இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த நிலையில், ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் வி, நாட்டின் மருந்து கட்டுப்பாட்டாளரான இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தால் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று நிபுணர் குழு ஒன்று இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பரிந்துரைத்துள்ளது. எனவே சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகியவற்றிற்கு பிறகு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் பெறும் மூன்றாவது கொரோனா தடுப்பூசி இதுவாகும்.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி
மாஸ்கோவில் உள்ள கெமெலேயா தேசிய ஆராய்ச்சி தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசி மனிதர்களில் பொதுவான சளியை (அடினோ வைரஸ்) ஏற்படுத்தும் இரண்டு வெவ்வேறு வைரஸ்களைப் பயன்படுத்துகிறது. இந்த அடினோ வைரஸ்கள் பலவீனமடைந்துள்ளதால் அவற்றால் மனிதர்களில் செயல்பட முடியாது எனவே நோயை ஏற்படுத்த முடியாது. மேலும், அவை மாற்றியமைக்கப் பட்டுள்ளதால், தடுப்பூசி செலுத்தும்போது கொரோனா வைரஸ்க்கு ஸ்பைக் புரதத்தை உருவாக்குவதற்கான ஒரு குறியீட்டை வழங்கும். இதனால் உண்மையான வைரஸ் உடலைப் பாதிக்க முயற்சிக்கும்போது இந்த அடினோ வைரஸ்கள் ஆண்டிபாடிகளின் வடிவத்தில் நோயெதிர்ப்பு சக்தியை உடலுக்கு அளித்து, கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும்.
இரண்டு விதமான கடத்திகளை ஒவ்வொரு டோஸ்க்கும் ஸ்புட்னிக் தடுப்பூசி பயன்படுத்துகிறது. இது இரண்டு டோஸ்களுக்கும் ஒரே கடத்தியை பயன்படுத்தி வரும் தடுப்பூசிகளை விட, நீண்ட காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் கூறுகிறது. இரண்டு டோஸ்களுக்கும் இடையே 21 நாட்கள் இடைவெளி கொடுக்கப்பட வேண்டும்.
ஸ்புட்னிக் வி திரவ வடிவத்தில் -18 டிகிரி செல்சியஸ்ல் சேமிக்கப்பட வேண்டும். இருப்பினும், உலர்ந்த வடிவத்தில் கூடுதல் குளிர் உள்கட்டமைப்பு வசதியின்றி வழக்கமான குளிர்சாதன பெட்டியில் 2-8 டிகிரி செல்சியஸ் இல் சேமிக்க முடியும். மொத்தம் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 55க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்புட்னிக் வி பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என ஆர்.டி.ஐ.எஃப் தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி ஒரு டோஸ்க்கு 10 டாலர்க்கும் குறைவாக விலை நிர்ணயம் செய்ய பரிந்துரைத்துள்ளது.
இந்திய நிறுவனங்கள்
ஹைத்ராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் இந்த தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அரசாங்கத்தின் ஒப்புதலைக் கோரியது. நாட்டில் மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்காக ஆர்.டி.ஐ.எஃப் செப்டம்பர் 2020ல் டாக்டர் ரெட்டியுடன் கூட்டுச் சேர்ந்தது. கடந்த திங்களன்று இந்தியாவின் மருந்து கட்டுபாட்டு ஆணையம் அவசர கால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான ஸ்புட்னிக் வி விண்ணப்பத்தை எடுத்துக்கொண்டு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவின் மருந்து கட்டுபாட்டு ஆணையம் அனுமதிக்கு முன்பாக தடுப்பூசி மருந்து தயாரிப்பாளர்களிடமிருந்து கூடுதல் தரவுகளை கோரியது.
ஸ்புட்னிக் விக்காக மேலும் ஐந்து இந்திய நிறுவனங்கள் ஆர்.டி.ஐ.எஃப் உடன் கூட்டு சேர்ந்துள்ளன. அவை கிளாண்ட் பார்மா, ஹெட்டெரோ பயோபார்மா, விர்ச்சோ பயொடெக், பனசியா பயோடெக் மற்றும் ஸ்டெலிஸ் பயோபார்மா, பெங்க்ளூருவை தலைமையிடமாக கொண்ட ஸ்ட்ரைட்ஸ் பார்மா சயின்ஸின் பயோஃபார்மாசூட்டிகல் பிரிவு. இவர்கள் ஆண்டுக்கு 600 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசியை உருவாக்கும் அளவிற்கு இந்தியாவின் திறனை மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசியின் செயல்திறன்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி வெளிப்படைத் தன்மை மற்றும் அவசரகால பயன்பாட்டிற்கு எதிராக விஞ்ஞான சமூகத்திடமிருந்து விமர்சனத்திற்கு உள்ளானது. இருப்பினும் அப்போது ரஷ்யாவில் நடத்தப்பட்ட 3ஆம் கட்ட சோதனைகள் இது 91.6% செயல்திறனைக் கொண்டுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளதாக தி லான்செட்டில் வெளியிடப்பட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்பின் இந்தியாவில் டாக்டர் ரெட்டி நிறுவனம் இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டு ஒப்புதலுக்கு விண்ணப்பித்தது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் உருவாக்க வளர்ச்சி அசாதாரண அவசரம் மற்றும் வெளிப்படைத்தனமை இல்லாததால் விமர்ச்சிக்கப்பட்டது. ஆனால் இதன் சோதனை முடிவுகள் தெளிவாக உள்ளது மற்றும் தடுப்பூசியின் விஞ்ஞானக் கொள்கை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் போராசிரியர் இய்ன் ஜோன்ஸ் மற்றும் இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் பேராசிரியர் பாலி ராய் (இவர் இந்த தடுப்பூசி பற்றிய ஆய்வில் ஈடுபடவில்லை), இருவரும் தி லான்செட்டில் எழுதியிருந்தனர். எனவே இந்தியாவில் கோவிட்-19 இன் தாக்கத்தை குறைப்பதற்கான போராட்டத்தில் மற்றொரு தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி இப்போது சேரலாம்.
தன்னார்வ சோதனை பங்கேற்பாளர்களுக்கு முதல் டோஸ்(rAd26-) வழங்கப்பட்டடு பின்னர் 21 நாட்களுக்குப் பிறகு ஒரு பூஸ்டர் டோஸ்(rAd 5-S) வழங்கப்பட்டது. வேறுபட்ட அடினோவைரஸ் கடத்திகளைப் பயன்படுத்துவது மிகவும் சக்திவாய்ந்த நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரே கடத்தியை இரண்டு முறை பயன்படுத்துவதோடு ஒப்பிடுகையில் இது நல்ல பலனைத் தருகிறது. ஏனெனில் இது முதலில் வழங்கப்பட்ட டோஸ்க்கு நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்ப்பை உருவாக்குவதால் நமக்கு அபாயத்தை குறைக்கிறது.
மேலும், ஆய்வில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியால் ஏற்படும் வலுவான பாதிப்புகள் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil