Advertisment

அமெரிக்காவின் நெருக்கத்தை இந்தியா ஏன் சீனாவுக்கு எதிராக பயன்படுத்த முடியாது?

அனைவருக்குமான ஒரு பொதுவான சவாலாக   சீனா உள்ளது என்பதை உலக நாடுகள் அங்கீகரித்தாலும், அதற்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க இங்கு யாருக்கும்  வேட்கை இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமெரிக்காவின் நெருக்கத்தை இந்தியா ஏன் சீனாவுக்கு எதிராக பயன்படுத்த முடியாது?

சீனாவுடனான எல்லை நிலைப்பாடு தொடர்பாக இந்தியா தனது அனைத்து மூலோபாய விருப்பங்களையும் மறுபரிசீலனை செய்வது  முக்கியமானதாக உள்ளது . உலகெங்கிலும் வளர்ந்து வரும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடை, இந்தியா அதன் நன்மைக்காக பயன்படுத்த முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதற்கான தருணம் நல்ல முறையில் தோன்றுவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பங்களிப்பு ஆசிரியர் பிரதாப் பானு மேத்தா தனது சமீபத்திய கட்டுரையில் எழுதியிருந்தார். அவர் தனது கட்டுரையில், "முன்னோடியில்லாத வகையில்  ஜி ஜின்பிங் தலைமையில் சீன மக்கள் குடியரசு உலகளவில் அந்நியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Advertisment

இருப்பினும், இந்த சீனா மீது உண்மையான அழுத்தத்தை செலுத்துவதற்கான ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கையாக மொழிபெயர்க்க முடியுமா? ” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.

அமெரிக்காவுடனான தனது உறவை இந்தியா மேலும்  ஆழமாக்கும் என்று பல வல்லுநர்கள் கருத்து தெர்வித்து வருகின்றனர். உண்மையில், உலக அரசியலில் இந்தியாவின் விருப்பங்கள் மிகவும் குறைவாக இருக்கலாம் என்று மேத்தா சுட்டிக்காட்டுகிறார்.

அனைவருக்குமான ஒரு பொதுவான சவாலாக   சீனா உள்ளது என்பதை உலக நாடுகள் அங்கீகரித்தாலும், அதற்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க இங்கு யாருக்கும்  வேட்கை இல்லை . உலக அரசியல் விவாகாரங்களில் இது மிகவும் வித்தியாசமான தருணம் என்று பிரதாப் பானு மேத்தா விவரித்தார்.

சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி  திட்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள்."பல நாடுகள் தங்கள் கடன் சுமைகளை நிறவேற்ற போராடி வருகின்றன. இருப்பினும், இதுபோன்ற நாடுகளை சீன நிதியத்தை சாரமாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள சர்வதேச சமூகம் முன்வருவதில்லை,”என்று மேத்தா எழுதினார்.

சரி,ஏன் இந்த நிலை?  

'சர்வதேச உறவுகள்' ஒரு நாட்டின் வளர்ச்சி முன்னுதாரணத்தின் சூழலில் உருவாகின்றன" என்று மேத்தா கூறுகிறார். உதாரணமாக, அமெரிக்க-சீனா உறவை எடுத்துக் கொள்ளுங்கள். சீன-சோவியத் பிளவுகளை உருவாக்குவதற்கான மூலோபாய முயற்சியில் அமெரிக்கா - சீனா உறவுகள் உருவாகியிருந்தாலும், பல ஆண்டுகளாக  அரசியல் பொருளாதாரத்தின் தர்க்கத்தால் தான் இந்த உறவு வலுப்படுத்தப்பட்டது. இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவால்  அமெரிக்காவில் உள்ள பெரிய வணிகங்கள் பெருமளவில் பயனளித்தது.  இருப்பினும், இத்தகைய பொருளாதாரம் சார்ந்த நட்புறவுக்கான அரசியல் நியாயத்தன்மை சமீபத்திய ஆண்டுகளில் குறைந்து வருகிறது.

 

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

உற்பத்தி வேலைகளை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வருவோம், அமெரிக்காவை மீண்டும் மேன்மை மிகு  நாடாக மாற்றுவோம் என்ற அமெரிக்காவின் கோஷத்தின் மத்தியின் தற்சார்பு இந்தியா பொருந்தி போகுமா? என்ற பெரிய கேள்வி இந்தியாவின் முன் உள்ளது.  இந்தியாவும் சீனாவும் சர்ச்சைக்குரிய நிலப்பரப்பு தொடர்பாக யாருக்கும் தீவிர அக்கறை இல்லாதாதால் இந்தியா-சீனா  எல்லை மோதலுக்கு சர்வதேச சமூகத்தின் முயற்சிகள் மந்தமான நிலையில் தான் இருக்கும்.

"சீனா, பாகிஸ்தான்  தொடர்பான எல்லை மோதலை இந்தியா பெரும்பாலும் சொந்தமாக நிர்வகிக்க வேண்டும் " என்று மேத்தா விளக்கினார்.

India China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment