Advertisment

அமெரிக்கா - சீனா இடையே புதிய தொழில்நுட்ப பனிப்போர் : இந்தியாவுக்கு பாதிப்பு?

US- china cold war :இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் விளங்கியதாக கூறி, 59 சீன செயலிகளுக்கு இந்தியா சமீபத்தில் அதிரடியாக தடைவிதித்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமெரிக்கா - சீனா இடையே புதிய தொழில்நுட்ப பனிப்போர் : இந்தியாவுக்கு பாதிப்பு?

Pranav Mukul , Anil Sasi

Advertisment

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் உச்சத்தைஎட்டியுள்ளது. இதன் விளைவாக சீனாவின் பிரபலமான ஹூவாய் (Huawei) நிறுவனத்தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாது ZTE நிறுவனத்தாலும் அமெரிக்காவில் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை அளித்த புகாரின் பேரில் இவ்விரு நிறுவனங்களுக்கும் அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தடையை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் இவ்விரு நிறுவனங்களுக்கு தடைவிதிக்கத்துவங்கியுள்ளதால், சீனா தனிமைப்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் கூகுளின் சேவை சீனா தடைசெய்துள்ள நிலையில், சீனா அங்கு தனக்கான தேடுதளங்கள் மற்றும் சமூகவலைதளங்களை உருவாக்கியுள்ளது. தொழில்நுட்ப விகாரத்தில், அமெரிக்காவிற்கும் , சீனாவிற்கும் இடையே கடுமையான பனிப்போரே நடைபெற்று வருகிறது.

கடந்தாண்டு மட்டும் சீனாவில் தினமும் 100 மில்லியன் டாலர்கள் அளவிற்கு ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனையாகியுள்ளன. அதேபோல், ஹூவாய் நிறுவனத்தின் வருமானமும் சர்வதேச அளவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில், ஹூவாய் நிறுவனத்திற்கு தடைவிதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில்,, செஞ்சென் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு சர்வதேச அளவில் சிப்செட் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவையில் முன்னணி இடத்தில் விளங்கும் ஹூவாய் நிறுவனம், ஐரோப்பாவில் முதன்முதலாக தனது தொழிற்சாலையை துவக்கியுள்ள நிலையில், இந்நிறுவன தயாரிப்புகளுக்கு இங்கிலாந்து நாடும் தடைவிதித்துள்ளது. முன்னதாக, இங்கிலாந்தில் 5ஜி சேவை கட்டமைப்பை உருவாக்க ஹூவாய் நிறுவனத்துடன் இங்கிலாந்து அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த நிலையில் அது திடீரென தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தடையை தொடர்ந்தே, இங்கிலாந்து தடையை அமல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

publive-image

அமெரிக்கா கடந்த மே மாதம் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய தடையின் மூலம், சீனாவின் ஹூவாய் நிறுவனம் சிறப்பு சிப்செட்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெறுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சீன நிறுவனங்கள் இந்த சிப்செட் பாகங்களை சர்வதேச செமிகண்டக்டர் தயாரிப்பு கார்ப்பரேசன் நிறுவனத்தையே சார்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம்ந செமிகண்டக்டர் பவுண்டரி நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.

அமெரிக்கா தடையை தொடர்ந்து பல மேற்கத்திய நாடுகளும் ஹூவாய் உள்ளிட்ட சீன நிறுவனங்களுக்கு தடைவிதிக்க துவங்கியுள்ளது. இதன்காரணமாக பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் செயற்கை நுண்ணறிவு, 5 ஜி சேவை நடைமுறைப்படுத்தப்படும் இந்த நேரத்தில் சீனா மீதான தடை முக்கியத்துவம் பெறுகிறது.

உயர்தர வன்பொருள் சந்தையில், சீனா எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது?

ஹூவாய் நிறுவனம், 1980ம் ஆண்டின் இறுதியில், சீன மக்கள் ராணுவத்தின் முன்னாள் ரெஜிமெண்ட் தளபதியால் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் முதலில், ஹாங்காங் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட PBX ஸ்விட்ச்சகளை மறுவிற்பனை செய்யும் நிறுவனமாக நீண்டகாலமாக இருந்துவந்தது.

zhonghua youwei என்ற பெயரில் இருந்தே Huawei என்ற பெயர் தருவிக்கப்பட்டது. Huawei என்ற சொல்லுக்கு China has promise என்று சீனா மொழிபெயர்ப்பு செய்திருந்தது. இந்நிறுவனம், தற்போது 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பொருட்களை வர்த்தகம் செய்து வருகிறது. எரிக்சன் உள்ளிட்ட உலகின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு தயாரிப்புப்பொருட்களை வழங்கும் நிறுவனமாக ஹூவாய் நிறுவனம் 2012ம் ஆண்டு முதல் விளங்கி வருகிறது. எரிக்சன் நிறுவனம், 2018ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை பெற்றிருந்தது. இந்நிறுவனம், கடந்த ஆண்டில் 1,94,000 ஊழியர்களுடன் 122 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டிருந்தது.

 

publive-image

சீனா தொழில்நுட்பத்துறையில் பனிப்போரை ஏன் துவக்கியது?

2011ம் ஆண்டு பிப்ரவரிமாதத்தில், ஹூவாய் நிறுவனம் அமெரிக்க அரசு, தங்கள் நிறுவன பொருட்களால் அரசுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து அனுப்பியிருந்த கடிதத்தில், மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், அதேஆண்டு நவம்பர் மாதத்தில்ல இதுகுறித்த உளவுத்துறை ஆய்வை அமெரிக்கா மேற்கொண்டது

இந்த ஆய்வு அறிக்கை 2012ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ஹூவாய் மற்றும் ZTE நிறுவன தயாரிப்புகளால், அமெரிக்க நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இந்த இரு நிறுவனங்களால் தேசிய அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்து தடைவிதிக்கப்பட்டது.

சர்வதேச ஆர்வலர்கள், இதனை அமெரிக்கா - சீனா நாடுகளுக்கிடையேயான தொழில்நுட்பத்துறையின் பனிப்போராகவே கருதினர். அமெரிக்கா விதித்த தடையை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சீனாவின் இந்நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு தடைவிதிக்கத்துவங்கியது.

அமெரிக்க தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை தாங்களே தயாரித்துக்கொள்ள வேண்டும் என்றும், எதற்காகவும் சீனப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், தங்களது பொருட்களை தேவைப்படும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே இரும்பு வளமிக்க சீனா நாட்டில் அதன் தேவைக்கு போக மற்ற இரும்பு தாதுக்களை பதுக்கி வந்ததை தொடர்ந்து, சர்வதேச அளவில் இரும்பு தாதுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சீனா இரும்புத்தாது விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பழிதீர்ப்பதாக 2018ம் ஆண்டில், அமெரிக்க முன்னாள் உள்துறை அமைச்சர் ஹென்றி பால்சன் அச்சம் தெரிவித்தார்.

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் 5 ஜி நெட்வொர்க் சேவைக்கு தங்களை தயார்படுத்தி வந்த நிலையில், இந்தே சேவையை சீன நிறுவனங்களே பெரிதும் வழங்கிவந்தன. அமெரிக்காவின் தடையால், 5ஜி சேவைக்கான சிறப்பு சிப்செட்களை உருவாக்க தேவையான மூலப்பொருட்களுக்கு சீனாவில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன்காரணமாக, சீனா பொருளாதார அளவில் மிகுந்த பாதிப்பிற்குள்ளானது.

இந்த யுத்தத்தில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

2009ம் ஆண்டில், இந்திய நாட்டின் ரகசியங்களை சீனாவின் செயலிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் வேவு பார்ப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, சீன நிறுவனங்களுக்கு 2009ம் ஆண்டில் மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் தடைவிதித்தது. இருந்தபோதிலும், தொலைதொடர்பு துறையில், சீன நிறுவனங்களை நம்பியே இந்தியா இருந்துவந்தது. இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி, சீனாவின் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் துறை நிறுவனங்களை சார்ந்தே அமைந்தது என்பதை மறுக்க இயலாது.

லடாக் விவகாரத்திற்கு பிறகும், இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு சீன நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியதன் பேரில், இந்தியாவில் சீன நிறுவனங்களின் முதலீடு பெருமளவில் குறைக்கப்பட்டது.இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் விளங்கியதாக கூறி, 59 சீன செயலிகளுக்கு இந்தியா சமீபத்தில் அதிரடியாக தடைவிதித்தது.

எல்லைப்பகுதியில் வாலாட்டி வரும் சீனா மற்றும் அமெரிக்காவின் தடை உள்ளிட்டவைகளின் காரணமாக இந்தியா, தொழில்நுட்ப உதவிகளுக்கு சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளை அணுகும் சூழல் உருவாகியுள்ளது.

சீன நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தொலைதொடர்பு சேவைகளுக்காக ஐரோப்பிய நிறுவனங்களான எரிக்சன் , நோக்கியா தென்கொரியாவின் சாம்சங் நிறுவனங்களையும், கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சிப்மேக்கிங் தேவைகளுக்காக, அமெரிக்காவின் இன்டெல், குவால்காம், குளோபல் பவுண்டரிஸ், பிரிட்டனை சேர்ந்த ஏஆர்எம் உள்ளிட்ட நிறுவனங்களை நாட துவங்கியுள்ளன. இதேபோல், தொலைதொடர்பு துறையில், தைவான் செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உதவியையும் இந்தியா நாடியுள்ளது.

2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவின் குவால்காம் நிறுவனத்தை சிங்கப்பூரை சேர்ந்த பிராட்காம் லிமிடெட் நிறுவனம் 117 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் கையகப்படுத்த இருந்த நிலையில், அதிபர் டிரம்ப் இதற்கு அனுமதி மறுத்தார்.இதற்கு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த குளோபல் பவுண்டரீஸ் நிறுவனத்தை, அபுதாபி நிறுவனம் கையகப்படுத்தியிருந்தது.

பல்வேறு நாடுகள் 5 ஜி சேவைக்கு தயார்படுத்திவரும் நிலையில், சீன நிறுவனங்களின் தடையால் இதில் பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வடக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில், 5 ஜி சேவைக்கு சீன நிறுவனங்களின் பங்களிப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Explained: The new tech cold war

India China Usa Huawei
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment