Advertisment

20 கோடி இந்தியர்களுக்கு மனநல கோளாறுகள் - ஆய்வில் தகவல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mental disorders among 20 crore Indians study reveals - 20 கோடி இந்தியர்களுக்கு மனநல கோளாறுகள் - ஆய்வில் தகவல் இந்திய செய்திகள்

Mental disorders among 20 crore Indians study reveals - 20 கோடி இந்தியர்களுக்கு மனநல கோளாறுகள் - ஆய்வில் தகவல் இந்திய செய்திகள்

கடந்த வாரம் தி லான்செட் உளவியல் வெளியிட்ட, இந்தியாவில் State-level Disease Burden முன்முயற்சியின் ஆய்வில், 197.3 மில்லியன் இந்தியர்கள் (ஒவ்வொரு ஏழு பேரில் ஒருவர்) 2017 ஆம் ஆண்டில் மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டிசம்பர் 24 அன்று இதுகுறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

NRC vs NPR : தேசிய மக்கள் தொகை பதிவேடு என்றால் என்ன?

1990 மற்றும் 2017 காலக்கட்டத்திற்கு இடையில் இந்திய மாநிலங்களில் மனநல கோளாறுகள் இருப்பதை இந்த ஆய்வு விவரிக்கிறது.

2017 ஆம் ஆண்டில் 197.3 மில்லியனில் 45.7 மில்லியன் மக்கள் மனச்சோர்வுக் கோளாறுகள் மற்றும் 44.9 மில்லியன் மக்கள் பதட்டக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

publive-image

அதிக பாதிப்பு உள்ள கோளாறுகளில், idiopathic வளர்ச்சி அறிவுசார் இயலாமை பெரும்பாலான இந்தியர்களை பாதிக்கிறது. 4.5 சதவீதம் என்ற அளவில் அதன் பாதிப்பு உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டமும் இலங்கை தமிழர்களும்! தமிழகம் சி.ஏ.ஏவை எதிர்க்க காரணம் என்ன?

அதைத் தொடர்ந்து மனச்சோர்வுக் கோளாறுகள் (3.3), பதட்டக் கோளாறுகள் (3.3) மற்றும் நடத்தை கோளாறுகள் (0.8) என்று வரிசைப்படுத்தப்படுகின்றன. மனச்சோர்வுக் கோளாறுகளில், தமிழ்நாட்டில் (100,000 க்கு 4,796), ஆந்திரா (4,563), தெலுங்கானா (4,356), ஒடிசா (4,159) மற்றும் கேரளா (3,897) ஆகியவை உள்ளன.

publive-image

கேரளாவில் (4,035), மணிப்பூர் (3,760), மேற்கு வங்கம் (3,480), இமாச்சலப் பிரதேசம் (3,471), ஆந்திரா (3,462) ஆகிய மாநிலங்களில் இந்த அதீத பதட்டம் என்ற கோளாறின் பாதிப்பு அதிகம். நடத்தை சீர்கேடு சம்பவங்களில், ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்கள் முறையே 100,000 பேருக்கு 983 மற்றும் 974 என்ற எண்ணிக்கையில் உள்ளன. ஒரு லட்சத்திற்கு முறையே 6,339 மற்றும் 5,503 என்ற விகிதத்தில், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் இடியோபாடிக் வளர்ச்சி அறிவுசார் இயலாமை அதிகமாக உள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment