Advertisment

ஸ்மார்ட்போன் திரைகளில் இருந்து கொரோனா வைரஸை கண்டறியும் புதிய முறை

ஸ்மார்ட்போன்களின் திரைகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைப் பயன்படுத்தி கொரோனாவை கண்டறியும் புதிய முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
smartphone coronavirus

ஸ்மார்ட்போன்களின் திரைகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளைப் பயன்படுத்தி கொரோனாவை கண்டறியும் புதிய முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Advertisment

வழக்கமான பி.சி.ஆர் சோதனையுடன் ஒப்பிடும்போது, ​​தொலைபேசி திரை சோதனை (PoST) முறை உடலில் கருவிகளை செலுத்தாமல், குறைந்த செலவில் துல்லியமான கணிப்பதாக eLife என்ற இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களை ஏன் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்?

பொதுவாக மக்கள் இருமல், தும்மல் அல்லது பேசும்போது வெளியேறும் நீர்த்துளிகள் சுற்றியுள்ள மேற்பரப்பில் படுகிறது . SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் நீர்த்துளிகள் இந்த வைரஸைக் கொண்டு செல்லும். முந்தைய ஆய்வுகள் SARS-CoV-2 ஐ தொலைபேசிகள் உட்பட பல்வேறு வகையான மேற்பரப்புகளிலிருந்து கண்டறிய முடியும் என்பதைக் காட்டுகின்றன.

ஸ்மார்ட்போன் தனிப்பட்ட பொருள். மக்கள் அதை தொடர்ந்து பயன்படுத்தும்போது அவை வாய் அருகில் இருப்பதால் அவற்றின் திரைகள் அசுத்தமான மேற்பரப்பாக மாறும். ஆகையால் கொரோனா தொற்று பாதித்த நபர்களிடம் இருந்து aerosols, உமிழ்நீரின் துளிகள் அல்லது சுவாசக் குழாய் சுரப்புகள் தொலைபேசியின் திரையில் படுவதன் மூலம் இதிலிருந்து மாதிரிகளை எடுத்து ஆர்டிபிசிஆர் மூலம் தொற்று இருப்பதை கண்டறியலாம்.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த டாக்டர் ரோட்ரிகோ யங் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது- UCL குழு டாக்டர் யங் தலைமையிலான சிலி ஆரம்ப நோயறிதல் பயோடெக் நிறுவனத்தில் இந்த ஆய்வை மேற்கொண்டது.

ஆய்வு எப்படி நடத்தப்பட்டது

PoST என்பது தொலைபேசி திரையில் இருந்து nasopharyngeal மாதிரியைப் பயன்படுத்துவது போன்ற வழக்கமான ஸ்வாப் செய்து சேகரிப்பதை போன்றது. ஆனால் அவற்றை உப்பு நீர் கரைசலில் சேர்க்க வேண்டும். பின்னர் அந்த மாதிரிகளை வழக்கமான பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என டாக்டர் யங் கூறியுள்ளார்.

PoST மற்றும் வழக்கமான பி.சி.ஆர் சோதனைக்கு 540 பேர் உட்படுத்தப்பட்டனர். இரண்டு சோதனைகளும் வெவ்வேறு ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டன.

எவ்வளவு துல்லியமானது?

போன் ஸ்கிரீன் டெஸ்டிங் (PoST) என அழைக்கப்படும் புது வழிமுறையை கொண்டு கொரோனாவைரஸ் தொற்றை 81.3% முதல் 100 சதவீதம் வரை சரியாக கண்டறிய முடிந்தது.

ஆய்வில் பங்கேற்ற 540 நபர்களில் 51 பேர் நாசி/தொண்டையிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆர்டிபிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த மாதிரிகளில் 15 பேர் குறைந்த ct value(20க்கும் கீழ்) கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்கும் பாதிப்பு உறுதியானது. அதிக வைரஸ் பாதித்த நபர்களை சரியாக அடையாளம் காணும் திறன் PoST சோதனைக்கு உள்ளது. 29 பேரின் மாதிரிகள் மீடியம் ct value வை கொண்டிருந்தன. PoST உணர்திறன் 89.7% ஆகும். ஒரு நபருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதா என்பதை தீர்மானிப்பதற்கான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளில் ஒன்று ‘சி.டி மதிப்பு’.

கொரோனா பாதிப்பை இல்லை என்பதை கண்டறிவதில் PoST ன் ஒட்டுமொத்த திறன் 98.8% என கண்டறியப்பட்டது. ஆய்வில் 6 மாதிரிகளில் PoST சோதனையில் பாதிப்பு இல்லை என முடிவு வந்தது. ஆனால் மருத்துவ ஸ்வாப் பரிசோதனைகளில் பாதிப்பு உறுதியானது. இவது தவறான முடிவு என்று கூறப்பட்டாலும் இந்த 6 பேரில் இருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது.

ஏன் முக்கியமானது?

வழக்கமான பிசிஆர் சோதனையை விட இந்த சோதனைக்கான செலவு குறைவு தான். குறைந்த விலை மட்டுமின்றி சோதனையில் தற்போது இருக்கும் அசவுகரியத்தை தவிர்க்க இந்த சோதனை வழி செய்கிறது. இந்த சோதனையில் ஒரே நிமிடத்தில் மாதிரியை சேகரிக்க முடியும்.. இந்த ஆய்வு முடிவுகள் இ-லைப் எனும் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கொரோனா தொற்று பாதித்த பலருக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. இதனால் அவர்களை அறியாமல் வைரஸ்களை பரப்புகிறார்கள். அறிகுறிகள் இல்லாத நபர்கள் அவ்வபோது பரிசோதனை செய்தால் தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என டாக்டர் யங் இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்தார்.

டாக்டர் யங்கின் Diagnosis Biotech ஒரு இயந்திரத்தை உருவாக்கி வருகிறது. UCL இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஆராய்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் இந்த இயந்திரத்தில் PoST மாதிரிக்கு ஒரு தொலைபேசியை எடுத்து, தொடர்புகளை குறைக்க எஸ்எம்எஸ் வழியாக நேரடியாக முடிவுகளை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment