Advertisment

Explained: பிரிவு 144 தடை உத்தரவு என்றால் என்ன ?

Jammu and Kashmir Crisis: பிரிவு 144 நடைமுறைப்படுப்பட்ட பகுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் கூடுவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kashmir news today live updates

Kashmir news today live updates

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 என்றால் என்ன ?

Advertisment

பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது கலவரத்தின் அவசர நிலைகளில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 144 தடை உத்தரவு அமலாக்கப்படுகிறது. பிரிவு 144 நடைமுறைப்படுப்பட்ட பகுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் கூடுவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது.

இந்த அரசாணையை வழங்கும் அதிகாரம் அப்பகுதியின் மாவட்ட மாஜிஸ்திரேட்க்கு உண்டு.இன்டர்நெட் இணைப்பை தடுக்கவும் இந்த உத்தரவு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்த 144 தடை உத்தரவை எப்போதெல்லாம் நடைமுறைப்படுத்தலாம்?

சில குறிப்பிட்ட மக்களால் பொது அமைதிக்கும் ,பொது ஒழுங்கிற்கும் பங்கம் ஏற்படும் என்று யூகம் வந்தால், அந்தந்த இடங்களில் பிரிவு 144-ஐ அரசாங்கம் நடைமுறைப்படுத்தும். இந்த பிரிவின் கீழ், போலீஸ்,துணை ராணுவம் அல்லது பாதுகாப்புப் படையினரைத் தவிர பொது இடங்களில் லத்தி, கூர்மை ஆயுதங்கள் அல்லது துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை எந்த பொதுமக்களும் பொது இடத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட எந்த தடை உத்தரவும் இரண்டு மாதங்களுக்கு மேல் நடைமுறையில் இருக்காது. இருந்தாலும் ஒரு மாநில அரசாங்கம் மனித உயிர்களை காப்பாற்றுவதற்காகவோ,கலவரங்களை தடுப்பதற்க்காகவோ, இந்த அரசாணையை முதலில் பிறப்பித்த நாளிலிருந்து அதிக பட்சமாக ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கலாம்.

144 தடை உத்தரவை மீறுவோருக்கு என்ன தண்டனை?

சட்டவிரோதமாகக் கூடுவோர்களுக்கு "கலவரத்தில் ஈடுபடுதல்" என்ற வழக்கில் பதிவு செய்து அதிகபட்சம் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கும் . அந்த சட்டவிரோத கும்பலை கலைக்கும் காவல்துறையை தடுத்து நிறுத்துவதும் சட்டப்படி குற்றம்.

ஊரடங்கு உத்தரவிற்கும்,பிரிவு 144-ன் கீழுள்ள தடை உத்தரவுகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஊரடங்கு உத்தரவு என்பது வேறு, 144 பிரிவு தடை சட்டம் என்பது வேறு.  மிகக் கடுமையான சூழ்நிலைகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காலகட்டங்களில் போலீஸ் அனுமதியின்றி மக்கள் நடமாடவோ, வீட்டை விட்டு வெளிவரவோ தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகின்றன, சந்தைகள், பள்ளிகள் மூடப்பட வேண்டும்.

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment