Advertisment

சி.பி.எம் வேட்பாளர் தேர்தல் செல்லாது - கேரள ஐகோர்ட்: கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் எஸ்சி என உரிமை கோரலாமா?

ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவரான சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஏ. ராஜா, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட தகுதியற்றவர் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

author-image
WebDesk
New Update
dalit, christian, scheduled caste, kerala high court, a raja, reservation, indian express, express explained," />

கேரள உயர் நீதிமன்றம்

இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியின் சி.பி.எம் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ராஜாவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று கேரள உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது. ஞானஸ்ஞானம் பெற்று கிறிஸ்தவரான அவர், பட்டியல் இன (எஸ்சி) உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிடத் தகுதியற்றவர் என்று அறிவித்துள்ளது.

Advertisment

2021 தேர்தலில் ஏ. ராஜாவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் டி. குமார் தாக்கல் செய்த மனுவில் கேரள உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது. ஏ. ராஜா ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர் என்றும் அவர் மதம் மாறிய பிறகு எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, நீதித்துறை மற்றும் சட்டமன்றத்தில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்தை நீட்டிக்க முடியுமா என்ற கேள்வியை பரிசீலனை செய்கிறது.

மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

நவம்பர் 2022-ல், 'பொது நல வழக்கு மற்றும் பிறர் எதிரி மத்திய அரசு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையை பரிசீலித்தது. அப்போது, ​​தற்போதைய வழக்கில் சவால் செய்யப்பட்ட அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை, 1950 வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் அமைந்தது என்று மத்திய அரசு சமர்ப்பித்தது. கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய சமூகத்தின் உறுப்பினர்களால் ஒருபோதும் பின்தங்கிய நிலை அல்லது ஒடுக்குமுறையை எதிர்கொள்ளப்படவில்லை என்று நிறுவியது.

மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தலித்துகள் இஸ்லாம் அல்லது கிறித்துவ மதத்திற்கு மாறுவதற்குக் காரணம், இந்து மதத்தில் உள்ள தீண்டாமை என்ற அடக்குமுறை அமைப்பில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும், இது இரண்டு மதங்களிலும் இல்லை என்றும் கூறியுள்ளது.

மதம் மற்றும் மொழி ரீதியான சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கையின் மறுப்புக் குறிப்பையும் மேற்கோள் காட்டி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் சாதி அமைப்பை அங்கீகரிக்காத வெளிநாட்டு மதங்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மதம் மாறியவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்குவது அந்த மதங்களில் ஜாதி அமைப்பை அறிமுகப்படுத்துவதாக அமையும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கு முன், அக்டோபர் 7, 2022 அன்று, முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில், வரலாற்று ரீதியாக பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, பின்னர் மதங்களுக்கு மாறிய நபர்களுக்கு எஸ்சி அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக, மூன்று பேர் கொண்ட ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. தவிர, அரசியலமைப்பின் 341-வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவரின் உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம் 2024-ல் தனது அறிக்கையை சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ தலித்துகளுக்கான இடஒதுக்கீடு குறித்த கேள்வி உச்ச நீதிமன்றத்தில் பதிலளிக்கப்படவில்லை.

அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை, 1950 என்றால் என்ன?

1950 ஆம் ஆண்டில், அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது, ​​அரசியலமைப்பின் (பட்டியல் சாதிகள்) ஆணை, அரசியலமைப்பின் 341-வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்டது. அதில் குடியரசுத் தலைவர் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் சாதிகள், இனங்கள் அல்லது பழங்குடியினர் அல்லது பகுதிகளை பகிரங்கமாக அறிவிக்கலாம். “இந்த சாதிகள், இனங்கள் அல்லது பழங்குடியினர் அல்லது சாதிகள், இனங்கள் அல்லது பழங்குடியினருக்குள் உள்ள குழுக்கள் அல்லது குழுக்களைக் குறிப்பிடவும், இந்த அரசியலமைப்பின் நோக்கங்களுக்காக அவை பட்டியல் சாதியாகக் கருதப்படும்.” என்று அறிவிக்கலாம்.

உண்மையான உத்தரவு 1950-ல் நிறைவேற்றப்பட்டது மற்றும் இந்துக்களை மட்டுமே எஸ்சி-களாக வகைப்படுத்த அனுமதித்தது. இருப்பினும், அரசியல் அழுத்தத்தை அடுத்து 1956-ல் சீக்கியர்களையும், 1990-ல் பௌத்தர்களையும் உள்ளடக்கியதாக அது பின்னர் திருத்தப்பட்டது. இந்தத் திருத்தங்கள் இருந்தபோதிலும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களை கிரிஸ்துவர் மற்றும் முஸ்லிம்களுக்குள் எஸ்சி என்ற வரையறையின் கீழ் சேர்க்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

யு.பி.ஏ அரசாங்கத்தின் இரண்டு அறிக்கைகள்

அக்டோபர் 2004-ல், டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான யு.பி.ஏ அரசாங்கம், மதம் மற்றும் மொழி ரீதியான சிறுபான்மையினரிடையே சமூக மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலனுக்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக, முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில், மதம் மற்றும் மொழி ரீதியான சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தை நிறுவியது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மே 2007-ல், ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. பட்டியல் சாதியினரின் வகைப்பாட்டில் இருந்து மதத்தை முழுமையாக நீக்குவதற்கு பரிந்துரைத்தது. இடஒதுக்கீடுகள் மதம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும், சமூக-பொருளாதார அளவுகோல்கள் அத்தகைய வகைப்படுத்தலுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்தது. இருப்பினும், போதுமான கள தரவுகள் இல்லாத காரணத்தினால் இந்த பரிந்துரைகளை நாடாளுமன்றம் நிராகரித்தது.

இந்த தெளிவின்மையைத் தீர்க்க, யு.பி.ஏ அரசாங்கம் 2005-ல் இந்திய முஸ்லிம்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆராய சச்சார் குழுவை அமைத்தது. மதமாற்றத்திற்குப் பிறகும் தலித் முஸ்லீம்களின் நிலைமை மேம்படாமல் இருப்பதைக் கவனித்த கமிட்டி 2006-ல் தனது அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை முஸ்லீம்களை எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளுக்கு கீழே பின்தங்கிய நிலையில் வைத்துள்ளது. முஸ்லிம்களின் மக்கள்தொகை சதவீதத்திற்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற முடிவெடுக்கும் பதவிகளில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள பொருத்தமின்மை என பல பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Kerala Dalit Cpm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment