Advertisment

மோர்பியில் நடந்த துயரம்: மோர்பி நகரம், மச்சு ஆறு, தொங்கு பாலம் உருவானது எப்படி?

மோர்பி சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை, இந்தியாவின் செராமிக்ஸ் தொழிற்சாலைகளின் முக்கிய மையம். மச்சூ ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட நூற்றாண்டுக்கு மேல் பழமையான பாலம் நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய இடமாக இருந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
மோர்பியில் நடந்த துயரம்: மோர்பி நகரம், மச்சு ஆறு, தொங்கு பாலம் உருவானது எப்படி?

மோர்பி சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை, இந்தியாவின் செராமிக்ஸ் தொழிற்சாலைகளின் முக்கிய மையம். மச்சூ ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட நூற்றாண்டுக்கு மேல் பழமையான பாலம் நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய இடமாக இருந்து வருகிறது.

Advertisment

குஜராத் மாநிலம் மோர்பியில் ஞாயிற்றுக்கிழமை இரவு (அக்டோபர் 30) ​​நடந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 133ஐ எட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 1 ஆம் தேதி இந்த நகரத்திற்கு வருகை தருகிறார். தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் ஆற்றில் நீர்தாமரை மூடிய பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோர்பி: இந்தியாவின் செராமிக்ஸ் தொழிற்சாலை

பல புதிய மாவட்டங்கள் உருவாக்கியபோது மோர்பி மாவட்டம் ஆகஸ்ட் 15, 2013-இல் உருவாக்கப்பட்டது. மோர்பி மாவட்டத்தில் மோர்பி, மாலியா, தங்கரா, வான்கனேர் மற்றும் ஹல்வாட் ஆகிய ஐந்து தாலுகாக்கள் உள்ளன - வான்கனேர் முன்பு ராஜ்கோட் மாவட்டத்திலும், ஹல்வாட் சுரேந்திரநகர் மாவட்டத்திலும் இருந்தது.

இந்த மாவட்டம் வடக்கில் கட்ச் மாவட்டமும் கிழக்கில் சுரேந்திரநகர் மாவட்டமும் தெற்கில் ராஜ்கோட் மாவட்டமும் மேற்கில் ஜாம் நகர் மாவட்டத்தாலும் சூழப்பட்டுள்ளது.

மோர்பி அதன் செராமிக்ஸ் தொழிற்சாலைக்கு பிரபலமானது. இந்த மாவட்டத்தில் பல நூறு செராமிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலைகள், முக்கியமாக நடுத்தர மற்றும் சிறிய அளவிலான அலகுகள் உள்ளன. இந்தியாவின் பீங்கான் பாண்டங்களில் 70 சதவீதம் மோர்பியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் செராமிக் ஓடுகள் மத்திய கிழக்கு, கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மோர்பியின் செராமிக்ஸ் தொழில்துறையின் ஆண்டு வருவாய் ரூ. 50,000 கோடி. அதன் ஆண்டு ஏற்றுமதி சுமார் ரூ.15,000 கோடி. மோர்பியின் செராமிக்ஸ் தொழிலுக்கு பெரும் போட்டி சீனாவில் இருந்து மட்டுமே வருகிறது.

மோர்பியில் ஓடும் ஆறு

மோர்பி நகரம் கடலில் இருந்து 35 கிமீ தொலைவிலும் ராஜ்கோட்டிலிருந்து 60 கிமீ தொலைவிலும் மச்சு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மோர்பி அம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகம்.

மச்சு ஒரு சிறிய ஆறு. இது மட்லா மலைகளில் தோன்றி 130 கி.மீ தொலைவில் கட்ச் ரானில் பாய்கிறது. 1979 ஆம் ஆண்டில், மச்சு ஆற்றில் ஒரு அணை உடைந்த பிறகு ஒரு பெரிய துயர நிகழ்வு ஏற்பட்டது. மோர்பி நகரத்தை மூழ்கடித்து ஏராளமான மக்கள் இறந்தனர் - சில மதிப்பீடுகள் இறந்தவர்களின் எண்ணிக்கை 25,000 என்று கூறுகின்றன. அணை உடைந்ததை மையமாக வைத்து குஜராத்தி படம் மச்சு என்ற பெயரில் எடுக்கப்பட்டது.

ஆற்றின் மீது ‘ஜுல்டோ புல்’ தொங்கு பாலம்

‘ஜுல்டோ புல்’ என்கிற தொங்கு பாலம். இது பாதசாரிகளுக்கான தொங்கு பாலம். இந்த பாலம் 1879 ஆம் ஆண்டு சர் வாக்ஜி ராவாஜியின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்டது. மோர்பியின் தாக்கூர் சாஹிப் (1858-1922) சர் வாக்ஜி முழு மோர்பி நகரத்தையும் திட்டமிட்டு கட்டிய பெருமைக்குரியவர். அதில் இந்தியாவின் முதல் கலை வேலைப்பாடு கொண்ட அரண்மனை மற்றும் கிரீன் சௌக் என அழைக்கப்படும் ஐரோப்பிய பாணி மைய சதுக்கம் ஆகியவை அடங்கும்.

மோர்பி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், இந்த பாலம் 233 மீட்டர் நீளமும், 1.25 மீட்டர் அகலமும் கொண்டது என்று கூறுகிறது. இது தர்பார்கர் அரண்மனை மற்றும் நகரத்தில் உள்ள லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கிறது. இந்த பாலம் ஒரு சுற்றுலாத்தலமாக இருந்தது. இது ஒரு அற்புதமான பொறியியல் அதிசயமாக நீண்ட காலமாகப் போற்றப்பட்டது. மோர்பி ஆட்சியாளர்களின் முற்போக்கான மற்றும் அறிவியல் தன்மைக்கு இந்த பாலம் சான்றாக உள்ளது என்று மோர்பி மாவட்ட இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தொங்கு பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டு, முதல் பாதுகாப்பு தணிக்கை செய்யாமல் அக்டோபர் 26-ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment