Advertisment

சி.டி.சி முககவசங்கள் குறித்த தனது ஆலோசனையை மாற்றியது ஏன்?

Indian Covid 19 : அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் முக்கவசம் அணி தேவையில்லை என்று அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுரைகள் மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
சி.டி.சி முககவசங்கள் குறித்த தனது ஆலோசனையை மாற்றியது ஏன்?

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் முக்கவசம் அணி தேவையில்லை என்று அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுரைகள் அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்லாது மாநில அதிகாரிகள் முதல் அறிவியல் வல்லுநர்கள் வரை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆனால் இந்த முடிவு வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களிலிருந்து வெள்ளை மாளிகைக்கு ஒரு நாளின் கொரோனா பதிவு குறைவாகவே கிடைத்துள்ளதாகவும் பத்திரிகையாளர் செயலாளர் ஜென் சாகி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

Advertisment

மேலும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம் என்று பல மாதங்களாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் புதிய பரிந்துரைகளை அறிமுகப்படுத்திய சி.டி.சி இயக்குனர் டாக்டர் ரோசெல் வலென்ஸ்கி சமீபத்தில் கண்டறியப்பட்ட இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை குறிப்பிடத்தக்க காரணிகளாக மேற்கோள் காட்டினார்:

இதில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவுத் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசிகள் வைரஸின் அனைத்து அறியப்பட்ட வகைகளுக்கும் எதிராக சிறப்பாக செயல்படுகிறது. தடுப்பூசிகள் சக்திவாய்ந்தவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனறு கூறியுள்ளார்.

தொடர்ந்து நேற்று வெளியான சி.டி.சி மற்றொரு பெரிய ஆய்வின் முடிவில், ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா ஆகியோரால் கண்டறியப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாக போடப்பட்டவர்களுக்கு 94% நோய் தொற்றை தடுப்பதில் பயனுள்ளதாக இருப்பதையும், ஓரளவு தடுப்பூசி போட்டவர்களில் கூட 82% நோய் தொற்றை தடுப்பதில் பயனுள்ளதாக இருப்பதையும் காட்டுகிறது.

இது குறித்து பால்டிமோர் கவுண்டியின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் சுகாதார கொள்கை நிபுணர் ஜோஸ் மெக்லாரன் கூறுகையில், “இது குறித்து அறிவியல் மிகவும் தெளிவாக உள்ளது. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு  வைரஸ் தொற்று ஏற்படவோ அல்லது அவர்களிடம் இருந்து பரவ்வொ அதிக வாய்ப்பில்லை என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன,  மேலும் இந்த தடுப்பூசிகளால் ஆபத்து வராது என்று நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால் அது மிகக் குறைவு என்பது தெளிவாகிறது,” என்று அவர் கூறினார்.

இதில் விஞ்ஞானிகளின்  ஒரே கவலையான தடுப்பூசி போடப்பட்ட ஒருவர் கூட வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக முடியும். மேலும் அறிகுறிகள் இல்லாமல் அதை மற்றவர்களுக்கு பரப்பவும் முடியும். ஆனால் புதிய ஆய்வு உட்பட சி.டி.சி ஆராய்ச்சி, ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைப் செலுத்திக் கொண்டவர்களுக்கு தொடர்ந்து சில நோய்த்தொற்றுகளைக் கண்டறிந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு சி.டி.சி தனது பரிந்துரைகளை மாற்றுவதற்கு இந்த ஆய்வு, அதற்கு முந்தைய பல ஆய்வுகளில் சேர்க்கப்பட்டுள்ளது, ”என்று வலென்ஸ்கி தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில், தடுப்பூசிக்குப் பிறகு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுக்கு தொற்றை பரப்புவதற்கு மிகக் குறைவான வைரஸைக் கொண்டுள்ளனர் என்பதை மற்ற சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்று ஐகான் ஸ்கூல் ஆஃப் மெடிசின் வைராலஜிஸ்ட் ஃப்ளோரியன் கிராமர் கூறினார். மேலும் ஜான்சன் & ஜான்சனின் தடுப்பூசி பின்னர் அங்கீகரிக்கப்பட்டதால், அதன் செயல்திறனை மதிப்பிடுவதற்கான ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. மருத்துவ பரிசோதனைகளில், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி 72% செயல்திறனைக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

 ஆனால் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விடக் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி குறைவு. லேசான நோயைக் காட்டிலும் மிதமான மற்றும் கடுமையான நோய்களின் அடிப்படையில் இந்த தடுப்பூசிகளின் செயல்திறன் அளவிடப்பட்டது. இது ஒரு நல்ல தடுப்பூசி, பல உயிர்களைக் காப்பாற்றும் என்று நான் நம்புகிறேன்," கிராமர் கூறினார். "ஆனால் ஜே & ஜே தடுப்பூசி தொற்றுநோயை எவ்வாறு தடுக்கிறது, என்பது பற்றிய கூடுதல் தரவு எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.

ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் அமெரிக்காவில் புழக்கத்தில் இருக்கும் மாறுபாடுகளுக்கு எதிராக செயல்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களை வலென்ஸ்கி மேற்கோள் காட்டினாலும், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி பற்றி தகவல்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.. மேலும் புதிய வகை தடுப்பூசிகளக் பல தொடர்ந்து வெளிவருகின்றன.  இது தொடர்பாக நேற்று  சி.டி.சி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் கடுமையான நோய், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றிலிருந்து வலுவான பாதுகாப்பை அளிக்கின்றன.

 மேலும் இந்த நாட்டில் புழக்கத்தில் இருக்கும் மாறுபாடுகளுக்கு எதிராக எங்கள் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும் என்ற தரவை நாங்கள் குவித்து வருகிறோம்.  முழு நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதால், நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் கூட, அவர்கள் தீவிரமாக நோய்வாய்ப்பட வாய்ப்பில்லை. ஆனால் நோய்த்தொற்றுக்கான ஆபத்து அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு அதிகம்.  சி.டி.சி அதிகாரிகள் அந்த காரணிகளை பரிசோதித்த்தாகவும், அறிவியலை மதிப்பீடு செய்வதில் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறினார்.

மேலும் நோய்த்தடுப்புக்குள்ளானவர்களுக்கு அவர்களின் சமூக தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு வெகுமதி அளிக்கிறது. மேலும் தடுப்பூசியைத் தேர்வுசெய்ய மற்றவர்களை ஊக்குவிக்கும். புதிய ஆலோசனை “நாங்கள் உண்மையிலேயே இங்கே இறுதி நிலையில் இருக்கிறோம் என்பதற்கான சமிக்ஞைகள், இது மக்களுக்கு ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ப்ளூம்பெர்க் பள்ளியின் பொது சுகாதார பயிற்சி மற்றும் சமூக ஈடுபாட்டின் துணை டீன் டாக்டர் ஜோசுவா ஷார்ப்ஸ்டீன் கூறினார்.

தொடர்ந்து சி.டி.சி விரைவாக ஒப்புக் கொண்டதால், மாநில, நகரம் மற்றும் மாவட்ட மட்டங்களில் உள்ள தலைவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கூட முக்கவசம் தேவைப்படும் நிலை உள்ளது. ஆனால் சுகதாரத்துறை  அறிவிப்புக்குப் பிறகு, சில மாநிலங்கள் உடனடியாக முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டன, ஆனால் முகமூடி கட்டுப்பாடுகள் இல்லாத மாநிலங்களில், தடுப்பூசி நிலையை சரிபார்க்கும் பொறுப்பு கடைக்காரர்கள், உணவக ஊழியர்கள், பள்ளி அதிகாரிகள் மற்றும் பணியிட மேலாளர்கள் மீது விழும்.

டெக்சாஸின் நகோக்டோசெஸில், டாக்டர் அஹமட் ஹாஷிம் மக்கள் தொகையில் 36% மட்டுமே நோய்த்தடுப்புக்கு உட்படுத்தப்பட்டதாகவும், வேகம் ஸ்தம்பித்திருப்பதாகவும் தோன்றியது. இன்னும் உள்ளூர் கடைகளில் 10 பேரில் ஒருவர் அல்லது இரண்டு பேர் மட்டுமே முகமூடி அணிந்தனர்.  சிடிசி தவறான செய்தியை வெளியிட்டு வருகிறது என்று நான் நினைக்கிறேன்,” என்று நுரையீரல் நிபுணர் ஹாஷிம் கூறினார்.

சி.டி.சி யின் வழிகாட்டுதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் நாடு முழுவதும், மக்கள் தொகையில் 36% மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்படுகிறார்கள். "தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு முற்றிலும் பொருத்தமான ஆலோசனைகள் பெற வேண்டும்.  இன்னும் வைரஸ் பரவுவதைக் காணும் இடங்கள் உள்ளன. தடுப்பூசி போடாத ஏராளமான நபர்களுக்கும் இடையில் உள்ள தூரத்தின் ஒரு சிறிய பகுதியை நாங்கள் இப்போது காண்கிறோம், " என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சி.டி.சியின் புதிய கொள்கை, நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களிடமிருந்தும், முககவசம் அணியப்படாத மற்றும் பாதுகாக்கப்படாத மக்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றுவதற்கான பொறுப்பை மாற்றுகிறது. தடுப்பூசி கொள்கையை உருவாக்கும்போது, அனைவரின் தேவைகளையும் விருப்பங்களையும் சமப்படுத்த வேண்டும்" என்று மெக்லாரன் கூறினார். "நாங்கள் எப்போதும் முககவசம் வைத்திருக்க முடியும், அப்போதுதான் மிகவும் சாதாரணமான வாழ்க்கைக்குத் திரும்புவதன் வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 In India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment