Advertisment

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பு தொகையை வழங்குவதில் என்ன சிக்கல்?

ஊரடங்கு காரணமாகவும், சுகாதாரத்துறைக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாலும் 12க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடுமையான நிதி பற்றாக்குறையால் திணறி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பு தொகையை வழங்குவதில் என்ன சிக்கல்?

Aanchal Magazine  

Advertisment

வியாழக்கிழமை 41வது ஜி.எஸ்.டி. கவுன்சில் நடைபெற்றது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையே, ஜி.எஸ்.டி.யின் கீழ் இழப்பீட்டு தொகையை பகிர்ந்தளிப்பது தொடர்பான பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில் மாநிலங்கள் மீதான நிதி சார் அழுத்தம் தொடர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழியாக, கூட்டத்தில் முன்மொழியப்பட்ட கடன் வாங்குவதற்கான இரண்டு விருப்பங்களையும் பல மாநிலங்கள் எதிர்த்தன.

ஏப்ரல் முதல் ஜூலை வரை நிலுவையில் உள்ள தொகை ரூ .1.5 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்ட நிலையில், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ஏப்ரல் முதல் நிலுவையில் உள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தேவை இந்த ஆண்டு சுமார் ரூ .3 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் செஸ் வசூல் சுமார் 65,000 கோடி ரூபாய் என்று எதிர்பார்க்கப்படுகிறது - இது 2.35 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு பற்றாக்குறை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Issues in GST compensation :

கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

கடன் வாங்குவதற்கான சட்டப்பூர்வ பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜூலை 2017 முதல் 2022 ஜூன் வரையிலான இடைக்கால காலத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடு செலுத்தப்பட வேண்டும் என்ற வாதத்தை உறுதிப்படுத்த இந்தியாவின் அட்டார்னி ஜெனரலின் வாதம் மேற்கோள் காட்டப்பட்டது. ஆனால் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியத்தைப் பயன்படுத்தி இழப்பீட்டு இடைவெளியைக் குறைக்க முடியாது. பற்றாக்குறையை பூர்த்தி செய்ய இழப்பீட்டு செஸ் வரி ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் நீட்டிக்கப்படலாம் என்று ஏஜி பரிந்துரைத்துள்ளார் என்று நிதி செயலாளர் அஜய் பூஷண் பாண்டே கூறினார்.

வருவாய் இடைவெளியை குறைக்க, அசாம் மற்றும் கோவா மாநில நிதி அமைச்சர்கள் தவிர்த்து அனைவரையும் கடன் வாங்க வலியுறுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தின் முடிவில் இரண்டு விருப்பங்கள் தெரிவிக்கப்பட்டது.

மாநில அரசுகளின் கருத்துகள் என்ன?

கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், புதுவை மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள், இந்த திட்டங்களுக்கு தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

கேரளா : நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசாக், இழப்பீட்டை குறைப்பது, ஜி.எஸ்.டி மற்றும் கொரோனா வைரஸால் ஏற்பட்ட வருவாய் இழப்பிற்கு இடையே வேறுபாட்டினை கொண்டுவருவது அரசியல் அமைப்பிற்கு விரோதனமானது என்று கூறினார். மொத்தம் ரூ .2.35 லட்சம் கோடியை கடன் வாங்க வேண்டுமானால் மாநிலங்களின் FRBM வரம்பை 1.5 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பஞ்சாப் : நிதி அமைச்சர் மன்ப்ரீத் பதல், இந்த விருப்பங்கள் மாநிலங்கள் மீது திணிக்கப்படுகிறது என்று கூறினார். மேலும் கடன் வாங்குவது என்பது, நிகழ் காலத்தில் வாழ எதிர்காலத்தை அடமானம் வைப்பதாகும் என்று கூறியுள்ளார்.

டெல்லி : டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த தொகையை வழங்காமல் இருப்பது, இந்திய கூட்டாட்சியின் மிகப்பெரிய துரோகம். மாநில சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசம் அந்தஸ்த்து வழங்கியிருப்பதால், இந்த இழப்பீட்டு இடைவெளியை குறைக்க ஆர்.பி.ஐயிடம் டெல்லியால் கடன் வாங்க இயலவில்லை என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்கம் :  மாநிலங்களால் கடன் வாங்குவது அவர்களின் கடன் சேவை பொறுப்பை அதிகரிக்கும் என்றும், அரசியலமைப்பு (நூற்று ஒன்றாவது திருத்தம்) சட்டத்தின் இழப்பீடு தொடர்பான பிரிவு 18-இன் வேறு எந்த விளக்கமும் நியாயமற்றது என்றும் நிதியமைச்சர் அமித் மித்ரா கூறினார். திருத்தத்தின் 18-வது பிரிவு, ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரையின் பேரில், ஜிஎஸ்டியை ஐந்து ஆண்டுகளாக அமல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க பாராளுமன்றம் உதவும் என்று கூறுகிறது.

இரண்டு விருப்பங்களின் விவரங்களை மாநிலங்கள் மத்திய அமைச்சகத்திடம் கேட்டுள்ளனர். இது தொடர்பான முடிவுகளை 7 வேலை நாட்களுக்குள் சமர்பிக்க வருவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டியின் முக்கியத்துவம் என்ன?

பெட்ரோலியம், ஆல்கஹால் மற்றும் முத்திரை தாள் வரி போன்றவற்றைத் தவிர்த்து, பெரும்பாலான வரிகளுக்கு வரிவிதிப்பு உரிமைகளை ஜி.எஸ்.டி.யின் கீழ் மாநிலங்கள் பெறவில்லை. ஜிஎஸ்டி கிட்டத்தட்ட 42% மாநிலங்களின் சொந்த வரி வருவாயையும், வரி வருவாய் 60% மாநிலங்களின் மொத்த வருவாயையும் கொண்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாகவும், சுகாதாரத்துறைக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாலும் 12க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடுமையான நிதி பற்றாக்குறையால் திணறி வருகிறது. இதனால் சம்பளம் அளிப்பதில் கால தாமதம் மற்றும் செலவீனங்கள் குறைப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வசூல் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி செயலாளர் தெரிவித்தார். வருவாய் மேலும் பாதிக்கப்படும் என்றும், பொருளாதாரம் இந்த ஆண்டு மந்த நிலையை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை கோவிட் -19 "கடவுளின் செயல்" என்று குறிப்பிட்டார், நடப்பு நிதியாண்டில் பொருளாதாரத்தின் சுருக்கத்தை ஏற்படுத்தும்.

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த பிரச்சனை எப்போது எழுந்தது, அது எவ்வாறு உருவானது?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2019ம் ஆண்டுக்கான இழப்பீட்டினை தருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் நிதி பற்றாக்குறை சிக்கல்கள் உருவாகின. அன்றில் இருந்து அடுத்தடுத்து இழப்பீட்டினை தர தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் பொருளாதார மந்தநிலை, ஆகஸ்ட் 2019இல் ஜிஎஸ்டி வருவாய் வசூலை பாதிக்கத் தொடங்கியது. கடந்த செப்டம்பரில் கோவாவில் நடந்த 37 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இழப்பீட்டுத் தொகை தொடர்பான சிக்கல்களை மத்திய அரசு ஒப்புக் கொண்டது. பிப்ரவரி மாத இறுதியில் இழப்பீட்டு நிதியில் செஸ் தொகை பிப்ரவரி இறுதிக்குள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

நவம்பர் 27, 2019 அன்று, ஜிஎஸ்டி கவுன்சில் ” கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி மற்றும் இழப்பீட்டு செஸ் வசூல் ஒரு "கவலைக்குரிய விஷயமாக" மாறியுள்ளதாகவும், இழப்பீட்டுத் தேவைகள் "பூர்த்தி செய்யப்பட வாய்ப்பில்லை" என்றும் எழுதியது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகைகள் அதற்குள் தாமதமாகத் தொடங்கியிருந்தன. பல மாநில நிதி அமைச்சர்கள் தங்கள் வருவாயின் பங்கை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியது குறித்து கவலை தெரிவிக்கத் தொடங்கியிருந்தன. அக்டோபர் மாதம் வரவிருந்த 2019 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களுக்கு ரூ .35,298 கோடியின் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை டிசம்பரில் செலுத்தப்பட்டது. அக்டோபர் மற்றும் நவம்பர் 2019-க்கான இழப்பீட்டு தொகையை மத்திய அரசு இரண்டு தவணைகளாக பிப்ரவரி 2020 மற்றும் ஏப்ரல் 2020-ல் வழங்கியது.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், டிசம்பர்-பிப்ரவரி மாதங்களுக்கு ரூ .36,400 கோடி ஜிஎஸ்டி இழப்பீடாகவும், மார்ச் மாதத்திற்கான ரூ .13,806 கோடியாகவும் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது, இது நிதியாண்டுக்கான மொத்த இழப்பீட்டுத் தொகையை ரூ .1.65 லட்சம் கோடியாகக் கொண்டது.

மேலும் படிக்க : மக்களவை, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களுக்கு ஒரே வாக்காளர் பட்டியல் : ஆலோசனையில் பிரதமர் அலுவலகம்

ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டம், 2017 இன் கீழ், ஐந்து ஆண்டுகளுக்கு (2017-22 இடைக்கால காலத்திற்கு) ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பிற்கு மாநிலங்களுக்கு இழப்பீடு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. 2015-16 ஆம் ஆண்டின் அடிப்படை ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 14% வளர்ச்சி விகிதத்தை மதிப்பிட்ட பின்னர் மாநிலங்களின் தற்போதைய ஜிஎஸ்டி வருவாய் மற்றும் பாதுகாக்கப்பட்ட வருவாய் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டின் அடிப்படையில் இழப்பீடு கணக்கிடப்படுகிறது.

2015-16 முதல் அதிகரித்த 14% என்ற உயர் விகிதம் பொருளாதார யதார்த்தங்களிலிருந்து விலக்கப்பட்டதாகக் காணப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலின் முதல் சில கூட்டங்களுக்கு தலைமை தாங்கிய அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 10.6% வருவாய் வளர்ச்சி விகிதத்தை முன்மொழிந்தார் (2015-16க்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் சராசரி அகில இந்திய வளர்ச்சி விகிதம்). கவுன்சில் கூட்ட பதிவுகள் 14% வருவாய் வளர்ச்சியின் பரிந்துரை "சமரச உணர்வில்" ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் காட்டுகிறது.

ஆர்.பி.ஐயுடன் கலந்தாலோசனை செய்து, ஜி.எஸ்.டி பற்றாக்குறையை குறைக்க ரூ. 97 ஆயிரம் கோடி நிதியை கடன் பெறலாம் என்றும் ஜி.எஸ்.டி. 5 வருடங்கள் முடிவடைந்த பின்னர், செஸ் நிதி இழப்பீட்டில் இருந்து இந்த தொகை திருப்பி செலுத்தப்படும் என்றும் முதலாவது விண்டோ உருவாக்கப்பட்டது. நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டத்தின் கீழ் கடன் பெறும் வரம்பில் 0.5% தளர்வு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. கொரோனா ஊரடங்கு சிறப்பு பொருளாதார பேக்கேஜ்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு கூறப்பட்ட மறுசீரமைப்பு திட்டங்கள் எல்லாம் நீக்கப்பட்டது. இதன் மூலம் வர்த்தகம், அதிகார பகிர்வுகள் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை அதிகரித்தல் போன்றவற்றை மேற்கொள்ள இயலும் என்றும் கூறப்பட்டது. இரண்டாவது விருப்பம் ஜிஎஸ்டி வசூல் குறைந்து வருவதாலும், தொற்றுநோயால் எதிர்பார்க்கப்படும் பற்றாக்குறை காரணமாகவும், ரூ .2.35 லட்சம் கோடி முழு பற்றாக்குறையையும் கடனாக வாங்குவதே இரண்டாவது விருப்பமாகும். இந்த விருப்பத்திற்கு இதுவரை எஃப்.ஆர்.பி.எம் தளர்வு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment