்தில் சாலை அமைத்தல் மற்றும் மலைக்கோயிலுக்கு மாற்று வழிகள் வழிகள் அமைத்தல் ஆகியவை அடங்கும்.

பசவராஜ் பொம்மை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “இந்த திட்டத்துக்கு 60 ஏக்கர் நிலம் தேவை. இதில் 58 ஏக்கர் தனியார் நிலம் விவசாயிகளுக்கு சொந்தமானது. விவசாயிகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அல்லது கர்நாடக தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டு வாரியம் (KIADB) மூலம் நிலத்தை வாங்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பசவராஜ் பொம்மை இந்த திட்டத்தில் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக்கொண்டு இந்த திட்டம் தொடர்பாக பல்வேறு கூட்டங்களை நடத்தினார்.

மேலும், மறு ஆய்வுக் கூட்டத்திற்காக ஜூலை 15 ஆம் தேதி மலைப்பகுதிக்கு செல்வதாகவும் முதல்வர் கூறினார்.

ஆந்திராவின் கோரிக்கை என்ன?

டிசம்பர் 2020 இல், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரா கோயில் உள்ளிட்ட கோயில்களை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), வேத அறிஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, ஆய்வு செய்து உண்மையான ஹனுமன் பிறந்த இடத்தை குறிப்பிட்டு அறிக்கை சமர்ப்பித்தது.

பின்னர், ஏப்ரல் 2021 இல், ஆந்திராவில் உள்ள அஞ்சனாத்ரி மலை ஹனுமான் பிறந்த இடம் என்று இந்த குழு கூறியது. திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கே எஸ் ஜவஹர் ரெட்டி, அவர்களின் கருத்தை ஆதரிக்க புராண, ஜோதிட மற்றும் அறிவியல் சான்றுகள் உள்ளன என்று கூறினார்.

கர்நாடகாவின் எதிர்க் கேள்வி என்ன?

ஹம்பிக்கு அருகில் உள்ள அஞ்ஜெயநாத்ரி மலையில் ராமாயணத்தில் இந்துக் கடவுள் ராமர் மற்றும் அவரது தம்பி லக்ஷ்மணன் ஹனுமனை சந்தித்த இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கர்நாடக அமைச்சர்கள் பலர் கூறியுள்ளனர். மலையின் உச்சியில் பாறையில் செதுக்கப்பட்ட சிலையுடன் அனுமன் கோயிலும், அருகில் ராமர், சீதா மற்றும் அஞ்சனா தேவி கோயில்களும் உள்ளன. கர்நாடக அரசு இந்த மலையை ஹனுமன் ‘ஜென்மஸ்தம்’ (பிறந்த இடம்) என்ற அடையாளத்துடன் ஒரு புனித யாத்திரை மையத்தை உருவாக்க உள்ளது.

உண்மையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் குழு அமைக்கப்பட்ட உடனேயே, கர்நாடக சுற்றுலாத் துறையானது மலைக் கோயில் தளத்தை மேம்படுத்துவதற்கான அதன் திட்டங்களில் வேலை செய்யத் தொடங்கியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Karnataka Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment