Advertisment

Explained: ஜம்மு- காஷ்மீரில் இந்தத் தேர்தல் ஏன் வித்தியாசமானது ?

310 தொகுதி மேம்பாட்டு கவுன்சில் பதவிக்கான தேர்தலை ஜம்மு-காஷ்மீர் சந்திக்கிறது.சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய பின்பு ஜம்மு- காஷ்மீர் சந்திக்கும் முதல் தேர்தல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Explained : jammu kashmir Block Development Council polls

Explained : jammu kashmir Block Development Council polls

கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி, ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. அதன் பிறகு , 310 தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் பதவிக்கான தேர்தலை ஜம்மு-காஷ்மீர் இன்று சந்திக்கிறது.

Advertisment

தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவில் இருந்த போதிலும், மாநிலத்தின் முக்கிய மூன்று பிரதானக் கட்சிகள்  தேர்தலை புறக்கணித்த போதிலும், இந்த தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் தேர்தல் நடக்கின்றது  .

எதற்காக இந்த தேர்தல்: 

ஜம்மு- காஷ்மீர் பஞ்சாயத் ராஜ் அமைப்பின் படி,தொகுதி மேம்பாட்டு கவுன்சில் இரண்டாவது கட்ட நிர்வாக முறையாக பின்பற்றப்படுகிறது. முதல் கட்ட பஞ்சாயத்து நிர்வாக முறையாக -  கிராம பஞ்சாயத்து (ஹல்கா)  இருக்கிறது. மூன்றாவது கட்ட  உச்சி நிர்வாகமாக, மாவட்ட மேம்பாட்டு வாரியம் இயங்கும்.

இதுவரை, ஜம்மு-காஷ்மீரின் வரலாற்றில், தொகுதி மேம்பாட்டு கவுன்சிலும், மாவட்ட மேம்பாட்டு வாரியமும்  செயல்முறைக்கு வரவே  இல்லை . 1978, 2001, 2011, 2018 போன்ற ஆண்டுகளில் மட்டும் தான் கிராம பஞ்சாயத்துக்கான தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது,

ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத் ராஜ் சட்ட விதியின் படி, கிராம பஞ்சாயத்து தலைவர்களும், நிர்வாகிகளும் சேர்ந்து 310 தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். இந்த தொகுதி மேம்பாட்டு கவுன்சிலில் இருப்பவர்கள் மாவட்ட மேம்பாட்டு வாரியங்களுக்கான தலைவர்களை நியமிப்பார்கள்.

இந்த தேர்தல் ஏன் வித்தியாசமானது ?  

ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக தொகுதி மேம்பாட்டு கவுன்சிலுக்கான தேர்தல் நடக்கின்றது என்பதையும்  தாண்டி, அவை தனித்துவமான சூழ்நிலைகளில் நடத்தப்படுகின்றன.

ஆகஸ்ட் 5 முடிவுக்கு பின் நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும்,காங்கிரசும்  இந்த தேர்தலை புறக்கணித்துவிட்டனர்.

 

பாஜக கட்சியைத் தவிர அனைத்து முக்கியத் தலைவர்களும்  (குறிப்பாக, மூன்று முன்னாள் முதலமைச்சர்களான - பாரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ) வீட்டுக் காவலில் இருக்கும் நிலையில் இந்த தேர்தல் நியாமான முறையில் நடப்படுகிறதா?  என்ற கேளிவியும் எழுந்துள்ளது.

இதற்கு, பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி ஷைலேந்திர குமார், " நாங்கள் பங்கு பெறாததால் , தேர்தல் நியமான முறையில் நடத்தப்பட வில்லை என்று தலைவர்கள் கருத்து சொல்வது ஏற்புடையதல்ல"  என்று தெரிவித்தார்.

யார் களத்தில் உள்ளனர்?

310 காலியிடங்களுக்காக 1,092 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில், 853 சுயேச்சை வேட்பாளர்களாகவும், 218 பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். மேலும், 33 சதவீதத்தை பெண்களுக்காக ஒத்துகப்பட்டுள்ளன  என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டு போடுபவர்கள் பற்றி:   

கடந்த ஆண்டு( 2018 ஜம்மு- காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல் ) தேர்தெடுக்கப்பட்ட  3,652 கிராம தலைவர்களும், 23,629 கிராம நிர்வாகிகளும்  இன்று நடக்கவிருக்கும் தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

ஆனால் .... பல்வேறு காரணங்களுக்காக, காஷ்மீர் பகுதியில் மட்டும் 61 சதவீத கிராம நிர்வாகிகள் பொறுப்பு காலியாக உள்ளது ( துல்லியாமக - 18, 883 த்தில்  11,264  பணியிடங்கள் காலியாக உள்ளன). கிராமத் தலைவர்கள் பொறுப்பில் 34 சதவீதம் கலியிடமாகவே உள்ளன.

ஒரு வருடத்திற்குள் காலியாக உள்ள பதவிகள் நிரப்பப்படும் என்றும், தேவைப்பட்டால் அந்த இடங்களுக்கான தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் தேர்தல் தனித்தனியாக நடத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி,  குமார் தெரிவித்தார்.

தொகுதி மேம்பாட்டு கவுன்சில்  தேர்தலுக்குப் பிறகு என்ன ? 

ஜம்மு- காஷ்மீரின் மூன்றாம் கிராம நிர்வாக அடுக்கான மாவட்ட மேம்பாட்டு வாரியத்தை கொண்டு வர மத்திய அரசு ஆர்வம் காட்டும்.  இந்த வாரியம் மாவட்டத்தின் அனைத்து வளர்ச்சிகளையும் மேற்பார்வையிடும்.

 

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment