Advertisment

அனைவருக்கும் இலவச தடுப்பூசி; அவசியம் என்ன?

Why the govt must vaccinate every Indian for free: அமெரிக்கா போன்ற பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில், கோடீஸ்வரர்கள் கூட இலவச தடுப்பூசிகளைப் பெறுகிறார்கள். அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதே அதிக மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கான எளிதான வழி.

author-image
WebDesk
New Update
அனைவருக்கும் இலவச தடுப்பூசி; அவசியம் என்ன?

COVID-19 இந்தியாவில் பேரழிவு தரும் இரண்டாவது அலையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஷி தரூர் மற்றும் சல்மான் அனீஸ் சோஸ், இந்த நெருக்கடிக்கு அரசாங்கம் தயாராக இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், சமீபத்தில் அரசாங்கம் அறிவித்த தடுப்பூசி கொள்கைக்கு எதிராகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

"இந்தியாவின் விரிவடையும் சோகத்திற்கு அரசின் ஆணவபோக்கு அல்லது திறமையின்மையே காரணம் என்று நாங்கள் குறை கூறுகிறோம். எவ்வாறாயினும், இந்த நெருக்கடியின் கால அளவை குறைப்பதுவே இப்போது அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும், இல்லையென்றால் இந்த இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாது, ”என்று அவர்கள் எழுதுகிறார்கள்.

மனித மற்றும் பொருளாதார பேரழிவு நடந்து வருகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இது சம்பந்தமாக, அவர்கள் அரசாங்கத்தின் தடுப்பூசி கொள்கையை ஒத்துப்போகாத மற்றும் பேரழிவு தரக்கூடியவை என்று அழைக்கிறார்கள்.

மேலும், இந்த தடுப்பூசி திட்டம் குழப்பத்தை உருவாக்கும் எனவும், குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி கிடைக்கும் எனவும், இதனால் சமத்துவமின்மை வளரும் எனவும், மற்றும் இந்த நெருக்கடி காலத்தை நீட்டிக்கும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். "சிறந்த மாற்று வழிகள் உள்ளன, இது உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற உதவும்."

உலகளாவிய தொற்றுநோய்களின் போது தடுப்பூசி கொள்கையின் குறிக்கோள்கள் என்னவாக இருக்க வேண்டும்?

"தடுப்பூசிகள் அதிகமான மக்களை சென்றடைய வேண்டும், முடிந்தவரை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்த வேண்டும், முடிந்தவரை தடுப்பூசி உற்பத்தியை விரைவாகவும் செலவு குறைந்ததாகவும் செய்ய வேண்டும் இவையே ஒரு நல்ல தடுப்பூசி கொள்கை என்று நாங்கள் நம்புகிறோம். இத்தகைய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாகத் திறன் நம்மிடம் இருக்க வேண்டும். தொற்று ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களையும் பாரபட்சமில்லாமல் பாதிக்கிறது என்பதால், கொள்கையும் சமமாக இருக்க வேண்டியது அவசியம், ”என்று அவர்கள் கூறுகிறார்கள். தற்போதைய விகிதத்தில், 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட இந்தியாவுக்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். அரசாங்கத்தின் தடுப்பூசி கொள்கை "கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் ஆபத்தானது" என்று அவர்கள் நம்புவதால் விஷயங்கள் கணிசமாக மோசமாகிவிடும் என்று கருதுகிறார்கள்.

தடுப்பூசி திட்டத்திற்கான மாற்று வழி என்ன?

பெரும்பாலான முக்கிய நாடுகளில், அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. "அமெரிக்கா போன்ற பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில், கோடீஸ்வரர்கள் கூட இலவச தடுப்பூசிகளைப் பெறுகிறார்கள். அது மட்டுமல்லாமல், கணக்கில் வராத தொழிலாளர்களும் இலவச தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதே அதிக மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கான எளிதான வழி. எனவே, இந்தியாவில் அனைத்து தடுப்பூசி கொள்முதல்களையும் மத்திய அரசே செய்ய வேண்டும் என்று அவர்கள் முன்மொழிகின்றனர். உற்பத்தியாளர்களை அடையாளம் காணுதல், விலைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல், விநியோகங்களை திட்டமிடுதல் மற்றும் நிதி பரிமாற்றங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றை மத்திய அரசு கையாள வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கான ஒரு வெளிப்படையான சூத்திரத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும், என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இததகைய தடுப்பூசி திட்டம் நிதிச் சுமையை ஏற்படுத்துமல்லவா? இல்லை, "ஒரு நீண்டகால நெருக்கடியின் விலை பொருளாதாரத்திற்கு மிகவும் அழிவுகரமானதாக இருக்கும். 2020-21 ஆம் ஆண்டில், இந்த நெருக்கடியால் பொருளாதார உற்பத்தியில் ரூ .8 டிரில்லியனுக்கும் அதிகமாக பாதிப்பு ஏற்படும் ”என்று அவர்கள் கூறுகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine Covid 19 Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment