Advertisment

லிட்டோரியா மிரா: சாக்லேட் நிற தவளைகள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

புதுமை அல்லது திருப்பம் என்ற பொருள் கொண்ட லத்தீன் வார்த்தையான மிரம் பதத்தை பயன்படுத்தி இந்த தவளைக்கு லிட்டோரியா மிரா என்று பெயர் வைத்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Litoria mira, chocolate frogs

Meet the Litoria mira, real-life version of Harry Potter’s chocolate frogs : நியூ கெனிவா மழைக்காடுகளில் வாழும் தவளை இனங்களில் ஒன்று அப்படியே சாக்லேட் கொண்டு செய்திருப்பது போன்று தோற்றம் அளிக்கிறது. ஜே. கே. ரௌவ்லிங் எழுதிய ஹாரி பாட்டர் நாவலில் வரும் மாயாஜாலா தவளைகளை இது நினைவுப்படுத்துகிறது.

Advertisment

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீவ் ரிச்சர்ட்ஸ் இந்த தவளை இனத்தை 2016ம் ஆண்டு முதன்முறையாக கண்டறிந்தார். அதில் சில மாதிரிகளை எடுத்து ஜெனிடிக் சோதனைகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவில் இது புதிய வகை தவளையாக உறுதி செய்யப்பட்டு விலங்கு உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதுமை அல்லது திருப்பம் என்ற பொருள் கொண்ட லத்தீன் வார்த்தையான மிரம் பதத்தை பயன்படுத்தி இந்த தவளைக்கு லிட்டோரியா மிரா என்று பெயர் வைத்துள்ளனர். மரம் தவளைகளின் முக்கியமான ஆஸ்திரேலிய லிட்டோரியா இனத்தின் குறிப்பிடப்படாத உறுப்பினரைக் கண்டுபிடித்ததில் விஞ்ஞானியின் ஆச்சரியத்திலிருந்து இந்த பெயர் உருவாக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலிய அருங்காட்சியத்தில் பணியாற்றும் தவளைகள் நிபுணர் ரிச்சர்ட் மற்றும் குவின்ஸ்லாந்து அருங்காட்சியகம் மற்றும் க்ரிஃப்த் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பால் ஓலிவர் ஆகியோர் இந்த ஜெனடிக் ஆய்வுகளை நடத்தி அதன் முடிவுகளை மே 20ம் தேதி அன்று ஆஸ்திரேலியன் ஜேர்னல் ஆஃப் ஜூவாலஜி என்ற இதழில், தவளையின் கண்டுபிடிப்பு குறித்து கூறியுள்ளனர்.

மேலும் படிக்க : சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நீர்க் கரடியை ஏன் அனுப்புகிறது நாசா?

ஆஸ்திரேலிய உறவு

லிட்டோரியா மிரா ஒரு பிரபலமான உறவினரைக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பொதுவான பச்சை மரத் தவளை எனப்படும் லிட்டோரியா செருலியன் ( Litoria cerulean). இவ்விரண்டு தவளைகளையும் உற்று நோக்கி கவனிக்கும் வரை இந்த இரண்டு தவளைகளின் தோல் நிறங்களும் ஒன்றாக இருப்பது போன்று தெரியும்.

மற்ற லிட்டோரியா தவளைகளில் இருந்து மிராவை வேறுபடுத்திக் காட்டுவது அதன் பெரிய உருவம், கைகளில் காணப்படும் வெப்பிங், ஒப்பீட்டளவில் குறுகிய மற்றும் வலுவான கால்கள் மற்றும் கண்களின் விளிம்பில் தோலின் சிறிய வயலட் பேட்ச் ஆகியவை மற்ற தவளைகளில் இருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.

கடந்த கால இணைப்பு

நியூ கினி மற்றும் ஆஸ்திரேலிய பச்சை மர தவளைகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைக்கான காரணம் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இவ்விரண்டு பரப்புகளும் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது. இவ்விரண்டு பகுதிகளிலும் ஒரே மாதிரியான உயிரியல் சூழலைக் கொண்டிருந்தது.

இன்று நியூ கினி குவின்ஸ்லாந்தின் கொம்புப் பகுதியில் இருந்து டோரஸ் ஜலசந்தியால் பிரிக்கப்பட்டுள்ளது. நியூ கினியில் மழைக்காடுகள் அதிகம் உள்ளன ஆனால் வடக்கு ஆஸ்திரேலியாவில் சவன்னா எனப்படும் புல் பரப்புகள் அதிகம் உள்ளன.

இந்த இரு பிராந்தியங்களுக்கிடையிலான உயிரியல் பரிமாற்றத்தை தீர்ப்பது மழைக்காடுகள் மற்றும் சவன்னா வாழ்விட வகைகள் இரண்டின் காலப்பகுதியில் எவ்வாறு விரிவடைந்து சுருங்கிவிட்டன என்பதைப் புரிந்துகொள்வதில் முக்கியமானது என்று ஓலிவர் Sci-News.com தளத்தில் தெரிவித்துள்ளார்.

எங்கள் ஆய்வில் புதிய இனங்கள் வேறுபடுவதற்கான மதிப்பீடுகள், பிளியோசீனில் (5.3 முதல் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவின் தாழ்நில வெப்பமண்டல வாழ்விடங்களில் இரு உயிரினங்களுக்கிடையில் தொடர்பு இருந்தது என்பதைக் காட்டுகிறது என்றார் அவர்.

இந்த கண்டுபிடிப்பு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது?

சாக்லேட் நிற தவளைகள் மனிதர்கள் விரும்பத்தகாத இடங்களில் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அங்கே சூடான மழைக்காட்டின் சதுப்பு நிலத்தில், மலேரியா கொசுக்கள் அதிகம் வாழும், கூர்மையான மரங்கள் கொண்ட, முதலைகள் வாழ்கின்ற, சாலைகள் அற்ற ஒரு இடத்தில் இருந்து இந்த தவளைகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment