Advertisment

இந்தியாவில் இப்போது 28 மாநிலங்கள் மட்டுமே, ஏன் தெரியுமா?

இந்தியாவின் ஜனாதிபதி கையெழுத்திட்டது 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய அல்ல. ஆனால், ஜம்மு & காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெற்றப்பட்டிருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India now has just 28 states, here's why - இந்தியாவில் இப்போது 28 மாநிலங்கள் மட்டுமே, ஏன்?

India now has just 28 states, here's why - இந்தியாவில் இப்போது 28 மாநிலங்கள் மட்டுமே, ஏன்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கட்கிழமை மாநிலங்களவையில் பேசிய போது, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ல் திருத்தம் செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். இங்கே, அரசியலமைப்பு சட்டத்தில் என்ன திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்தும், ஜம்மு & காஷ்மீரின் எதிர்காலத்தை அது என்னவாக்கப் போகிறது என்பது குறித்தும் பார்ப்போம்.

Advertisment

ஜனாதிபதியின் இந்த உத்தரவு மூலம், இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் இனி ஜம்மு & காஷ்மீருக்கும் பொருந்தும்.

370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதா?

இந்தியாவின் ஜனாதிபதி கையெழுத்திட்டது 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய அல்ல. ஆனால், ஜம்மு & காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெற்றப்பட்டிருக்கிறது.

35-A சட்டப்பிரிவின் நிலை என்ன?

ஆகஸ்ட் 5ல் குடியரசுத் தலைவர் உத்தரவின் படி, இந்திய அரசிலமைப்பின் அனைத்து விதிகளும் காஷ்மீருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் அத்தியாயம் இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது, எனவே 35-ஏ பிரிவின் பாரபட்சமான விதிகள் இப்போது அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டவையாகியுள்ளது. குடியரசுத் தலைவர் இந்த 35-A சட்டப்பிரிவையும் திரும்பப் பெற்றுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் எதிர்கால நிலை என்ன?

உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநில மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதனால் மாநிலம் இப்போது ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது. சட்டப்படி பேச வேண்டுமெனில், சட்டப்பிரிவு 3ன் படி, சாதாரண பெரும்பான்மை கொண்டே, அரசியலமைப்பைத் திருத்துவதற்கும் ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றுவதற்கும் புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால் அத்தகைய மாற்றத்திற்கு அத்தகைய மசோதா முதலில் அதன் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்திற்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட வேண்டும். பிரிவு 3 விளக்கம் II இன் கீழ், பாராளுமன்றத்தின் அதிகாரம் யூனியன் பிரதேசங்களை உருவாக்க விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மட்டும் திரும்பப் பெறவில்லை, காஷ்மீருக்கு இப்போது மற்ற மாநிலங்களை விட குறைந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் 29 மாநிலங்களுக்கு பதிலாக, இப்போது நம்மிடம் 28 மாநிலங்கள் இருக்கிறது. காஷ்மீரை இனி ஆளுநர் தலைமையில் இருக்காது, ஆனால் டெல்லி அல்லது புதுச்சேரி போல துணை நிலை ஆளுநரை கொண்டு இயங்கும்.

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment