Advertisment

தொடர் சரிவை சந்திக்கும் ஆட்டோமொபைல் சந்தை... ஆயிரக் கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்...

Indian automobile industry car sales down : டாட்டா மோட்டார்ஸ் ஜூலையில் 2 நாட்கள் இவ்வாறு உற்பத்தியை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian automobile industry car sales down

Indian automobile industry car sales

 Sandeep Singh, Anil Sasi

Advertisment

Indian automobile industry car sales down : இந்தியாவில் கார்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக மார்க்கெட் லீடாக இருக்கும் மாருதி சுசுக்கி நிறுவனத்தின் விற்பனையும் பின்தங்கியுள்ளது. தனியார் லோன் நிறுவனங்களுக்கு அரசு விதித்திருக்கும் கிடுக்குப்பிடி காரணமாக இந்த விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வருகின்ற நாட்களில் கார்களின் உற்பத்தி பெருமளவு குறையும். இதனால் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை இழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விற்பனையில் 13 மாதங்களாக தொடர் சரிவினை சந்தித்து வருகிறது ஆட்டோ மொபைல் சந்தை.

மேலும் படிக்க :டாட்டா நெக்ஸான் : இந்தியர்களின் மனதை கவர்ந்த கார் இது தான்!

கார்களின் விற்பனை பாதிப்பு

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவடைந்த போது, பேசஞ்சர் கார்களின் விற்பனை 18.4% குறைந்துள்ளது. கமர்சியல் வாகனங்களின் விற்பனையும் 16.6% குறைந்துள்ளது. கார்கள் மட்டுமல்லாமல் இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் 11.7%மாக குறைந்துள்ளத. இந்திய சந்தைகளில் பேசஞ்சர் கார்களின் விற்பனை வீழ்ச்சி இதற்கு முன்பு இந்த அளவிற்கு இருந்ததில்லை. இறுதியாக 2001-2002ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டுமே கார்களின் விற்பனை 27% சரிவை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.  விவசாயமும் பெரிய அளவிற்கு விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்காத காரணத்தால் மார்ச் 2019 முதல் ட்ராக்டர்களின் விற்பனையும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த் ஜூனுடன் முடிந்த காலாண்டில் 32% விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணங்கள் என்ன?

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மீது அரசு தரும் அழுத்தம் மற்றும் லிக்விடிட்டி ஸ்க்வீஸ் போன்ற காரணங்களால் இந்தியாவில் ஆட்டோமொபைல் வர்த்தகம் சரிவை சந்திக்க துவங்கியுள்ளது. குறிப்பாக பேசஞ்சர் கார்கள் விற்பனையில்.

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுக்கி நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனங்களை மட்டுமே நம்பி உள்ளது. பணப்புழக்கத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு கடன் அளிப்பதிலும் பெரும் நலிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் வர்த்தகம் சரிய துவங்கியுள்ளது.

பல்வேறு காரணங்களை கணக்கில் கொண்டும் வாடிக்கையாளர்கள் தங்களின் கார்களை வாங்குவதில் தாமதம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஜி.எஸ்.டி. வரி குறைந்த பின்பு கார்கள் வாங்கிக் கொள்ளும் திட்டங்களில் இருப்பவர்க்ளும் அதிகமாக உள்ளனர். விழாக்காலங்களில் சில தள்ளுபடிகளை கார் நிறுவனங்கள் வழங்கும். அதன் அடிப்படையிலும் கார்கள் வாங்குவதை வாடிக்கையாளர்கள் திட்டுமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கமர்சியல் வாகனங்கள் மட்டும் ட்ராக்டர்களின் விற்பனையும் பாதிப்புக்கு உள்ளானதிற்கு என்ன காரணம்?

வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பண நெருக்கடி தான் மிக முக்கியமான காரணமாகும். டையர் 2 மற்றும் சிறு நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வாகன கடன்களை வழங்கி வருகிறது. பணப்புழக்கத்தின் நெருக்கடி காரணமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்கள் குறைக்கப்பட்டுள்ளது.  இந்த வருடம் பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாகவும், வேளாண் துறையும் சரிவை நோக்கி செல்வது காரணமாகவும் ட்ராக்டர்கள் வாங்குவது குறைந்து வருகிறது.

ஆக்ஸில் லோட் குறித்த அரசின் விதிமுறைகள் மாற்றத்திற்கு ஆளாகும் போது, கமர்சியல் வாகனங்களின் விற்பனை பெரும் அளவு குறையும். ஆக்ஸில் லோட் குறித்த முறையான கொள்கைகள் கொண்டு வர வேண்டும் என ஆட்டோமொபைல் மார்க்கெட் விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் கமர்சியல் வாகனங்களின் விற்பனை 9.53% வரை ஏப்ரல் - ஜூன் கால கட்டங்களில் குறைந்துள்ளது என சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மெனுஃபேக்சுரர்ஸ் அமைப்பு (Society of Indian Automobile Manufacturers (SIAM))அறிவித்துள்ளது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இதனால் என்ன நிகழும்?

விற்பனை குறைந்தால் உற்பத்தி பாதிப்படையும், உற்பத்தி பாதிப்படைந்தால் வேலை வாய்ப்புகள் குறையும், ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைலின் ஸ்பேர்பார்ட்ஸ் உருவாக்கும் நிறுவனங்களில் வேலைகள் குறைக்கப்படும். இதனால் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் ஒரு பாதிப்பினை சந்திக்கும்.

கடைசி மாதம் அசோக் லேலாண்ட் நிறுவனம், பாட்னாநகர், உத்திரகாண்டில் அமைந்திருக்கும் தொழிற்சாலையை 9 நாட்கள் மூடிவிட்டது. வருடத்திற்கு 1.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் ஏற்கனவே ஜூன் 17 முதல் ஜூன் 29 வரை தொழிற்சாலையை மூடியது குறிப்பிடத்தக்கது.  டாட்டா மோட்டார்ஸ் ஜூலையில் 2 நாட்கள் இவ்வாறு உற்பத்தியை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.  மாருதி நிறுவனமும் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக உற்பத்தியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு வருகிறது.

இரு சக்கர வாகனங்களின் விற்பனை

2 சக்கர வாகனங்களின் நிலையும் இது போன்று தான் இருக்கிறது. ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டர் சைக்கிள் & ஸ்கூட்டர், மற்றும் டிவிஎஸ் மோட்டார் போன்ற நிறுவனங்களின் விற்பனையும் பெரும் அளவு பாதிப்பினை சந்தித்துள்ளது.

Automobile
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment