Advertisment

FASTag என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன? அதை எப்படி பெறுவது?.....

FASTag For Vehicles: டிசம்பர் 1ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர், டோல்கேட்களில் FASTag உதவியுடன் டோல்கேட் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FASTag, FASTag sticker, டோல்கேட், வாகனங்கள், டோல் கட்டணம்

FASTag, FASTag sticker, டோல்கேட், வாகனங்கள், டோல் கட்டணம்

FASTag for Electronic Toll Collection: டிசம்பர் 1ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர், டோல்கேட்களில் FASTag உதவியுடன் டோல்கேட் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாம், FASTag அட்டையை, நமது வாகனங்களின் முன்பக்கத்தில் ஒட்டிவைக்க வேண்டும். தற்போது விற்பனையாகி வரும் புது கார்களில், இந்த FASTag அட்டை ஒட்டப்பட்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 560 டோல்கேட்களும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (National Highways Authority of India (NHAI)) கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட உள்ளன. இந்த டோல்கேட்களில் இனி மனித உழைப்புக்கு இடமில்லை. டோல்கேட்டை கடக்கும் வாகனங்கள், டோல் கட்டணத்தை செலுத்த இனி நிற்க வேண்டியதில்லை. டோல்கேட்டை வாகனங்கள் கடக்கும்போதே, ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில், FASTag அட்டையின் மூலம் பணம் செலுத்தப்பட்டு, நமது பயணம் விரைவாக , அதேசமயம் எளிதாக அமைய வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

FASTag வேலை செய்யும் விதம்

FASTag அட்டை, ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், FASTag ப்ரீபெய்டு அல்லது இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் இருந்து டோல் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதன்காரணமாக, நாம் டோல்கேட்களில் வாகனங்களை நிறுத்தவேண்டிய அவசியம் இனி இல்லை. மெட்ரோ ஸ்மார்ட் கார்டு போன்று இந்த FASTag அட்டை செயல்பட உள்ளது.

ஒரு வழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் அகிற்ச்சி..

FASTag அட்டையை ப்ரீபெய்ட் வாலட் ஆகவோ அல்லது டெபிட்/ கிரெடிட் கார்டு கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். FASTag அட்டையை, நமது வங்கிக்கணக்கில் இணைத்துக்கொண்டால், நாம் ரீசார்ஜ் செய்யத்தேவையில்லை. அதற்குப்பதிலாக, நாம் ஒவ்வொரு முறையும் டோல்கேட்டை கடக்கும்போதும், நமது வங்கி கணக்கில் இருந்து டோல் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு விடும்.

FASTag அட்டை, 5 ஆண்டுகள் காலம் வேலிடிட்டி உடையது. தேவையானபோது ரீசார்ஜ் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

FASTagயை எப்படி வாங்குவது?

அமேசான், பேடிஎம் உள்ளிட்ட இ காமர்ஸ் போர்டல்கள், 22 வங்கிகளின் மூலம் அமைக்கப்பட்டுள்ள 27 ஆயிரம் பாயின்ட் ஆப் சேல் மையங்கள், டோல் பிளாசாக்கள், ஆர்டிஓ அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்கள், போக்குவரத்து அலுவலகங்கள், குறிப்பிட்ட வங்கிகளின் கிளைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவைகளில், FASTag அட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

My FASTag app என்ற ஸ்மார்ட்போன் செயலியின் மூலமும் FASTag அட்டையை பெறலாம்.

NHAI மூலமாக விற்பனை செய்யப்படும் FASTag, ஒருமுறை கட்டணமாக ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் திரும்பபெறத்தக்க வகையிலான டெபாசிட் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.

NHAI பூத்களின் மூலம் விற்பனை செய்யப்படும் FASTag அட்டைகளின் பயன்பாட்டின் போது 2.5 சதவீத கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

FASTag பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?

NHAI பூத்களில் FASTag பெறுவதென்றால், ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் வாகனத்தின் பதிவுச்சான்றிதழ் நகல் போதுமானது.

வங்கி கிளைகளில் FASTag வாங்கவேண்டுமென்றால், கூடுதலாக சில ஆவணங்களை இணைக்க வேண்டும்.

வாகனங்களில் FASTag அட்டையை பொறுத்தாமல், FASTag என்று வரையறுக்கப்பட்ட பாதையில் சென்றால் இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

டோல்கேட்டுக்கு அருகில் வசிப்பவர்களும் டோல்கேட்டை கடக்க ஏதாவது சலுகைகள் உள்ளதா?

டோல்கேட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருப்பவர்கள், தங்களது இருப்பிட சான்றிதழை பாயின்ட் ஆப் சேல் மையத்தில் வழங்கி அதை சரிபார்க்கப்பட்டபின், FASTag கட்டணத்தில் இருந்து சில சலுகைகளை பெறலாம் என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FASTag செயல்பாடு எவ்வாறு உள்ளது?

வங்கியின் மூலம் பெறப்படும் FASTag அட்டைகளை, அந்த குறிப்பிட்ட வங்கிகளின் மூலமாகவே ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். NHAI உள்ளிட்ட மற்ற இடங்களில் பெறப்படும் FASTag அட்டைகளை, நாம் எங்குவேண்டும் என்றாலும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

டோல்கேட்டை வாகனம் கடக்கும்போது, வாகனத்தின் உரிமையாளரின் மொபைல் எண்ணிற்கு டோல் கட்டணம் பிடித்தம் செய்ததற்கான எஸ்எம்எஸ் வரவேண்டும். எஸ்எம்எஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது FASTag குறித்த ஏதாவது பிரச்னைகளுக்கு 1033 என்ற கட்டணமில்லா உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது. FASTag மொபைல் செயலியில், கஸ்டமர் கேர் லிங்கும் உள்ளது.

FASTag ஐடியா எவ்வாறு தோன்றியது?

டிமானிடைசேஷன் நிகழ்விற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா என்ற செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம், வாகனங்கள் டோல்கேட்டில் நிற்காமல், டிஜிட்டல் முறையில் டோல் கட்டணத்தை செலுத்தும் வழிமுறையை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, இந்த FASTag செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

FASTag அட்டையின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 8 ஆயிரமாக இருந்த நிலையில், நவம்பர் மாத நிலவரப்படி 35 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நவம்பர் 26ம் தேதி நிலவரப்படி இதுவரை 1.35 ,லட்சம் FASTag அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஜூலை மாதத்தில் 8.8 லட்சமாக இருந்த தினசரி பணபரிவர்த்தனை, நவம்பர் மாதத்தில் 11.2 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுவரை 70 லட்சம் FASTag அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த வங்கிகளில் FASTag வாங்கலாம்?

ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ, ஐடிஎப்சி, ஹெச்டிஎப்சி, கேவிபி, இக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க், கோடக் மகிந்திரா, சிண்டிகேட் பேங்க், பெடரல் பேங்க், சவுத் இந்தியன் பேங்க், சரஸ்வத் பேங்க், பிஎன்பி, பினோ பேமெண்ட்ஸ், சியூபி, பேங்க் ஆப் பரோடா, இந்துஸ்இண்ட் பேங்க், யெஸ் பேங்க், யூனியன் பேங்க், நாக்பூர் நகரிக் சகாரி பேங்க், ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் உள்ளிட்டவைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது.

Hdfc Minister Nitin Gadkari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment