Advertisment

லடாக்கின் இன்றைய நிலைமை: லே, கார்கில் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன?

இந்த இரண்டு மாவட்டங்களில் இருந்தும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் முன்பு தேர்வு செய்யப்பட்டனர். 2019ம் ஆண்டு சிறப்பு அங்கீகாரம் நீக்கப்பட்ட பிறகு ஒரே ஒரு மக்கள் பிரதிநிதி மட்டும் தான்

author-image
WebDesk
New Update
Leh, Ladakh’s current status

 Nirupama Subramanian

Advertisment

Ladakh’s current status : 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படும் போது லடாக் அதனை ஆதரித்தது. அதன் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங்க் செரிங் நம்க்யால் (Jamyang Tsering Namgyal), மக்களவையில், மக்களின் உணர்வுகளை பிரதமர் உணர்ந்து கொண்டார். அந்த பிராந்தியத்திற்கான மரியாதையை வழங்கியுள்ளார். அவர் அரசியல் அபிலாஷைகள், வளர்ச்சி மனப்பான்மை மற்றும் லடாக் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களின் பங்களிப்பை அங்கீகரித்துள்ளார்” என்று கூறினார்.

லடாக்கின் கவலைகள் குறித்து அந்த அறிக்கை வெளியான போது, லே மற்றும் கார்கில் மாவட்டங்களில் வெவ்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெவ்வேறு காலங்களில் பரிணமித்து முன்னேறி வந்துள்ளன. ஆனால் அரசாங்கம் இப்போது ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைமைத்துவத்தை நோக்கிய அதே நேரத்தில் இந்த கோரிக்கைகள் மீதும் கவனம் செலுத்துவது போல் உள்ளது.

லடாக்கில் இருந்து எழுப்பப்பட்ட கோரிக்கைகள் மீது, உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷான் ரெட்டி தலைமையிலான கமிட்டி நடவடிக்கைகள் எடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் வெளிப்பட்டன. அத்தகைய குழுவை உருவாக்குவது ஜனவரி மாதத்தில் மீண்டும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது.

புது வகையான தாக்குதல்; ஜம்மு விமானப்படை தளத்தில் வீசப்பட்ட 2 வெடிகுண்டுகள்

லே, கார்கில் - ஒரே மாதிரியாக இல்லை

லடாக்கின் இரண்டு மாவட்டங்களில், ஆகஸ்ட் 2019 மாற்றங்களை உடனடியாக கார்கில் மக்கள் எதிர்த்தனர், ஷியா மக்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் அரசியல் தலைவர்கள் பலரும். கார்கில் ஜம்மு காஷ்மீருடன் இணைந்திருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். மேலும் கார்கில் மக்களின் நிலம் மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகளை பாதுகாக்க சிறப்பு அங்கீகாரம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

லேவின் எதிர்ப்பு சற்று தாமதமாக வந்தது. லேவில் வாழும் புத்த மதத்தினரின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வெகுநாட்களாக வைக்கப்பட்ட கோரிக்கை அது. லடாக் இது ஜம்மு காஷ்மீர் என்ற பெரிய மாநிலத்தின் கீழ் ஓரங்கட்டப்பட்டதாக நம்பியது. சட்டமன்ற உரிமைகளை முழுமையாக இழந்ததை எதிர்த்து அவர்கள் அப்போது வாதிடவில்லை. இந்த இரண்டு மாவட்டங்களில் இருந்தும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் முன்பு தேர்வு செய்யப்பட்டனர். 2019ம் ஆண்டு சிறப்பு அங்கீகாரம் நீக்கப்பட்ட பிறகு ஒரே ஒரு மக்கள் பிரதிநிதி மட்டும் தான் உருவாக்கப்பட்டார். அது நாடாளுமன்ற உறுப்பினர். அனைத்து அதிகாரங்களும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வந்தடைந்தன. ஜம்மு காஷ்மீர் போல் அல்லாமல், சட்டமன்றம் அற்ற யூனியன் பிரதேசமாக லடாக் மாற்றப்பட்டது. நிலத்தை அந்நியப்படுத்துவது, அடையாள இழப்பு, கலாச்சாரம், மொழி இழப்பு போன்ற காரணங்களுக்காக தற்போது இரு மாவட்ட மக்களும் அஞ்சுகின்றனர்.

ஹில் டெவலப்மென்ட் கவுன்சில்கள் (Hill Development Councils)

லடாக் மற்றும் கார்கில் தனித்தனி தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்களைக் கொண்டுள்ளன, அவை லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் சட்டம், 1997 இன் ( Ladakh Autonomous Hill Development Councils Act, 1997) கீழ் அமைக்கப்பட்டன. இந்த தன்னாட்சி கவுன்சில்களுக்கு சட்டமன்ற அதிகாரங்கள் இல்லை. இவர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த கவுன்சில்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை ஒதுக்கீடு செய்தல், பயன்படுத்துதல், பார்க்கிங் கட்டணம், கடைகள் மீதான வரி போன்ற சில உள்ளூர் வரிகளை வசூலிக்கும் அதிகாரங்கள் அவற்றுக்கு உண்டு. ஆனால் தற்போது உண்மையான அதிகாரங்கள் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இது முந்தைய மாநில அரசாங்கத்தை விட தொலைதூரமாக உணரப்படுகிறது.

கடந்த வருடம், இந்த தன்னாட்சி கவுன்சிலின் ஐந்து ஆண்டு பணிக்காலம் நிறைவுற்றது. தேர்தலுக்காக திட்டமிடப்பட்டது. ஆறாவது அட்டவணைக்கான மக்கள் இயக்கம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஒரு குழு, அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து சக்திவாய்ந்த லடாக் உள்ளிட்ட மத அமைப்புகளின் குடையாக செயல்படும், லேவில் உள்ள லடாக் புத்த அமைப்பு, இந்திய அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையின் படி சுயஆட்சி கவுன்சில்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அசாமில் போடோலேண்டில் உள்ள பிராந்திய கவுன்சில் போல் இந்த கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆறாவது அட்டவணை என்பது அரசியலமைப்பின் 224 (அ) பிரிவு, அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுராவில் தன்னாட்சி பழங்குடிப் பகுதிகளை உருவாக்குவதற்கானது. இந்த ஹில் கவுன்சில்களில் சட்டமன்ற அதிகாரங்கள் உள்ளன.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் : இறுக்கம் தளர்ந்திருக்கலாம் ஆனால் அரசியல்சார் தீர்வுகளுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்

பாஜக உட்பட லேவில் உள்ள அனைத்து கட்சிகளும் லடாக் சுயாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் - லே தேர்தல்களை புறக்கணித்தன. அரசியல் சாசன அட்டவணை 6-ன் கீழ் பாதுகாப்புகள் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உறுதி அளிக்கப்பட்ட பிறகு இவர்கள் புறக்கணிப்பை வாபஸ் வாங்கினார்கள். தேர்தல் நடைபெற்று அதில் பாஜக வெற்றி பெற்றது. 2015ம் ஆண்டு தேர்தலில் பெற்ற இடங்களைக் காட்டிலும் ஒரு சில இடங்களே கூடுதலாக பெற்றது குறிப்பிடத்தக்கது.

LAHDC- கார்கில் தேர்தல்கள் 2023 வரை இல்லை. குறிப்பிடத்தக்க வகையில், கார்கில் அரசியல் தலைமை, கார்கில் ஜனநாயகக் கூட்டணியாகக் குழுவாக உள்ளது - இதில் தேசிய மாநாட்டின் உள்ளூர் பிரிவுகளின் பிரதிநிதிகள், பி.டி.பி, காங்கிரஸ் மற்றும் இரண்டு செல்வாக்குமிக்க ஷியா செமினரீஸ், இஸ்லாமியா பள்ளி கார்கில் மற்றும் இமாம் கோமெய்னி மெமோரியல் டிரஸ்ட் - ஆறாவது அட்டவணைக்கான கோரிக்கையில் சேரவில்லை.

Ladakh’s current status - வளர்ந்து வரும் கோரிக்கைகள்

ஆனால் ஆறாவது அட்டவணைப் பாதுகாப்பிற்கான லேவின் கோரிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், பாஜகவில் முன்பு இருந்த முன்னாள் எம்.பி. துப்ஸ்டன் செவாங் மற்றும் முன்னாள் ஜே & கே மந்திரி செரிங் டோர்ஜய் லாப்ரூக் உள்ளிட்ட லே தலைவர்கள் தங்களின் கோரிக்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

ஜூன் 24 அன்று, ஜம்மு காஷ்மீரின் தூதுக்குழு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, லே தலைவர்கள் திக்ஸி மடத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இதற்கிடையில், ஜூலை 1 ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்திய கே.டி.ஏ தூதுக்குழு லடாக்கிற்கு முழு மாநில அந்தஸ்த்து கோரியதுடன், அரசியலமைப்பின் 35 மற்றும் 370 வது பிரிவுகளுடன் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கவும் கோரியது. தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய LAHDC- கார்கிலின் தலைவர் அஸ்கர் அலி கர்பலை, மொழி, கலாச்சாரம், நிலம் மற்றும் வேலைகளுக்கான பாதுகாப்புகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார். மேலும் கார்கிலுக்கும், பாக்கிஸ்தானின் கில்ஜித் - பால்திஸ்தானில் உள்ள ஸ்கார்துக்கும் இடையே பாதை வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையையும் முன்வைத்தார்.

இரண்டு லடாக் மாவட்டங்களின் அரசியல் தலைமையை உள்துறை அமைச்சகம் எவ்வாறு தனித்தனியாகக் கையாளுகிறது என்று லேவில் சில குழப்பங்கள் எழுந்துள்ளன. ஆனால் இரு மாவட்டங்களிலிருந்தும் திட்டமிட்ட பிரதிநிதித்துவத்துடன் கூடிய குழு அமைக்கப்பட்டால், அது லே மற்றும் கார்கிலிலிருந்து வரும் தலைவர்களுக்கு ஒரு பொதுவான பேச்சுவார்த்தை முன்னணியில் செயல்பட உதவும் என்று இரு தரப்பு தலைவர்களும் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment