Advertisment

மழைக் காலங்களில் தேசிய பூங்காக்களை மூடுவது புலிகளுக்கு எவ்வகையில் நன்மை அளிக்கிறது?

வதந்திகளுக்கு மாறாக, புலிகள் ஆண்டு முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. பெண் புலிகளுக்கு 21 நாட்களுக்கு ஒரு முறை ஈஸ்ட்ரஸ் ஏற்படுகிறது. புலிகுட்டிகள் இறந்த நிலையில் பிறப்பது மற்றும் புலிக் குட்டிகள் விரைவில் இறந்தாலும் கூட ஈஸ்ட்ரஸ் ஒரு மாதத்தில் மீண்டும் ஏற்படுகிறது.

author-image
WebDesk
New Update
How shutting parks during the rainy season helps tigers

 Jay Mazoomdaar 

Advertisment

shutting parks during the rainy season : உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் மற்றும் ராஜாஜி தேசிய பூங்காக்கள் இந்த ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக திறக்கப்படும் என்று அம்மாநில வனத்துறை அமைச்சர் ஹராக் சிங் ராவத் தெரிவித்துள்ளார். இதுவரை, ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் 4 முதல் 5 மாதங்களுக்கு சுற்றுலா இங்கு தடை செய்யப்பட்டிருக்கும். புலிகளின் இனப்பெருக்க காலத்தில், சுற்றுலா பயணிகளின் வருகை பெரும் பாதிப்பை உருவாக்கலாம் என்று பலரும் தங்களின் கருத்துகளை, இந்த அறிவிப்பிற்கு எதிராக வைத்துள்ளனர்.

இதுவரை ராஜாஜியில் ஜில்மில் பகுதியும், கார்பெட்டில் ஜ்ர்னா பகுதியும் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டிருக்கும். ஆனால் கார்பெட்டின் பிஜ்ரனி மண்டலம் ஜூன் 15ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். மற்ற கார்பெட் மற்றும் ராஜாஜி மண்டலங்களும் ஜூன் 15 முதல் நவம்பர் 15 வரை மூடப்பட்டே இருக்கும்.

காடுகளின் தரம், இட அமைவு மற்றும் காலநிலை ஆகியவற்றை பொறுத்து இந்த தேதிகளில் மாற்றம் இருக்கலாம். உதாரணத்திற்கு ஜ்ர்னாவிற்கு அருகில் உள்ள காடுகல் ஆண்டு முழுவதும் திறந்து இருக்கும். பிஜ்ரானி வடக்குப் பகுதிகளைப் போல பருவகால நீரோடைகளால் பாதிக்கப்படவில்லை என்று கார்பெட்டின் திகலா கூறுகிறார்.

ஒப்பிடுகையில், குறைவான மழைப்பொழிவு காரணமாக ராஜஸ்தானில் உள்ள ரந்தம்போர் தேசிய பூங்கா அக்டோபர் முதல் ஜூன் வரையிலான 9 மாதங்கள் திறந்த நிலையில் இருக்கும். அசாமின் கசிரங்கா பூங்கா, அதீத மழை காரணமாக மே முதல் அக்டோபர் மாதம் வரை பூட்டப்பட்ட நிலையில் இருக்கும்.

புலிகள் இனப்பெருக்கம் பாதிக்கப்படுமா?

வதந்திகளுக்கு மாறாக, புலிகள் ஆண்டு தோறும் இனப்பெருக்கம் செய்கின்றன. பெண் புலிகளுக்கு 21 நாட்களுக்கு ஒரு முறை ஈஸ்ட்ரஸ் ஏற்படுகிறது. புலிகுட்டிகள் இறந்த நிலையில் பிறப்பது மற்றும் புலிக் குட்டிகள் விரைவில் இறந்தாலும் கூட ஈஸ்ட்ரஸ் ஒரு மாதத்தில் மீண்டும் ஏற்படுகிறது.

இத்தகைய தயார்நிலை ஒவ்வொரு கற்பனை பருவகால கட்டுப்பாட்டையும் நிராகரிக்கிறது என்பது தெளிவாகிறது, ரஷயாவின் கிழக்கு பகுதியில் காணப்படும் கடும் குளிர் அமுர் புலியின் இனப்பெருக்க நடத்தையில் பருவகாலத்தின் ஒற்றுமையை கட்டாயப்படுத்துவதாக அறியப்பட்டிருந்தாலும் கூட இந்த தயார் நிலையில் மாற்றம் இல்லை.

இந்தியாவில், இனச்சேர்க்கைக்கு ஏதேனும் பருவகால சார்பு இருந்தால், அது இலையுதிர்-வசந்த காலத்தை நோக்கியதாக இருக்கும் என்று சான்றுகள் கூறுகின்றன. புலிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு மழைக்காலம் சரியான காலம் இல்லை.

கார்பெட் மற்றும் ராஜாஜியில் இருக்கும் யானைகள் போன்ற இதர உயிரினங்களும் இனப்பெருக்கத்திற்கு மழை காலத்தை தேர்வு செய்வதில்லை. ஆனாலும், யானைகளின் இனப்பெருக்கம் மழை பொழிவோடு தொடர்புடையது. மழை பொழியும் இடங்களில் ஆண்டு முழுவதும் யானைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தியாவில் நவம்பர்-ஜனவரி குளிர்கால மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான பிறப்புகள் காணப்படுகின்றன. இது மழைகாலங்களுக்கு முந்தைய மற்றும் ஆரம்ப மழைக்கால மாதங்களான மே - ஜூலை காலத்தில் இனச்சேர்க்கை அதிகரிப்பை குறிக்கிறது.

2009ம் ஆண்டு ராஜாஜி தேசிய பூங்காவில் உள்ள யானைகளின் இனப்பெருக்க நடத்தை பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வயது வந்த ஆண் யானைகளுக்கு மஸ்த் பிப்ரவரி முதல் ஜூலை வரை ஏற்படுகிறது. இந்த காலம் வறண்ட சூழ்நிலையே நிலவும். மே மாதத்திலிருந்து, பெரும்பாலும் வெப்பம் அதிகமாக இருக்கும் காலத்தில் உச்ச இனப்பெருக்கம் நடைபெறும்.

இருப்பினும் ஏன் புலிகள் காப்பகங்கள் மூடப்படுகிறது?

யானைகள் மற்றும் புலிகளை காட்டிலும், உண்மையில் மனிதர்கள் தான் இதில் அதிகம் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். வெப்ப மண்டலக் காடுகள், மழைக்காலங்களில் குறைந்தபட்சமாக அணுக கூடிய ஒன்றாக இருக்கிறது. பசுமையான நிலத்தடி வளர்ச்சியை தடுக்கும் இயக்கங்கள் மற்றும் அரிப்பள்ளங்கள் தடங்களை முற்றிலுமாக மறைக்கின்றன. இதனால் தான் வேட்டைக்காரர்கள் கூட மழைக்காலங்களை ஆஃப்-சீசனாக தேர்ந்தெடுத்தனர். விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அவர்கள் அனுமதி தந்த சாளரம் இதுவாகும்.

காலநிலை காரணமாக பூங்காக்களை மூடுவது என்பது உலக அளவில் உள்ளது. அமெரிக்காவின் முதல் தேசிய பூங்காவான யெல்லோஸ்டோன் பூங்காவும், உலகில் ஏனைய பனிப்பொழிவு பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களும் குளிர்காலத்தில் மூடப்படும். விலங்குகளை மன அழுத்தத்திலிருந்தும் காடுகளை நெருப்பிலிருந்தும் பாதுகாக்கவும் நாகர்ஹோலே மற்றும் பந்திப்பூர் போன்ற கர்நாடகாவில் இருக்கும் புலிகள் காப்பகங்கள் கடுமையான வறண்ட கோடை காலங்களில் மூடப்படுகிறது.

வடக்கில், மழை மாதங்கள் மிகவும் சவாலானவை. 2019 ஆம் ஆண்டில், பருவமழையின் போது ராம்நகர்-கார்பெட் சாலையின் குறுக்கே பாயும் பருவகால தங்கரி காட்டாறு ஒரு சுற்றுலா காரை அடித்துச் சென்றது. கார்பெட்டிற்குள் வாகன அணுகளும் ஜிர்னா, சுல்தான் மற்றும் தீலா ஆகிய மூன்ற பகுதிகளுக்கு மட்டும் தான் இருக்கும். மழைக்காலங்களில் கற்பாறைகளை பெயர்த்து செல்லும் காட்டாறுகள் பாலங்களையும் தடுப்பணைகளையும் தகர்த்துவிடுகிறது.

நடந்தும் யானைகள் மீது சென்றும் தான் ரோந்து பணிகளை மேற்கொள்கிறோம். மேலும் பாதுகாவலர்களுக்கு மழை காலங்களில் உணவு வழங்குகிறோம். பிஜ்ரனியில், பாறைகளை இழுத்து வராத இரண்டு காட்டாறுகளுக்கு மத்தியில் சாலை வசதியை மேம்படுத்துவது முடியும் என்றாலும், மீதமுள்ள பூங்காவை அணுக சாலை வலையமைப்பை வலுப்படுத்துவது ஒரு சவாலாக இருக்கும். ஆனால் பெரிய முதலீடு மற்றும் மெகா இயந்திரங்கள் மூலம் அனைத்தும் சாத்தியமாகும் ”என்று சமீபத்தில் கார்பெட்டில் பணியாற்றிய வன அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏன் முதலீடு செய்து சாலை அணுகலை மேம்படுத்த கூடாது?

நிலப்பரப்பு மிகவும் கடினமனாது தான் ஆனால் முடியாதது என்று இல்லை. நாகர்ஹோலே மற்றும் பந்திப்பூர் பகுதிகளில் முதலீடு அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் கட்டுமானத்தின் அளவு உத்தரகண்ட் காடுகளில் தேவைப்படுவதை ஒப்பிட முடியாது.

இங்கு நாங்கள் நிறைய மழைப் பொழிவை பெறுகின்றோம். நீர் வழிகள் குறுகலாக இருப்பதற்கு இதன் சாய்வும் ஒரு காரணம். மேலும் பாலங்கள் அதன் பணிகளை சிறப்பாக செய்கின்றன. கார்பெட்டில் இது போன்று பாலங்களை உருவாக்க பல நூறு மீட்டர் நிலம் தேவைப்படும். இது போன்ற கட்டுமானங்கள் புலிகள் காப்பகத்திற்குள் தேவையா என்று நாங்கள் முடிவு எடுக்க வேண்டியதாக உள்ளது என்று கர்நாடக வனத்துறையை சார்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தவிர, புலி இனப்பெருக்கம் மட்டும் கவலை இல்லை. பல இனங்கள் மழைக்காலங்களில் காட்டில் இனப்பெருக்கம் செய்கின்றன, மேலும் அவை ஒன்றாக சுற்றுச்சூழல் சமநிலையை அல்லது உணவுச் சங்கிலியை பராமரிக்கின்றன. தவிர, வனவிலங்குகள் சத்தம், ஒளி மற்றும் பிற மாசுபாடுகளிலிருந்து விடுபடுவதற்கு தகுதியானவை. அது முன்வைக்கும் தளவாட சவால்களைப் பொறுத்தவரை, மழைக்காலம் அந்த ஓய்வு அளிக்க மிகவும் வசதியான காலம்.

சுற்றுலா (ஜனவரி-மார்ச்) மற்றும் சுற்றுலா அல்லாத (செப்டம்பர்) மாதங்களில் சேகரிக்கப்பட்ட சிதறல்களில் ஒரு குறிப்பானை ஒப்பிட்டு, மத்தியப்பிரதேசத்தின் பந்தவ்கர் மற்றும் கன்ஹா புலிகள் காப்பகங்களில் புலிகளிக்கு அதிக அளவு மன அழுத்தம் சுற்றுலா வாகனங்களால் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

பூங்காக்களை திறப்பது அல்லது மூடுவது வேட்டையாடுவதை பாதிக்குமா?

மழைக்காலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு பூங்காக்களைத் திறப்பது புலியின் இனப்பெருக்க வாய்ப்பைத் தடுக்காது என்றாலும், அது இன்னும் தேசிய விலங்குகளை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும். முன்பு வேட்டைக்காரர்கள் இந்த காலத்தை உயிரினங்களின் உற்பத்திக்காக விட்டு வைத்திருந்தனர். ஆனால் இன்று அப்படி அல்ல, தற்போது வனகாவலர்கள் ரோந்துக்கு செல்வது மழைகாலங்களில் மிகவும் கடினமானது என்பதால் இந்த நேரத்தை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடுகின்றனர். அதனால்தான் ப்ரோஜெக்ட் டைகர் எப்போதும் மழைக்காலத்தில் மேம்பட்ட விழிப்புணர்வை வலியுறுத்துகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Monsoon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment