Advertisment

நாடு தழுவிய பொது முடக்கத்தால் தவிர்க்கப்பட்ட மரணங்கள் எத்தனை?

INDSCI-SIM எனப்படும்  இந்தியாவுக்கான விரிவான தொற்றுநோயியல் மாதிரியை ஐ.எஸ்.ஆர்.சி உருவாக்கியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus lockdown migrant crisis Indian express special photo gallery

மே 22 அன்று நடைபெற்ற பத்திர்கையாளர் சந்திப்பில், நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினரான டாக்டர் வி.கே. பால், நாடு தழுவிய பொது முடக்கத்தால் எற்பட்ட நன்மைகளை விவரித்தார்

Advertisment

இந்தியாவில் பொது முடக்கநிலை முன் கூட்டியே அறிவிக்கப்பட்டதால், மே 15 வரை 36-70 லட்சம் கொரோனா பாதிப்புகள், 1.2-2.1 லட்சம் இறப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் மதிப்பீடு தெரிவித்தது;

தவிர்க்கப்பட்ட கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 78,000 என்று இந்திய பொது சுகாதார அறக்கட்டளை மேற்கொண்ட மாடலிங் மூலம் கண்டறியப்பட்டது;

இரண்டு முன்னணி பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட மதிப்பீடு, பொது முடக்கநிலை காரணமாக நாட்டில் 23 லட்சம் கொரோனா ஆபத்துக்கள், 68,000 இறப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது;

சுயாதீன நிபுணர்களின் பகுப்பாய்வு,  இந்தியாவில் 15.9 லட்சம் கொரோனா பாதிப்புகள், 51,000 இறப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது;

புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட மதிப்பீட்டில், இந்தியாவில்  14-29 லட்சம் கொரோனா பாதிப்புகள் மற்றும் 37,000-78,000 இறப்புகள் தவிர்க்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது;

போன்ற புள்ளிவிவரங்களை அவர் வழங்கினார்.

இந்த மதிப்பீடுகள் மிகவும் பரந்த அளவில் இருந்தாலும், மதிப்பீடுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது பற்றிய தகவல் நமக்கு புரியாத புதிராகவே உள்ளது.

மாற்று மதிப்பீடுகள்: 

ஐ.எஸ்.ஆர்.சி அமைப்பைச் சேர்ந்த நாங்கள் (ISRC collective) மாற்று மதிப்பீடுகளை இங்கே வழங்குகிறோம்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 600 விஞ்ஞானிகள், கலைஞர்கள், அறிவியல் தொடர்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பிற உறுப்பினர்களை கொரோனா பரவலுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்த அமைப்பு செயல்படுகிறது. கோவிட் -19 குறித்த தகவல்களை ஆதாரப்பூர்வ அடிப்படையில் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. INDSCI-SIM எனப்படும்  இந்தியாவுக்கான விரிவான தொற்றுநோயியல் மாதிரியை ஐ.எஸ்.ஆர்.சி உருவாக்கியது. தவிர்க்கப்பட்ட கொரோனா பாதிப்புகள், உயிரழப்புகள் போன்ற கேள்விகளுக்கு தீர்வு காண இந்த மாதிரி மிகவும் பொருத்தமானது.

அவ்வப்போது புதுப்பிக்கப்படும் கொரோனா தகவல்களையும், வயது -சார்ந்த இறப்பு நிகழ்தகவுகள், ஒவ்வொரு மாநிலத்தின் வாழும் மக்களின் வயதுக் கட்டமைப்பு  உள்ளிட்ட மக்கள்தொகை விவரங்களையும் இந்த மாதிரி உள்ளடக்குகிறது. பொது முடக்கநிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய தடுப்பு நடவடிக்கையின் விளைவுகளையும் இந்த மாதிரி விவரிக்கிறது.  இதன் விளைவாக, பொது முடக்கநிலை காலங்களில், கொரோனா அறிகுறிகள் கொண்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கணிக்கும் திறன் அதிகரிக்கிறது.

பொது முடக்கநிலையால், மே 15க்குள் 8,000-32,000 வரம்பிலான எண்ணிக்கை இறப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று  இந்த மாதிரி கணித்துள்ளது. நிதி அயோக் உறுப்பினர் வெளியிட்ட எண்ணிக்கைடை ஒப்பிடும்போது, ​​இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானதாக இருந்தாலும், இந்தியாவில் தற்போது இருக்கும் விரிவான தொற்றுநோயியல் மமாதிரியில் மூலம் இந்த எண்ணிக்கை பெறப்பட்டது என்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, நாங்கள் எவ்வாறு மதிப்பீடு செய்கிறோம் என்பது பற்றிய அனைத்து தகவல்களும் பொது வெளியில் கிடைக்கின்றன. எனவே, அனைத்து வகையான  விமர்சனங்களையும் கருத்தில் கொள்ள எங்கள் மாதிரி  தயாராக இருக்கிறது.

இந்தியாவில், கணிசமான எண்ணிக்கையில்  கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என்பதை நாங்கள் கண்டறிகிறோம். அதாவது, கண்டறியப்பட்ட ஒவ்வொரு பாதிப்புக்கும், 20-30 பேரின் பாதிப்புகள்  கண்டறியப்படவில்லை என்ற விகிதத்தில் பார்த்ததால், இந்திய மக்கள்தொகையில் சுமார் 0.2-1% அளவு எண்ணிகையிலான மக்களுக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

தாக்கங்கள்: பொது முடக்கநிலை தாக்கத்தால் இந்தியாவில் கோவிட் -19 இறப்புகளைத் தவிர்க்கப்பட்டன என்பதற்கு இந்த முயற்சி நிச்சயமாக சான்றாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும், தவிர்க்கப்பட்ட மரணங்கள் குறித்த எண்ணிக்கை, அரசு மேற்கோள் காட்டுவதை மிகச் சிறியது. எனவே, பொது முடக்கநிலை நீட்டிப்பதற்கு எந்த காரணியும் இல்லை என்றால், அதனால் பெற்ற பயன்கள் வேறு வகையில் ரத்து  செய்யப்படும் (உதாரணமாக, புலம் பெயர் தொழிலாளர்களின் மரணம், அவர்களில் ஏற்படும் தொற்று பரவல், கொரோனா பாதிப்பிலாத தீவிர நோயாளிகளின் மரணம்).

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை நிச்சயமற்ற நிலையில் தான் உள்ளன. குறிப்பாக, கோவிட் -19 பெருந்தொற்று தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை பதிவுசெய்யப்பட்டதை விட 2 அல்லது 3 அளவு பெரிதாக இருந்தால் எங்கள் மதிபீட்டிற்கு சிக்கலை ஏற்படுத்தலாம். இருப்பினும், இந்தியாவில் முறையாக பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளை விட  உண்மையான பாதிப்பு எண்ணிக்கை 20-30 அளவு அதிகமாக எடுத்துக் கொண்டாதால், எங்கள் மதிப்பீட்டில் கணிசமான மாற்றம் ஏற்பாடது.

இத்தகைய, தேசியளவிலான ஒருங்கிணைந்த தகவல்கள்  ஒட்டுமொத்த தடுப்பு நடவடிக்கை  குறித்த முழு பார்வையை வழங்கினாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்றுநோய் வெவ்வேறு விகிதங்களில் பரவி வருகிறது. இதனால், தடுப்பு நடவடிக்கைகளில் கிடைத்த அனுபவங்கள் உள்ளூர் மட்டங்களில் செயல்படுத்த வேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவில் கொரோனா பரவல் நடவடிக்கையை மேற்கொள்ள INDSCI-SIM மாதிரியை  பயன்படுத்தலாம்.

உண்மையில், யாருடைய மதிப்பீடுகள் சிறந்தது என்பது இங்கு கேள்வியாக இருக்க முடியாது. முக்கிய விஷயம் என்னவென்றால், மதிப்பீடுகள் எவ்வாறு செய்யப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய  விவரங்களை அரசாங்கம் நம்முடன் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த எளிய முயற்சிகளில் கூட, வெளிப்படைத் தன்மை இல்லமால் போனதை  ஏற்றுக்கொள்ள முடியாது.

 

 

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment