பிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்?

சீனாவின் அடையாளமான சில்க் வர்த்தக சாலையில் மாமல்லபுரம் முக்கியத் தளமாக  இருந்ததால் இந்த இடத்தை சீனா பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது

வரும் அக்டோபர் 12 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் இன்பார்மல் மாநாட்டில் கலந்து கொள்ள வுள்ளனர்.

ஏன் மாமல்லபுரம் ? 

சில ஆண்டுகுள் வரை, இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு பெரும்பாலும் டெல்லி யில் மட்டுமே நடைபெற்று வந்தன. ஆனால், நரேந்திர மோடியில் வெளியுறவுக் கொள்கைகளில்  ஒரு சிறப்பசமாக கருதப்படுவது என்னவென்றால் தலைவர்களின் சந்திப்பை டெல்லியை விட்டு வெளியே கொண்டு வந்தது தான்.

எனவே,  நடக்க விருக்கும் இந்தியா-சீனா தலைவர்கள் சந்திப்பை இந்தியா வாரனாசியை முதலில் பரிந்துரைத்ததாகவும், ஆனால் சீனாவின் அடையாளமான சில்க் வர்த்தக சாலையில் மாமல்லபுரம் முக்கியத் தளமாக  இருந்ததால் இந்த இடத்தை சீனா பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மாமலபுரத்தில் உள்ள  நினைவுச்சின்னங்கள் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப் பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது.

இன்பார்மல் மாநாடு என்றால் என்ன ? 

முறையான பார்மல் மாநாட்டில் இரு தலைவர்களுக்குமான பேச்சு வாரத்தை முன்பே திட்டமிடப்படும், எதை விவாதிக்கப் பட வேண்டும், விவாதிக்கப் படக் கூடாது என்பதை இரு தலைவர்கள் சந்திப்பதற்கு முன்பே உயர் மட்டக் குழு உறுதி செய்தி விடும். சந்திப்பின் முடிவில் இரு தலைவர்களும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூட்டறிக்கை வெளியிடுவார்கள். ஆனால், மாமலபுரத்தில் நடக்க விருக்கும் இந்த இன்பார்மல் மாநாட்டில் இந்த நடை முறை பின்பற்றப்படாது. இரு தலைவர்களும் தங்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக பேசுவார்கள். அதிகப் பட்சம் இரு தலைவர்களுக்கு தேவையான மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள்        முன்கூட்டியே எந்த திட்டமிடலும் இருக்காது. கூட்டறிக்கை என்று எதுவும் வெளியடப்படாது.

இன்பார்மல் மாநாடு முக்கியத்துவம் இல்லையா? 

பார்மல் மாநாட்டை விட , இன்பார்மல் மாநாட்டில் இரு தலைவர்களும் மனம் விட்டு பேச முடியும். இன்பார்மல் மாநாடு எளிமையாக இருப்பதால், அதில் பேச  பட்ட  விசயங்களை இரு நாட்டுத் தலைவர்கள் விரைவில் நடை முறைப்படுத்த முன் வருகின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, டோக்லாம்  எல்லை தொடர்பான விசயங்களில் ஒரு தெளிவை, நிதானத்தை  வுஹான் இன்பார்மல் மாநாடு கொண்டு வந்ததை யாராலும் மறுக்க முடியாது.

இந்த வகையான இன்பார்மல் மாநாடு இது தான் முதல் முறையா? 

இல்லை. கடந்த வருடம் ஏப்ரல் 27,28 சீனாவின் ஹூபே மாகாணத்தில் வுஹான் நகரில் முதல் இன்பார்மல் மாநாடு நடந்தது. இந்தியா, சீனா இடையில் டோக்லாம் எல்லை பதற்றம் நிலவிய பொது இந்த முதல் இன்பார்மல் மாநாடு நடந்தது.

மாமல்லபுரம் சந்திப்பில் என்ன முக்கியத்துவம் ? 

இது இந்தியா பிரதமருக்கும், சீனா அதிபருக்கும் நடக்கும் இரண்டாவது இன்பார்மல் மாநாடு ஆகும். சமிபத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின் இந்தியா, சீனா உறவில் சிறு விருசல்கள் விழுந்ததாகவே உணரப்படுகிறது. உதாரணமாக, சீனா இந்த விஷயத்தில் தொடர்ந்து பாகிஸ்தானிற்கு தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறது. ஐ நா சபைக்கும் இந்த விசயத்தை கொண்டு சென்றது. இதனால், மாமல்லபுர மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

மேலும், அமெரிக்கா, சீனா வர்த்தகப் போர் நடைபெற்று வருவதால் உலக பொருளாதார நிலைமை, இரு நாடுகளுக்கான வார்த்தக ரீதியான உறவுகளை எப்படி மேன்படுத்துவது? போன்ற முக்கிய விவாதங்களும் நடை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாமாலப்புரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளது? 

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோயிலை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு, பாகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதுடெல்லியைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஜான்விஜ் சர்மா தலைமையிலான ஏ.எஸ்.ஐ அதிகாரிகள் குழுவும் மாமல்லபுர ஷோர் கோயில் உள்ளிட்ட நினைவுச்சின்னங்களை ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிட்டத் தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close