Advertisment

இமயமலைப் பகுதி மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்: காரணம் என்ன?

மூன்று மாதங்களாக கொரோனா பாதிப்பு 131-ஆக இருந்த லடாக் பகுதியில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.     

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இமயமலைப் பகுதி மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்: காரணம் என்ன?

லடாக் யூனியன் பிரேதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 198 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 131-ஆக இருந்த லடாக் பகுதியில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Advertisment

 

கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்த சிக்கிம் மாநிலத்தில், சனிக்கிழமையன்று  யாருக்கும் தொற்று பதிவு செய்யப்படவில்லை. இந்திய மாநிலங்களில் குறைவான பாதிப்பு கண்டறிந்த சிக்கிமில் கடந்த வியாழக்கிழமை வரை கொரோனா பாதிப்பு 13 -ஆக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்த இரண்டு இமயமலைப் பகுதிகளிலும், கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு மக்கள் நடமாட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. உதாரணமாக, சிக்கிம் மாநிலத்தில்  கண்டறியப்பட்ட புதிய பாதிப்புகள் அனைத்தும் பிற மாநிலங்களிலிருந்து திரும்பியவர்கள் என்று மாநில சுகாதார செயலாளர் பெம்பா ஷெரிங் பூட்டியா தெரிவித்தார்.

கொரோனா பாதிப்புகள் தீடிரென அதிகரித்திர்ப்பது இந்த இரண்டு இமயமலை மாநிலங்களில் மருத்துவ உள்கட்டமைப்பில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். கார்கில், லே ஆகிய இரண்டு மாவட்டங்கள் கொண்ட லடாக் பிரேதேசத்தில் இரண்டு பிரத்தியோக கொரோனா மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டிலும், கொரோனா நோயாளிகளுக்கு 87  படுக்கைகள் உள்ளன. நேரடி தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக 103 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும், அறிகுறிகள் வெளிபடுத்தும் நோயாளிகளுக்கு   மருத்துவமனைகள் மற்றும் விடுதிகளில்  1,669 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சிக்கிம் மாநிலம் ஆகஸ்ட் மாதம் வரை தனது எல்லையைப் பூட்ட முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.

 

தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில், 11,929 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 3.2 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,409 பேர் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதையடுத்து இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 379 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 348 பேர், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் 3,500 பேருக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டாலும், டெல்லி,  தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் 2,000 கொரோனா பாதிப்பை பதிவு செய்து வருகின்றன. கடந்த மூன்று நாட்களில், தேசியலவிலான பாதிபில் முதல் ஐந்து மாநிலங்களின் பங்களிப்பு 65 சதவீதத்தைத் தாண்டியது. கடந்த, இரண்டு வாரங்களாக முதல் ஐந்து மாநிலங்களில் கொரோனா பங்களிப்பு வீழ்ச்சியடைந்த நிலையில் தற்போது மீண்டும்  அதிகரித்துள்ளது.

இருப்பினும், தேசியளவிலான வளர்ச்சி விகிதம் (7 நாள் கூட்டு தினசரி வளர்ச்சி விகிதம்) கடந்த மூன்று நாட்களாக 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. பீகார் போன்ற முன்னர் வேகமாக வளர்ச்சியைக் காட்டிய மாநிலங்கள் தற்போது குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஒரு  வாரமாக 10 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சியைக் காட்டிய ஹரியானா மாநிலத்திலும், கடந்த இரண்டு நாட்களில் புதிய எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது, அந்த மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் எட்டு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

நியமிக்கப்படாத கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் கடந்த நான்கு நாட்களாக குறைந்து வருகிறது. அப்படியெனில், இந்த பட்டியலில் உள்ள சில பாதிப்புகளை  மாநிலங்கள் தங்கள் எண்ணிக்கையில் சேர்க்கத் தொடங்கியுள்ளன. ஜூன் 9 அன்று 9,227 ஆக உயர்ந்த  நியமிக்கப்படாத கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சனிக்கிழமையன்று 7,436 ஆக குறைந்தது. இருப்பினும், இந்த பாதிப்புகள் எந்த மாநிலங்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment