Advertisment

ஆங்கிலோ இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian parliament Anglo-Indian quota

Indian parliament Anglo-Indian quota

Indian parliament Anglo-Indian quota : இந்திய நாடாளுமன்றத்தில் ஆங்கிலோ இந்தியர்களுக்கு தரப்பட்ட 2 இடங்களுக்கான இட ஒதுக்கீட்டினை ரத்து செய்வது குறித்து யோசனை செய்து வருகிறது இந்திய அரசு.

Advertisment

யார் இந்த ஆங்கிலோ இந்தியர்கள் ?

ஆங்கிலோ இந்தியர்கள் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் ஆங்கிலயர்கள் கிழக்கிந்திய கம்பெனி மூலமாக இந்தியா வந்த நாட்கள் வரை செல்ல வேண்டும். கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள் இந்திய பெண்களை மணம் முடித்துக் கொள்ள கொள்கைகளும் அந்த கம்பெனி வைத்திருந்தது.

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...

இந்திய அரசு சட்டம் 1935-ல் தான் முதன்முதலில் ஆங்கிலோ-இந்தியன் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இந்திய அரசியல் சாசனம் உட்பிரிவு 266(2)ன் படி ஆங்கிலோ இந்தியர்கள் என்பவர்கள் “ இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆணுக்கும் இந்திய பெண்ணுக்கும் இடையேயான திருமண பந்தங்களால் உருவான ஒரு குழுவே ஆங்கிலோ இந்தியன் என்று அழைக்கப்படுகிறார்கள்.” என்று கூறியுள்ளது.

ஆங்கிலோ இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது இந்தியா முழுவதும் தங்களை ஆங்கிலோ இந்தியர்களாக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் வெறும் 296 நபர்கள் தான். ஆனால் அனைத்திந்திய ஆங்கிலோ இந்தியன் அசோசியேசன் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாதின் இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதன் தலைவர் பேரி ஓ’ப்ரியேன் பிரதமருக்கும், ரவிசங்கருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசு தரவுகளை நாங்கள் சரி பார்த்தோம். மேற்கு வங்கத்தில் 9 ஆங்கிலோ இந்தியர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் என் குடும்பத்தில் இருப்பவர்களைக் காட்டிலும் அங்கு நிறைய நபர்கள் இருப்பார்கள் என்று நம்புகின்றேன். உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் ஒருவரும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அம்மாநில சட்டமன்றங்களில் ஆங்கிலோ இந்தியர்கள் எம்.எல்.ஏக்களாக இருக்கிறார்கள் என்று கூறினார். மேலும் இந்த பேட்டிசனில் ஏற்கனவே 750க்கும் மேற்பட்ட ஆங்கிலோ இந்தியர்களின் கையெழுத்தினை பதிவு செய்துள்ளனர். மொத்த இந்தியாவிலும் எத்தனை ஆங்கிலோ இந்தியர்கள் இருக்கின்றார்கள் என்ற கணக்கு யாருக்கும் தெரியவில்லை. நிச்சயமாக வெறும் ஆயிரக்கணக்கில் இருக்கமாட்டோம். அதே போன்று கோடியில் இருப்போம் என்றும் கூறவில்லை. ஆனால் கணிசமான அளவில் நாங்கள் இருக்கின்றோம் என்று கூறினார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

முன்னாள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட நெய்ல் ஓ’பிரையனின் மகனும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டேரேக் ஓ’பிரையனின் சகோதரருமான இந்த பேரி ஓ’பிரையன் சில காலம் பாஜகவில் சேர்ந்திருந்தார். இந்த மசோதா குறித்து மாநிலங்களவையில் டேரெக் பேசிய போது ஐரிஷ் குடும்பத்தை சேர்ந்த அவரின் மூதாதையர்கள் இந்தியா வந்தது குறித்தும் இந்தியாவின் அரசியல் சாசனம் எப்படி ஆங்கிலோ இந்தியர்களை இந்தியாவிலேயே தங்க வழி செய்தது என்றும் கூறினார். பாகிஸ்தானில் இருந்த ஆங்கிலோ இந்தியர்கள் கனடா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் குறியேறிவிட்டனர்.

Indian parliament Anglo-Indian quota

தற்போது உண்மையாகவே எவ்வளவு  ஆங்கிலோ இந்தியர்கள் இந்தியாவில் உள்ளனர்?

ஓ’பிரையனின் கடிதத்தில் இந்தியாவில் இருக்கும் ஆங்கிலோ இந்தியர்களின் எண்ணிக்கை 296-ஐ விட நிச்சயமாக மிக அதிகமாகவே இருக்கிறது. அதற்கான ஆவண ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்திந்திய ஆங்கிலோ இந்தியன் அசோசியேசன் தலைவராக இருக்கின்றேன். இந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான ஆனால் மிகப்பெரிய ஆங்கில இந்திய கமிட்டிக்கான ஒரு அமைக்காக இது இருக்கிறது. இந்தியா முழுவதும் சுமார் 20 மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்கலில் 62 கிளைகள் இயங்கி வருகிறது. சென்னையில் மட்டும் 6 கிளைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 600 முதல் 1000 நபர்கள் இருக்கின்றார்கள். பெங்களூரு மற்றும் கல்கத்தாவில் இருக்கும் ஒவ்வொரு கிளைகளிலும் 700க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். மதுரை, கொச்சின், திருச்சி, ஐதராபாத், செகந்தராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பில்300-400 வரையில் உறுப்பினர்கள் உள்ளனர்.

மகாராஷ்ட்ராவில் மட்டும் மும்பை, புனே, நாக்பூர், புசவல், தெவ்லாலி, நாசிக், இக்கத்பூரி ஆகிய இடங்களில் ஆங்கிலோ இந்தியர்கள் இருக்கின்றார்கள். உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, ஆக்ரா, அலகாபாத், ஜான்சி ஆகிய இடங்களில் இந்த அசோசியேசன் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கிளைகளில் நாளுக்கு நாள் டெல்லி, கூர்கான், ஃபரிதாபாத், நொய்டா, காஸியாபாத் பகுதிகளிலும் உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். முன்னாள் ரயில்வே காலனியாக இருந்த அசன்சோல், காரக்பூர், அத்ரா (மேற்கு வங்கம்), குர்தா ரோடு (ஒடிசா), ஜபல்பூர், பிலாஸ்ப்பூர் (முத்திய பிரதேசம்), விஜயவாடா (ஆந்திரா) பகுதிகளிலும் இவர்களின் கிளைகள் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை உறுதி செய்யும் அரசியல் சாசனம் எது?

நாடாளுமன்ற மக்களவையில் இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் பரிந்துரை செய்ய இந்திய அரசியல் சாசனம் 331 உட்பிரிவு உரிமை அளிக்கிறது. மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இம்மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற பட்சத்தில் குடியரசுத் தலைவர்கள் இரண்டு நபர்களுக்கு மிகாமல் மாநிலங்களவையில் இரண்டு உறுப்பினர்களை பரிந்துரை செய்யலாம். ஃப்ராங்க் அந்தோணி என்பவர் ஜவஹர்லால் நேருவிடம் கூறிய கருத்துகளின் அடிப்படையில் அரசியல் சாசனத்தில் இப்பிரிவு இணைக்கப்பட்டது.

அரசியல் சாசனம் பிரிவு 333 இம்மக்களின் சட்டமன்ற பிரதிநிதித்துவம் குறித்தது. சட்டமன்றத்தில் போதுமான அளவு இம்மக்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்று ஆளுநர் கருதினால் அவர் ஒரு ஆங்கிலோ இந்தியரை சட்டமன்றத்தில் பரிந்துரை செய்யலாம் என்று கூறுகிறது. தற்போது ஆந்திரா, பிகார், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 14 மாவட்டங்களுக்கான சட்டமன்றங்களில் தலா ஒரு ஆங்கிலோ இந்தியர் உறுப்பினராக இருக்கிறார்.

அரசியல் அமைப்பின் 10வது அட்டவணைப்படி, பரிந்துரை செய்யப்படும் ஆங்கிலோ இந்தியர்கள் மக்களவை மற்றும் சட்டமன்றங்களிலும் 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு கட்சியின் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை அவர்கள் அவ்வாறு இணைந்தால் கட்சி தாவல் சட்டத்திற்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களாவார்கள். மற்ற உறுப்பினர்களை போலவே இவர்களும் இயங்க இயலும். ஆனால் குடியரசுத் தலைவரால் இவர்கள் தேர்வு செய்யப்படுவதால் அதற்கான தேர்தலில் மட்டும் அவர்களால் போட்டியிட இயலாது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, ​​2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இங்க்ரிட் மெக்லியோட் இரண்டு முறை பரிந்துரை செய்யப்பட்டனர்.  பிரான்சிஸ் பாந்தோம் 2004 இல் மக்களவைக்கு வந்தார். சார்லஸ் டயஸ், ஒரு அரசு ஊழியர் 2009ல் பரிந்துரை செய்யப்பட்டார். பாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசு ஜார்ஜ் பேக்கர் என்ற நடிகரையும், கேரளாவைச் சேர்ந்த ஆசிரியரான ரிச்சர்ட் ஹேவையும் மோடி 2014 இல் பரிந்துரை செய்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று 6 மாதங்கள் ஆன நிலையிலும் இந்த இரண்டு இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது.

Parliament Parliment Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment