Advertisment

9வது கோள் எங்கே இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எப்படி அறிந்தனர்?

கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த கான்ஸ்டான்டின் பாடிஜின் மற்றும் மைக்கேல் இ. பிரவுன் ஆகியோர் தி ஆஸ்ர்டோனோமிக்கல் ஜேர்னல் இதழில் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் தூரத்தில் ஒரு பெரிய கோள் இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதற்கு ப்ளானட் 9 என்று பெயரிட்டுள்ளதாகவும் கூறினார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
How researchers found where to look for Planet Nine

 Aswathi Pacha

Advertisment

Planet Nine : சர்வதேச வானியல் ஒன்றியம் () International Astronomical Union) 2006ம் ஆண்டு ப்ளூட்டோவை ஒரு சிறு கிரகமாக அறிவித்த போது வானிலை ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ப்ளூட்டோவின் அளவு மற்றும் அதே அளவு கொண்ட மற்ற வானிலை கோள்களின் மண்டலத்திற்குள் வசிக்கும் தன்மை ஆகியவை அடிப்படையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. தற்போது இது போன்று ஐந்து சிறு கிரகங்கள் வானில் காணப்படுகின்றன. செரஸ், புளூட்டோ, எரிஸ், மகேமகே மற்றும் ஹௌமியா.

விஞ்ஞானிகள் புதிய கோள்களுக்கான தேடலைத் தொடர்ந்தனர் மற்றும் 2016 ஆம் ஆண்டில் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த கான்ஸ்டான்டின் பாடிஜின் மற்றும் மைக்கேல் இ. பிரவுன் ஆகியோர் தி ஆஸ்ர்டோனோமிக்கல் ஜேர்னல் இதழில் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் தூரத்தில் ஒரு பெரிய கோள் இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், அதற்கு ப்ளானட் 9 என்று பெயரிட்டுள்ளதாகவும் கூறினார்கள். இது பூமியை விட 10 மடங்கு எடை கொண்டதாக இருக்கலாம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

”ஆரம்பத்தில் இப்படி ஒரு கோள் இருப்பதற்கான சாத்தியங்கள் குறித்து எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனாலும் நாங்கள் அந்த கோளின் சுற்றுவட்டப் பாதை மற்றும் சூரிய குடும்பத்திற்கு வெளியே இருப்பதால் அதன் தன்மை என்ன என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்தோம். இறுதியாக அந்த கோள் அங்கே இருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்பினோம் என்று வானியல் பிரிவின் துணை பேராசிரியர் டாக்டர் பாடிஜின் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ”150 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை முழுமையாக தெரியவில்லை என்பதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்தது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த குழு தொடர்ந்து தங்களின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, 2019ம் ஆண்டு அதன் சுற்றுவட்டப்பாதை மற்றும் மற்ற வானியல் பொருட்கள் மீதான அதன் தாக்கம் குறித்த சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டனர்.

சூரிய மண்டலத்தில் நமக்குத் தெரிந்த மிக தொலைதூர பொருள்கள் சில ஈர்ப்பு விளைவுகளால் சிறிது இழுக்கப்படுகின்றன; நாம் சொல்லும் வரையில், நம்பத்தகுந்த ஒரே விளக்கம் ஒரு மாபெரும் கிரகம் அங்குள்ளது என்பது தான் என்று டாக்டர் ப்ரௌன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். அவர் புளூட்டோவை மறு வகைப்படுத்த உதவிய ஆராய்ச்சியாளர்களில் அவரும் ஒருவர். ‘How I Killed Pluto and Why It Had It Coming என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார்.

புதிய கணினி ஆய்வுகள், தற்போது அடையாளம் காணப்பட்டிருக்கும் இந்த கோள் பூமியைக் காட்டிலும் ஐந்து மடங்கு எடை கொண்டதாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது. 9வது கோள் (Planet 9) ஒரு வழக்கமான சூரிய மண்டலத்திற்கு மேலான சூப்பர்-எர்த்-ஐ நினைவூட்டுகிறது என்று பாடிஜின் தெரிவித்தார். பிளானட் ஒன்பது நமது விண்மீன் மண்டலத்தின் ஒரு பொதுவான கிரகத்தின் பண்புகளை அறிந்து கொள்ளும் ஒரு சாளரத்திற்கு மிகவும் நெருக்கமான இடத்தில் இருக்கும் கோளாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ப்ளானட் 9 ஒரு கருந்துளையா?

உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளார்கள் ப்ளானட் 9 குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு விதமான கோட்பாடுகளை கொண்டுள்ளனர். அதில் ஒரு கோட்பாடு இது ஒரு கருந்துளையாக இருக்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஆண்டு பிசிக்கல் ரெவ்யூ லெட்டரில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் டிரான்ஸ்-நெப்டுனியன் பொருட்களின் ஒழுங்கற்ற சுற்றுப்பாதைகளை ஏற்படுத்தும் தெரியாத பொருள் ஒரு முதன்மை கருந்துளையாக இருக்கலாம் என்று வாதிட்டது.

2018ம் ஆண்டு தி அஸ்ட்ரோனோமிக்கல் ஜேர்னல் ஒன்றில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில், ப்ளானட் 9 இருப்பதற்கான அதிக ஆதாரங்கள் வெளியிடப்பட்டது. பிளானட் நைனின் வலுவான ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்டதால், 2015 BP519 எனப்படும் டிரான்ஸ்-நெப்டுனியன் பொருள் அசாதாரணமான பாதையைக் கொண்டிருப்பதாக அது குறிப்பிட்டது.

நாங்கள் பிளானட் ஒன்பது இல்லாமல் ஒரு உருவகப்படுத்துதலை நடத்தியபோது, BP519 போன்ற பொருட்களை உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது. பிளானட் ஒன்பது உட்பட ஒரு வித்தியாசமான உருவகப்படுத்துதலை நாங்கள் இயக்கியபோது, BP519 போன்ற பொருட்களை உருவாக்குவது மிகவும் எளிதானது என்பதைக் கண்டறிந்தோம் என்று இந்த கட்டுரையின் மூத்த ஆசிரியர் ஜூலியட் பெக்கர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

இதில் புதிய கண்டுபிடிப்பு என்ன?

கடந்த மாதம், ப்ளானட் 9-ஐ கண்டுபிடிக்க புதிய வரைபடம் ஒன்று இருப்பதாக டாக்டர் ப்ரவுன் தெரிவித்தார். 9வது கோள் இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிட்ட ஐந்தரை ஆண்டுகளுக்கு பிறகு தேடலுக்கு உதவுவதில் மிக முக்கியமான பணியை நாங்கள் இறுதியாக முடித்துவிட்டோம். இந்த கோளை எங்கே பார்க்க வேண்டும் என்று இப்போது எங்களுக்கு தெரியும் என்று தன்னுடைய ட்வீட்டில் தெரிவித்தார்.

ArXiv இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் ப்ளானட் 9- 6.2 (+2.2/-1.3) பூமி நிறை கொண்டது என்று கூறுகிறது. ஆராய்ச்சியில் பிளானட் 9-ன் செமிமேஜர் அச்சு, சாய்வு மற்றும் பெரிஹெலியன் ஆகியவை உள்ளன.

தரவு நமக்கு பிளானட் ஒன்பது சுற்றுப்பாதை பாதையை மட்டுமே சொல்கிறது ஆனால் சுற்றுப்பாதை பாதையில் அது எங்கே இருக்கிறது என்று சொல்லவில்லை. இது சூரியனிடமிருந்து மிக தொலைவில் இருக்க வாய்ப்புள்ளது ஏன் என்றால் அது மிகவும் மெதுவாக பயணிக்கிறது. ஆனால் அங்கு தான் நீங்கள் ப்ளானட் 9-ஐ பார்க்க வேண்டுமென்றும் டாக்டர் ப்ரவுன் தன்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

ப்ளானட் 9 எப்படி உருவானது என்று கேள்வி எழுப்பிய போது, யுரேனஸ் மற்றும் நெப்டியூனின் சுற்றுப்புறங்களில் உருவானது மற்றும் இறுதியில் வியாழன் அல்லது சனியுடன் மிக நெருக்கமாக இருந்தது என்பது எங்கள் சிறந்த யூகம். பிறகு அது நம்முடைய சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டிருக்கும்.

குழு தங்கள் ஆய்வுகளைத் தொடர்கிறது மற்றும் தற்போது சிலியில் கட்டுமானத்தில் உள்ள வேரா சி.ரூபின் ஆய்வகம், பிளானட் ஒன்பது குறித்த ஆய்வுகளுக்கு மேலும் உதவும் என்று குறிப்பிடுகிறது. "இந்த ஆய்வகம் இரவுக்குப் பிறகு வானத்தை ஸ்கேன் செய்து இறுதியில் பிளானட் ஒன்பது உட்பட பல விஷயங்களை வெளிக்கொணரும் என்று நாங்கள் நாங்கள் நம்புகிறோம்" டாக்டர் பிரவுன் கூறினார்.

ப்ளானட் 9 இருப்பதை அனைவரும் ஒப்புக் கொண்டனரா?

ப்ளானட் 9 இருக்கிறது அல்லது இல்லை என்பதற்கான பல தரவுகள் 2016ம் ஆண்டில் இருந்து அதிகமாக இருக்கின்றன. உண்மையில் அது ஒரு கருந்துளையாக இருக்கலாம் என்று ஆய்வுகள் பல்வேறு முடிவுகளுக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு பிசிக்கல் ரெவ்யூ லெட்டர்ஸில் டிரான்ஸ்-நெப்டியூனியன் பொருள்களின் ஒழுங்கற்ற சுற்றுப்பாதைகளை ஏற்படுத்தும் தெரியாத பொருள் ஒரு முதன்மை கருந்துளையாக இருக்கலாம் என்று வாதிட்டது ஒரு கட்டுரை.

2018ம் ஆண்டில் தி அஸ்ட்ரோனோமிக்கல் ஜெர்னலில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆராய்ச்சிக் கட்டுரையில் , பிளானட் ஒன்பது இருப்பதற்கான புதிய ஆதாரங்களை மேற்கோள் காட்டியது. பிளானட் நைனின் வலுவான ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்டதால், 2015 BP519 எனப்படும் டிரான்ஸ்-நெப்டுனியன் பொருள் அசாதாரணமான பாதையைக் கொண்டிருப்பதாக அது குறிப்பிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Science
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment