Advertisment

புகைப்பிடிக்காதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது?; புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

New research: Clues about origins of lung cancer in non-smokers: புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத மக்களில் நுரையீரல் புற்றுநோய் எப்படி எற்படுகிறது; புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

author-image
WebDesk
New Update
புகைப்பிடிக்காதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது?; புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத மக்களில் நடத்தப்பட்ட, நுரையீரல் புற்றுநோயின் மரபணு பகுப்பாய்வு, இந்த புற்றுக் கட்டிகளில் பெரும்பாலானவை உடலில் இயற்கையான செயல்முறைகளால் ஏற்படும் பிறழ்வுகளின் குவிப்பிலிருந்து எழுகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளது.

Advertisment

இந்த ஆய்வை அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் (NCI) ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு சர்வதேச குழுவுடன் இணைந்து தேசிய சுகாதார நிறுவனம் (NIH) நடத்தியுள்ளது.

புகைபிடிக்காத மக்களில் நுரையீரல் புற்றுநோய் மூலக்கூறுகளின் மூன்று துணை வகைகள் இருப்பதை கண்டறிந்துள்ளதாக நேச்சர் ஜெனடிக்ஸில் திங்களன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு, புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத மக்களில் நுரையீரல் புற்றுநோய் எப்படி எழுகிறது என்ற மர்மத்தைத் திறக்க உதவும். மேலும் துல்லியமான மருத்துவ சிகிச்சையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் என்று தேசிய சுகாதார நிறுவனம் அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

புற்றுநோய் கட்டி திசுக்களின் மரபணு மாற்றங்களை வகைப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முழு மரபணு வரிசைமுறையைப் பயன்படுத்தினர். இதனை புற்றுநோய் (non-small cell lung cancer) கண்டறியப்பட்ட, புகைப்பழக்கம் இல்லாத 232 பேரின் சாதாரண திசுக்களுடன் பொருத்தினர். இந்த புற்றுநோய் நோயாளிகள் தங்கள் புற்றுநோய்க்கு இன்னும் சிகிச்சை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புகைபிடிக்காதவர்களின் புற்றுநோய் கட்டி மரபணுக்களில் பெரும்பாலானவை, எண்டோஜெனஸ் செயல்முறைகளின் சேதத்துடன் தொடர்புடைய பரஸ்பர விளைவுகளைக் கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர், அதாவது உடலுக்குள் நடக்கும் இயற்கை செயல்முறைகளின் சேதத்தால் ஏற்பட்டவை என கண்டறிந்துள்ளனர்.

Source: NIH (US)

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Cancer
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment