Advertisment

இந்தியாவில் கருக்கலைப்பு சட்டம் என்ன சொல்கிறது? திருமணமாகாத கர்ப்பிணி பெண் வழக்கு தொடர்ந்தது ஏன்?

விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் விதவைகளின் விஷயத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் உறவு நிலை மாற்றத்தை சட்டம் அங்கீகரிக்கிறது. ஆனால், திருமணமாகாத பெண்களுக்கு அங்கீகரிக்கவில்லை. சட்டம் மற்றும் சட்டமியற்றுபவர்கள் இந்த பிரச்னையை நிவர்த்தி செய்வதிலிருந்து விலகிவிட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India abortion law, abortion law in India, India abortion rights, இந்தியா, கருக்கலைப்பு சட்டம், India abortion debate, abortion law, Tamil Indian Express

விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் விதவைகளின் விஷயத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் உறவு நிலை மாற்றத்தை சட்டம் அங்கீகரிக்கிறது. ஆனால், திருமணமாகாத பெண்களுக்கு அங்கீகரிக்கவில்லை. சட்டம் மற்றும் சட்டமியற்றுபவர்கள் இந்த பிரச்னையை நிவர்த்தி செய்வதிலிருந்து விலகிவிட்டனர்.

Advertisment

கடந்த வாரம் டெல்லி உயர்நீதிமன்றம் தனது மனுவை நிராகரித்ததையடுத்து, கருக்கலைப்பு செய்யக் கோரி 25 வயது கர்ப்பிணிப் பெண் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 2003 ஆம் ஆண்டு மருத்துவக் கருவுறுதல் சட்டம் விதி 3பி-ஐயும் அந்தப் பெண் எதிர்த்துள்ளார். இந்த சட்டம் 20 முதல் 24 வாரங்களுக்கு உள்ளான கருவை சில வகை பெண்கள் மட்டுமே கர்ப்பத்தைக் கலைக்க அனுமதிக்கிறது.

இந்த வழக்கு இந்தியாவில் இனப்பெருக்க உரிமை மற்றும் பெண் தற்சார்பு மற்றும் பெண் முகமையை அங்கீகரிப்பது பற்றிய மிக முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த வாரம், 25 வயது பெண் ஒருவர் 23 வாரம், 5 நாட்கள் வயது உள்ள கர்ப்பத்தை கலைப்பதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரினார்.

தற்போது டெல்லியில் வசிக்கும் மணிப்பூரைச் சேர்ந்த பெண், கருத்தொற்றுமை உறவின் விளைவாக கர்ப்பம் ஏற்பட்டதாகவும், தனது துணை தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் கர்ப்பத்தை கலைக்க விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், திருமணமாகாத பெண் கர்ப்பம் அடைந்துள்ளார் என்ற களங்கம் ஏற்படும் என்று அஞ்சுவதாகவும் அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் முடிவு என்ன?

டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அந்தப் பெண்ணுக்கு கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. வாய்மொழி உத்தரவில், நீதிபதிகள் பெண்ணின் கர்ப்பத்தை பிரசவம் செய்யும் காலம் வரை கொண்டு செல்லவும், புதிதாகப் பிறந்த குழந்தையை தத்தெடுப்பதற்காக விட்டுவிடவும் தெரிவித்தனர். மேலும், இந்த செயல்முறைக்கு தனிப்பட்ட முறையில் பணம் செலுத்தவும் முன்வந்தனர்.

“குழந்தையைக் கொல்ல நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம்; 23 வாரங்கள் முடிந்துவிட்டன. சாதாரண பிரசவத்திற்கு குழந்தை எத்தனை வாரங்கள் வயிற்றில் இருக்கும்? இன்னும் எத்தனை வாரங்கள் உள்ளன? குழந்தையை தத்தெடுக்கும் ஒருவரிடம் கொடுங்கள். ஏன் குழந்தையைக் கொல்கிறாய்?” என்று நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பினர்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து, மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

கருக்கலைப்பு பற்றிய இந்தியாவின் சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய தண்டனைச் சட்டம், 1860 இன் பிரிவு 312, கருச்சிதைவு பெண்ணின் உயிரைக் காப்பாற்றும்போது தவிர, கர்ப்பிணிப் பெண்ணின் சம்மதத்துடன் கருச்சிதைவு ஏற்பட்டாலும்கூட, தானாக முன்வந்து கருச்சிதைவை ஏற்படுத்துவது குற்றமாகும். கருக்கலைப்புக்காக அந்தப் பெண்ணே, அல்லது மருத்துவப் பயிற்சியாளர் உட்பட வேறு எவரும் வழக்குத் தொடரப்படலாம் என்பதே இதன் பொருள்.

1971 ஆம் ஆண்டில், கருக்கலைப்புக்கு அணுகுவதை தாராளமயமாக்க மருத்துவக் கருவுறுதல் சட்டம் (எம்.டி.பி சட்டம்) அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனெனில், இந்த தடைசெய்யப்பட்ட குற்றவியல் விதியானது கர்ப்பத்தைக் கலைப்பதற்கு பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான முறைகளைப் பயன்படுத்துவதற்கு வழிவகுத்தது.

எம்.டி.பி சட்டம் இரண்டு நிலைகளில் ஒரு மருத்துவ பயிற்சியாளரால் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்தது.

கருத்தரித்ததிலிருந்து 12 வாரங்கள் வரை கர்ப்பத்தைக் கலைக்க ஒரு மருத்துவரின் கருத்து தேவை.

12 மற்றும் 20 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பங்களைக் கலைக்க இரண்டு மருத்துவர்களின் கருத்து தேவை - கர்ப்பத்தின் தொடர்ச்சி கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா அல்லது குழந்தை பிறந்தால், அவளது உடல் அல்லது மன ஆரோக்கியத்திற்கு கடுமையான காயத்தை ஏற்படுத்துமா, அந்த பெண்ணின் கர்ப்பத்தைக் கலைப்பதற்கு ஒப்புக்கொள்வதற்கு முன், அவர் உடல் அல்லது மனரீதியாக பாதிக்கப்படுவாரா, தீவிரமாக ஊனமுற்றவராக இருப்பது போன்ற உடல் அல்லது மனநல குறைபாடுகளால் பாதிக்கப்படும் கணிசமான ஆபத்து உள்ளதா என்பதை மருத்துவர்கள் தீர்மானிக்க வேண்டும்.”

2021 ஆம் ஆண்டில், நாடாளுமன்றம் இந்த சட்டத்தை திருத்தியது. 20 வாரங்கள் வரயிலான கருவை ஒரு மருத்துவரின் கருத்தின் படி கலைக்கலாமா என்ற முடிவுக்கு அனுமதித்தது. 20 முதல் 24 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பத்தைக் கலைக்க திருத்தப்பட்ட சட்டத்தின்படி இரண்டு மருத்துவர்களின் கருத்து தேவைப்படுகிறது.

இரண்டாவது வகையில், கருக்கலைப்பு கோருவதற்கு தகுதியுடைய பெண்களின் ஏழு பிரிவுகளை சட்ட விதிகள் குறிப்பிட்டுள்ளன. எம்.டி.பி சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிகளின் பிரிவு 3பி பின்வருமாறு கூறுகிறது: “இந்த சட்டத்தின் உட்பிரிவு (2) பிரிவு 3 இன் உட்பிரிவு (பி) இன் கீழ், இருபத்தி நான்கு வாரங்கள் வரையிலான கர்ப்பத்ததைக் கலைப்பதற்கு பின்வரும் வகை பெண்கள் தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள். அதாவது:

(a) பாலியல் வன்கொடுமை அல்லது கற்பழிப்பு அல்லது பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்கள், அல்லது முறையற்ற உறவுகளால் கர்ப்பமடைந்தவர்கள் கர்ப்பத்தைக் கலைக்கத் தகுதியுடையவர்கள்.

(b) 18 வயது நிரம்பாத சிறுமிகள் கர்ப்பத்தைக் கலைக்கத் தகுதியுடையவர்கள்

(c) கர்ப்பத்தின் போது திருமண நிலை மாற்றம் (விதவை மற்றும் விவாகரத்து);

(d) உடல் குறைபாடுடைய பெண்கள் <மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின்படி பெரிய குறைபாடு இருந்தால் கர்ப்பத்தைக் கலைக்கத் தகுதி உடையவர்கள்.

(e) மனநலம் குன்றியவர்கள் உட்பட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள்;

(f) பெண்ணின் உயிருடன் ஒத்துப்போகாமல் இருப்பதற்கு கணிசமான ஆபத்துள்ள கருவின் குறைபாடு அல்லது குழந்தை பிறந்தால், அது போன்ற உடல் அல்லது மன அசாதாரணங்களால் கடுமையாக ஊனமுற்றவராக ஆகலாம் என்ற பெண்கள்

(g) அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் மனிதாபிமான சூழல்கள் அல்லது பேரிடர் அல்லது அவசரகால சூழ்நிலைகளில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள்.

கர்ப்பிணிப் பெண்ணுக்கும் அவருடைய துணைக்கும் இடையிலான உறவு நிலையின் சூழ்நிலைகளில் மாற்றத்தை சட்டம் அங்கீகரிக்கிறது - விவாகரத்து மற்றும் விதவையின் விஷயத்தில் அங்கீகரிக்கிறது ஆனால், இது திருமணமாகாத பெண்களுக்கு நிலைமையை கற்பனை செய்யவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் கூறுவது சட்டத்தில் உள்ள இந்த இடைவெளியைத்தான்.

சட்டத்தில் ஏன் இந்த இடைவெளி?

1971 ஆம் ஆண்டில், எம்.டி.பி சட்டம் இயற்றப்பட்டபோது, ​​அது அடிப்படையில் திருமணமான பெண்களை மையமாக வைத்து ஒரு ஒழுக்கவாதப் பார்வையின் மூலம் வடிவமைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட சட்டமும் அந்தப் பார்வையை மாற்றவில்லை.

“இந்தியாவில் பாதுகாப்பான கருக்கலைப்பு சேவைகளை அணுகுவதற்கான சட்ட ரீதியான தடைகள்: ஒரு உண்மை கண்டறியும் ஆய்வு" என்ற 2021 அறிக்கை, இனப்பெருக்க உரிமைகளுக்கான மையம், தேசிய சட்டப் பல்கலைக்கழகம், டெல்லி மற்றும் நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா பல்கலைக்கழகம், பெங்களூர் ஆகியவை இந்த கவலைகளை எடுத்துக்காட்டுகின்றன.

“எம்டிபி சட்டத்தின் மீதான நாடாளுமன்ற விவாதங்கள், தாராளவாத கருக்கலைப்புச் சட்டம் பெண்களிடையே பாலியல் முறைகேட்டை ஊக்குவிக்கும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கவலைப்பட்டதை வெளிப்படுத்துகின்றன. இந்த கவலையை நிவர்த்தி செய்து, அரசாங்கம், அதன் அமைச்சர்கள் மூலம், கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்களில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் திருமணமானவர்கள் என்று நாடாளுமன்றத்திற்கு உறுதியளித்தது.

எம்.டி.பி சட்டம் 1971ம் உடன் இணைக்கப்பட்ட விஷயங்கள் மற்றும் காரணங்களின் அறிக்கை, தாய்மார்களில் பெரும்பாலானவர்கள் (sic) திருமணமான பெண்கள், மேலும் அவர்களின் கர்ப்பத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகிறது.

மற்றொரு பார்வை என்னவென்றால், இது திருமணமான பெண்களை மையமாகக் கொண்டிருந்தாலும், எம்.டி.பி என்பது பெண்கள் மற்றும் அவர்களின் இனப்பெருக்க உரிமைகளை மையமாகக் கொண்ட ஒரு சட்டம் அல்ல - மாறாக, கருக்கலைப்பு செய்யும் போது மருத்துவப் பயிற்சியாளர்கள் மீறக்கூடாத கட்டுப்பாடுகளை வரைந்த சட்டமாகும்.

“எம்.டி.பி சட்டம் என்பது ஒரு வழங்குநர் பாதுகாப்புச் சட்டமாகும், இது மருத்துவரை குற்றப் பொறுப்பிலிருந்து பாதுகாக்க முயர்சி செய்கிறது. மேலும், இது கர்ப்பிணிப் பெண்ணின் தேவைகள், இனப்பெருக்க உரிமை மற்றும் நிறுவனத்தை மையப்படுத்தாது. கருக்கலைப்புக்கான அணுகல் கர்ப்பிணிப் பெண்ணின் விருப்பப்படி இல்லை. இது மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்முறையாகும். இதன் மூலம், இந்த சட்டம் கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மருத்துவருக்கு மாற்றுகிறது மற்றும் கருக்கலைப்பு வழங்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க மருத்துவருக்கு அதிக வாய்ப்பை வழங்குகிறது” என்று 2021 அறிக்கை கூறியது.

அப்படியிருந்தும், கருக்கலைப்பு தொடர்பான இந்தியாவின் சட்டக் கட்டமைப்பு பெரும்பாலும் முற்போக்கானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், அங்கே வரலாற்று ரீதியாகவும் தற்போது கருக்கலைப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment