Will monsoon impact coronavirus spread: இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஆரம்ப காலங்களில், கோடை மாதத்தின் போது அதிகரிக்கும் வெப்பநிலையால் வைரஸின் ஆற்றல் பலவீனப்படும் என்றும், தொற்றின் வேகம் குறையும் என்றும் நம்பப்பட்டது. அது நடக்கவில்லை. இப்போது, இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை காலம் முன்னேற்றம் அடைந்து வருவதால், கொரோனா பரவல் தன்மையில் மாற்றம் வருமா? என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
இது ஒரு புதிய வைரஸ் என்பதால், பருவமழை காலம் அதன் தன்மையை எவ்வாறு மாற்றியமைக்கும் என்பதை ஆய்வாளர்கள் இன்னும் உறுதியாக கண்டறியவில்லை. எனவே, இதுபோன்ற பிற வைரஸ்கள் மழைக்காலங்களில் பொதுவாக எப்படி செயல்படுகின்றன என்பதை அறிய முயற்சிக்கின்றனர்.
கல்லாதது உலகளவு : மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற பல “ஏந்திகள்வழி” பரவும் நோய்களை (vector borne diseases) பரப்புவதில் இந்தியாவின் பருவமழை முக்கிய பங்கு வகுக்கிறது.டெங்கு விஷயத்தில், அதிகப்படியான மழை கொசுக்களின் இனப்பெருக்க சுழற்சியை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல்,அதன் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை பாதிப்பாக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பருவமழை காலங்களில் கோவிட் -19 போன்ற சுவாச நோயையைப் பரப்பும் இன்ஃப்ளூயன்ஸா வைரசின் நடத்தை எப்படி மாறுகிறது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் பொருத்தமானதாக அமையும். மனிதர்களை பாதிக்கும் விதத்தில் இரண்டு வைரசுகளிடம் முக்கிய வேறுபாடுகள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தில் பணிபுரிந்த தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் மார்க்-அலைன் விடோவ்ஸன் கூறுகையில்,”இன்ஃப்ளூயன்ஸா போன்ற பல சுவாச நோய்கள் பரப்பும் வைரஸுகளின், பருவகால நடத்தை மாற்றங்கள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை” என்று தெரிவித்தார்.
“அமெரிக்காவில், உதாரணாமாக ஃப்ளு காய்ச்சல் பரவும் காலத்தை கணிப்பது மிகவும் கடினம். வெப்பநிலை, பருவமழை, தனிமைப்படுத்துதல் போன்ற எந்த ஒரு தனிப்பட்ட காரணியும் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. சூரிய ஒளி, மக்களிடையே காணப்படும் வைட்டமின் டி அளவு போன்ற பல காரணிகளும் நோய்ப் பரவலை தீர்மானிக்கின்றன. மேலும், மேற்பரப்புகள் வழியாக (நேரடி மனிதத் தொடர்பு, காற்று) வைரஸ் பரவலின் தன்மை குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சிறியளவிலான பரவல் மட்டுமே மேற்பரப்புகள் வழியாக நிகழ்கிறது என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாய் உள்ளது” என்று அவர் ஒரு மின்னஞ்சலில் கூறினார்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
சுவாச ஒத்திசைவு வைரஸின் (ஆர்.எஸ்.வி) நடத்தை பருவ காலங்களில் எப்படி மாறுபடுகிறது என்பது குறித்து ஆய்வு செய்த தேசிய வைராலஜி நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் எம் எஸ் சதா கூறுகையில்,” பருவமழைக்கு ஏற்ப கொரோனா வைரசின் தன்மை மாறுபடுகிறது என்பதை கண்டறிய பல ஆண்டுகள் ஆகலாம்” என்று தெரிவித்தார். ஆர்.எஸ்.வி போன்ற பிற சுவாச நோய்கள் பொதுவாக பருவகால முறைகளைப் பின்பற்றுவதால், கொரோனா வைரஸ் கண்காணிப்பை பல ஆண்டுகள் மேற்கொள்வதன் மூலம் அதன் பருவநிலையை தீர்மானிக்க முடியும்” என்று அவர் கூறினார்.
மனித நடத்தை :
பருவகால மாற்றங்கள் (வெப்பநிலை, ஈரப்பதம், சூரிய ஒளி), மனித நடத்தை முறைகள், வைரஸின் உள்ளார்ந்த பண்புகள் (நோய்க்கிருமித்தன்மை, தோற்றுப்பரப்பும் தன்மை) போன்ற மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்து வைரசின் நோய் பரப்பு அமைகிறது என்று அடிப்படை அறிவியலுக்கான தேசிய நிறுவனத்தில் (மும்பை) பணிபுரியும் ஆய்வாளர் டாக்டர் சுபோஜித் சென் தெரிவித்தார்.
“எடுத்துக்காட்டாக, தெருக்களில் எச்சில் துப்பும் பழக்கம் மிகவும் மோசமான ஒரு பிரச்சினையாகும். ஏனெனில், இது வைரஸ் பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது. இருப்பினும், மழை பெய்யும் போது தெருக்களில் உமிழப்படும் எச்சில் அகற்றப்படும் அல்லது நீர்த்துப்போகும் என்பது நம்பிக்கை. மேலும், மழையின் போது, மக்கள் தங்கள் வீடுகள் (அ) அலுவலகங்கள் போன்ற இடங்களில் அடைந்து கொள்கின்றனர். பொது இடங்களில் எண்ணிக்கை குறையவும் அதிகம் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook
Web Title:Indian monsoon and coronavirus spread india covid 19 pandemic