Advertisment

அதிக பாதிப்பை ஏற்படுத்துமா கொரோனாவின் B.1.617 மாதிரி?

முதல் தடுப்பூசி ஷாட்டுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்கள். அவர்கள் தங்களின் ஜீனோம் மாதிரிகளை வரிசைப்படுத்த அனுப்பினார்களா என்பது குறித்து நமக்கு தகவல்கள் கிடைக்கவில்லை.

author-image
WebDesk
New Update
Maharastra Covid19 B.1.617 variant and the surge

Tabassum Barnagarwala , Anuradha Mascarenhas 

Advertisment

B.1.617 variant and the surge : ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பெறப்பட்ட 361 ஜீனோம் மாதிரிகளின் தரவுகளை கடந்த வாரம் மகாராஷ்ட்ர மாவட்ட ஆய்வகங்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது தேசிய வைராலஜி நிறுவனம் வெளியிட்டது.

அந்த பகுப்பாய்பில் இருந்து பெறப்பட்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பு 2020ம் ஆண்டு கண்டறியப்பட்ட இரட்டை பிறழ்வு மாதிரி (மாறுபட்ட கொரோனா வைரஸ்) 220 ஜீனோம்களில் கண்டறியப்பட்டது. அந்த இரட்டை மாறுபாட்டு வைரஸ் “B.1.617” மாறுபாடு என்று வகைப்படுத்தப்பட்டது.

B.1.617 என்றால் என்ன?

SARS-CoV-2 இன் B.1.617 மாறுபாடு E484Q மற்றும் L452R ஆகிய இரண்டு பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. இரண்டும் தனித்தனியாக பல கொரோனா வைரஸ் வகைகளில் காணப்படுகின்றன, ஆனால் அவை இந்தியாவில் முதல்முறையாக ஒன்றாகப் புகாரளிக்கப்பட்டன.

இரண்டு பிறழ்வுகளும் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ம் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் காணப்படுகின்றன. ஸ்பைக் புரதம் வைரஸை மனித உயிரணுக்களின் ஏற்பிகளுடன் பிணைக்க மற்றும் ஹோஸ்ட் கலத்திற்குள் நுழைவதற்கு உதவுகிறது.

E484Q பிறழ்வு E484K ஐ ஒத்திருக்கிறது, இது இங்கிலாந்து (பரம்பரை B.1.1.7) மற்றும் தென்னாப்பிரிக்காவில் (B.1.351) காணப்பட்ட மாறுபட்ட வைரஸ் வகைகளில் காணப்படுகிறது.

L452R பிறழ்வு கலிஃபோர்னியாவில் பரவும் (B.1.427 and B.1.429) மாறுபட்ட கொரோனா வைரஸ்களில் அதிகமாக காணப்படுகிறது. இது மனித உயிரணுக்களில் ACE2 ஏற்பிகளுடன் ஸ்பைக் புரதங்களின் பிணைப்பு சக்தியை அதிகரிக்கும், மேலும் இது மேலும் பரவக்கூடியதாக இருக்கும். இது L452R வைரஸ் நகல் எடுப்பையும் அதிகரிக்கிறது.

ஒன்றாக, E484Q மற்றும் L452R ஆகியவை மிகவும் தீவிரமாக பரவக்கூடியவை.

B.1.617 எங்கே கண்டறியப்பட்டது?

இதுவரை மிகவும் குறிப்பிட்ட அளவிலேயே தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்ட்ராவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. ஜனவரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 19 மாதிரிகள் வரிசைப்படுத்தப்பட்டன. பிப்ரவரி மாதத்தில் 234 மாதிரிகள் 18 மாவட்டங்களில் வரிசைப்படுத்தபப்ட்டன. அதில் 16 மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட 151 மாதிரிகளில் இந்த பிறழ்வு கண்டறியப்பட்டது. மார்ச் மாதத்தில், 94 மாதிரிகளில் 65 மாதிரிகளில் இந்த பிறழ்வுகள் இருந்தன.

அமராவதி, நாக்பூர், அகோலா, வர்தா, புனே, தானே, அவுரங்காபாத், மற்றும் சந்திரபூர் மாவட்டங்களில் பி .1.617 இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை முன்வைத்துள்ளன. மற்ற மாவட்டங்களில் குறைவான மாதிரிகள் வரிசைப்படுத்தப்பட்டன, மேலும் சிலவற்றில் மாறுபாடு காணப்பட்டது. மேலும் மாதிரிகள் சோதனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா மாறுபாடு இன்னும் கடுமையானதாக இருக்குமா?

இந்த கொரோனா மாறுபாடு கடுமையானதாக இருக்கும் என்பதற்கான சான்றுகள் இல்லை. பெரும்பாலான நோயாளிகள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் மருத்துவ அனுபவங்களை ஜீனோமுடன் இணைத்து அறிவியல் ரீதியாக ஆதாரங்களை தர வேண்டும். மருத்துவர்களிடம் இருந்து வரும் தகவல்கள், இந்த வைரஸ் மிகவும் அதிகமாக பரவுகிறது என்றும், மொத்த குடும்பத்தையே தாக்க கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடுமையானதாக இல்லை. மேலும் அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்க தேவை ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

"பெரும்பாலான நோயாளிகள் அறிகுறியற்றவர்கள், இது ஒரு நல்ல அறிகுறியாகும். ஆனால் முழுமையான எண்ணிக்கையில் மொத்தமாக சுகாதார உள்கட்டமைப்புக்கு ஒரு சுமையை ஏற்படுத்தியுள்ளன ”என்று மகாராஷ்டிரா கோவிட் பணிக்குழுவின் நிபுணர் டாக்டர் சஷாங்க் ஜோஷி கூறினார்.

எவ்வளவு வரை பரவியுள்ளது?

மகாராஷ்ட்ராவில் மிக சிறிய அளவிலேயே இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. மிக ஆரம்பித்திலேயே இரட்டை பிறழ்வு எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதை கூற முடியாது என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (என்சிடிசி) இயக்குனர் டாக்டர் சுஜீத் சிங் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், மகாராஷ்டிராவில் 15-20 சதவீத மாதிரிகள் இந்த மாறுபாட்டைக் கொண்டிருப்பதாக மத்திய அரசு மார்ச் மாதத்தில் அறிக்கை அளித்தது; சமீபத்திய வரிசை தரவுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இப்போது 60 சதவீதத்திற்கு மேல் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம் என்று அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முதல் அலைகளைப் போலல்லாமல், முழு குடும்பங்களும் இரண்டாவது அலைகளில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இது உடல் ரீதியான தூர மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் வீட்டிலேயே போதுமானதாக இல்லை அல்லது வைரஸ் பரவக்கூடியதாகிவிட்டது என்பதைக் குறிக்கலாம்.

கோவிட் -19 வழக்குகளில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு பி .1.617 காரணமாக இருக்க முடியுமா?

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவமனையில் உள்ள நுண்ணுயிரியல் பிரிவின் தலைவராக இருக்கும் மருத்துவர் ககந்தீப் கங், இந்த வகை மாறுபாட்டைச் சுமக்கும் 60.9 சதவீத மாதிரிகள் “பெரும்பாலும்” பிறழ்வுக்கும் எழுச்சிக்கும் இடையில் ஒரு தொடர்பைக் காட்டியுள்ளன. ஒருவாரம் வரிசைப்படுத்தப்படும் கொரோனா மாதிரிகளில் 1% என்று கொள்ளலாம். இந்தியாவுடன் தற்போது தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பரிசோதிக்கப்படுகின்றன, இது ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 மரபணுக்கள் இவ்வகையை கொண்டிருக்கலாம் என்பதை குறிக்கிறது.

"ஒரு நபர் எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட முடியும் என்பதையும், ஆர்டி-பி.சி.ஆர் த்ரெஷ்ஹோல் சைக்கிள் என்ன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நாங்கள் நேரடி கண்காணிப்பு செய்ய வேண்டும். ஜனவரி மாத தரவு ஏப்ரல் மாதத்தில் சிறிய மதிப்பைக் கொண்டுள்ளது ”என்று டாக்டர் காங் கூறினார்.

சோனாபேட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மருத்துவர் கௌதம் மேனன், “எங்களிடம் இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் வெவ்வேறு மாநிலங்களில் புதிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை எந்த வைரஸ் மாறுபாடு செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்கு மேலும் மரபணு வரிசைமுறை தரவு தேவை. இரட்டை பிறழ்வு தான் இந்த நோய் பரவலுக்கு காரணம் என்பதை உறுதி செய்ய நமக்கு நிறைய தரவுகள் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு, இந்த மாறுபாட்டின் 30 சதவீதத்தை மார்ச் 30 அன்று மாதிரிகளிலும், ஏப்ரல் 14 அன்று 40 சதவீத மாதிரிகளிலும் கண்டறிந்தோம் என்று சொல்ல முடிந்தால், இது புதிய மாறுபாடு நோயின் பரவலில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது என்றார்.

வெளிப்படை தன்மை மிக்க தரவுகள் நமக்கு தேவை. இது சாத்தியம் ஆனாலும், அதிக அளவில் பரவும் போது இது முந்தைய பிறழ்வுடன் இணைக்கப்படலாம் என்று அவர் கூறினார். புதிய மாறுபாடு, நோய் பரவலுக்கு எவ்வளவு காரணம் என்று தெரியாமல் இது தொடர்பாக நம்மால் கூற முடியாது.

இந்த மாறுபாடுகள் இரண்டாவது அலைகளில் எழுச்சியைத் தூண்டுகின்றன என்று எங்களால் உறுதியாகச் சொல்ல முடியாது". இருப்பினும், சான்றுகள் குறைந்தது சில மாநிலங்களில், பி .1.1617 பரம்பரை பிரதானமாக உள்ளது, மேலும் இது வழக்குகள் அதிகரிப்பதற்கு பங்களிக்கக்கூடும் என்று அவர் கூறினார் என்று பேராசிரியர் வினோத் ஸ்காரியா தெரிவித்தார். இந்த பரம்பரை ஆறு ஸ்பைக் புரத வகைகள் உட்பட 15 மரபணு மாறுபாடுகளால் வரையறுக்கப்படுகிறது. இவற்றில் இரண்டு (E484Q மற்றும் L452R) நோயெதிர்ப்பு தப்பித்தல் மற்றும் அதிகரித்த தொற்றுநோய்களில் ஈடுபட்டுள்ளன என்றும் அவர் அறிவித்தார்.

தடுப்பூசியில் இருந்து இந்த மாறுபாடு தப்பித்துக் கொள்ளுமா?

நமக்கு கிடைத்த தரவு குறைவாகவே உள்ளது. முதல் தடுப்பூசி ஷாட்டுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்கள். அவர்கள் தங்களின் ஜீனோம் மாதிரிகளை வரிசைப்படுத்த அனுப்பினார்களா என்பது குறித்து நமக்கு தகவல்கள் கிடைக்கவில்லை.

"தென்னாப்பிரிக்க மாறுபாடு நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்க அதிக திறன் கொண்டது என்பதை நாங்கள் அறிவோம். யுகே மாறுபாடு மிகவும் பரவக்கூடியது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் பி .1.617 பற்றி இதுவரை எங்களுக்கு எதுவும் தெரியாது, ஏனென்றால் முடிவுகளை எடுக்க நாங்கள் தரவுகளை ஒன்றிணைக்கவில்லை, ”என்று டாக்டர் காங் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment