Advertisment

இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் என்ன?

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின் போது, 2020 இல் அமலுக்கு வந்த ஊரடங்கால், இந்தியாவின் வேலையின்மை விகிதம் அதிகளவில் இருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் என்ன?

இந்தியாவில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 12.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்த விகிதம் ஜனவரி-மார்ச் காலாண்டில் 9.3 சதவீதமாக இருந்தது.

Advertisment

எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை கொரோனா தொற்றுநோயின் முதல் அலையின் போது காணப்பட்ட 20.8 சதவீதத்தை காட்டிலும் குறைவானதாகும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தொழிலாளர் போர்ஸ் கணக்கெடுப்பு (PLFS) காட்டுகிறது.

நம்பர்ஸ் சொல்வது என்ன?

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின் போது, 2020 இல் அமலுக்கு வந்த ஊரடங்கு சமயத்தில் வேலையின்மை விகிதம் அதிகளவில் இருந்தது.

தரவுகளின்படி, 15-29 வயதிற்குட்பட்டவர்களில் நகர்ப்புற இளைஞர்களில் ஏப்ரல்-ஜூன் 2020 காலத்தில் 25.5 சதவீதமும், ஏப்ரல்-ஜூன் 2020இல் 34.7 சதவீதமும், ஜனவரி-மார்ச் 2021 இல் 22.9 சதவீதம் பேரும் வேலையில்லாமல் இருந்துள்ளனர்.

வேலையின்மை விகிதம் என்பது தொழிலாளர் போர்ஸில் வேலையில்லாத நபர்களின் சதவீதமாக வரையறுக்கப்படுகிறது. நகர்ப்புற வேலையின்மை PLFS என்பது தற்போதைய வாராந்திர நிலையை அடிப்படையாகக் கொண்டது.

அதாவது, ஒரு நபர் வாரத்தில் எந்த நாளிலும் ஒரு மணிநேரம் கூட வேலை செய்யாமல் இருந்தால் வேலையற்றவராகக் கருதப்படுவார்.

தொழிலாளர் போர்ஸில், தற்போதைய வாராந்திர நிலை (CWS) படி, கணக்கெடுப்பு தேதிக்கு முந்தைய ஒரு வாரத்தில் சராசரியாக வேலை செய்யாத நபர்களின் எண்ணிக்கைதான் கணக்கில் கொள்ளப்படும்.

2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான நகர்ப்புறங்களில் வாராந்திர நிலையில் உள்ள தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 46.8 சதவீதமாக இருந்தது. இந்த எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 45.9 சதவீதமாக இருந்தது. அதேபோல், ஜனவரி-மார்ச் 2021 இல் 47.5 சதவீதமாக இருந்தது.

CMIE தரவு

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மைய(CMIE) தரவின்படி, நகர்ப்புற வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 9.78 சதவீதமாகவும், மே மாதத்தில் 14.72 சதவீதமாகவும், ஜூன் மாதத்தில் 10.08 சதவீதமாகவும் இருந்தது.

இது ஜூலை 2021 இல் 8.32 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், ஆகஸ்டில் 9.78 சதவீதமாக அதிகரித்து, பின்னர் மீண்டும் செப்டம்பரில் 8.64 சதவீதமாக குறைந்தது.

நகர்ப்புற வேலையின்மை விகிதம் டிசம்பரில் 9.30 சதவீதமாக உயர்ந்து, பின்னர் ஜனவரியில் 8.16 சதவீதமாகவும், பிப்ரவரி 2022 இல் 7.55 சதவீதமாகவும் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Unemployment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment