முரட்டு 'மொடேரா' - வியக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்

Avinash Nair

மார்ச் 2020 இல் அகமதாபாத்தில் உள்ள மொடேரா (Motera) மைதானம் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு அதன் கதவுகளைத் திறக்கும்போது, ​​உலகின் மிகப்பெரிய அரங்கமாக மாறும். ரூ .700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த புதிய ஸ்டேடியத்தில் 1,10,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய திறன் உள்ளது.

53,000 பேர் அமரக்கூடிய பழைய சர்தார் படேல் அரங்கம் 2015ல் இடிக்கப்பட்ட பின்னர், அதே இடத்தில் இந்த புதிய அரங்கம் கட்டப்பட்டது. இதைக் கட்டியெழுப்ப ‘லார்சன் அண்ட் டூப்ரோ’ (எல் அண்ட் டி) நிறுவனத்துக்கு நான்கரை ஆண்டுகள் ஆனது. 2017 ஜனவரியில் இதன் அடிக்கல் நாட்டப்பட்டது.

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத்த M / s Populus கட்டிடக்கலை நிறுவனத்தால் மொடேரா அரங்கம் வடிவமைக்கப்பட்டது. MCG தற்போது 1,00,024 பேர் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும்.

மார்ச் 2020ல் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் இடையே ஒரு கண்காட்சி போட்டியை மொடேரா நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் (ஜி.சி.ஏ) துணைத் தலைவர் தன்ராஜ் நாத்வானி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “இந்த திட்டத்தை முழுமையாக முடிக்க இன்னும் 5-6 மாதங்கள் ஆகலாம்” என்றார். அரங்கத்தின் முகப்பு பகுதி, வெளிப்பகுதி மேம்பாடு மற்றும் விளையாட்டுக்கு ஏற்ற பிட்ச் தயாரித்தல் ஆகிய பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.

புதிய மைதானத்திற்குள் மூன்று வகையான ஆடுகளங்களைத் தயாரிக்க சிவப்பு மற்றும் கருப்பு மண்ணை ஜிசிஏ கொண்டு வருகிறது. “உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் 11 கிரிக்கெட் பிட்ச்களை ஜிசிஏ தயார் செய்கிறது. சில பிட்சுகள் சிவப்பு மண்ணுடன் தயாரிக்கப்படும், சில கருப்பு மண்ணுடன் இருக்கும், சிலவற்றில் இரண்டின் கலவையும் இருக்கலாம். இதன் மூலம் தேவையின் அடிப்படையில் பவுன்ஸ் அல்லது சுழலுக்கு சப்போர்ட் செய்யும் பிட்சுகளும் தயாரிக்கப்படும்” என்று நாத்வானி கூறினார். இதற்கு குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மண் எடுக்கப்படுகிறது.

இந்த அரங்கத்தில் சிறந்த ‘sub-surface’ வடிகால் வசதிகளும் இருக்கும். அவை 30 நிமிடங்களுக்குள் மைதானத்தின் வெளிப்புறத்தை உலர வைக்க உதவும். “மழை நின்ற 30 நிமிடங்களுக்குள் முழு மைதானமும் வறண்டு போகும் வகையில் வடிகால் அமைப்பை ஏற்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மழை காரணமாக போட்டிகளை ரத்து செய்வதற்கான வாய்ப்புகளை குறைக்க இது எங்களுக்கு உதவும்” என்று நாத்வானி மேலும் கூறினார்.

புதிய அரங்கத்தில் இரண்டு பெரிய இருக்கை வாச  உள்ளன, ஒவ்வொன்றும் சுமார் 50,000 பொது நுழைவு இருக்கை திறன் கொண்டவை.

புதிய ஸ்டேடியத்தின் கட்டமைப்பின் படி, ஒவ்வொரு பார்வையாளரும் போட்டியை எந்தவித தடையுமின்றி கண்டு ரசிக்க முடியும் என்றும் ஸ்டேடியத்தின் முக்கிய வடிவமைப்பாளர் கூறியுள்ளார். இது தவிர, 76 கார்ப்பரேட் பெட்டிகள், நான்கு-அணிகளுக்கான டிரெஸ்சிங் ரூம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகள், ஒரு அதிநவீன கிளப் மற்றும் ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம் ஆகியவை உள்ளன.

வாகன இயக்கம் என்பது ஸ்டேடியத்தின் தரை மட்டத்தில் இருப்பதை வடிவமைப்பாளர் உறுதி செய்துள்ளார். அதே நேரத்தில் பாதசாரிகளின் இயக்கம் அதற்கு மேல் மட்டத்தில் இருக்கும். அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அருகிலுள்ள மைதானத்தின் வடக்குப் பகுதியில் இருந்து பார்வையாளர்கள் நுழையலாம். மேலும் 12 மீட்டர் உயர வளைவைப் பயன்படுத்தி முதல் மாடியில் நுழையலாம். ஸ்டேடியத்தின் வாகன நிறுத்தத்தில் 3,000 க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் 10,000 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

ஸ்டேடியத்தை ஒட்டியுள்ள மூன்று வெளிப்புற பயிற்சி களங்களை தவிர, இந்த ஸ்டேடியத்தில் ஒரு உட்புற கிரிக்கெட் அகாடமியும் உள்ளது. இந்த அகாடமியில் ஆறு உட்புற பயிற்சி பிட்ச்களுக்கும் உள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, இதன் பழைய அரங்கம் ஒரு சில கிரிக்கெட் சாதனைகளுக்கு சாட்சியாக இருந்தது. இந்த ஸ்டேடியத்தில் தான், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை 1987ம் ஆண்டு சுனில் கவாஸ்கர் படைத்தார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இதே அரங்கத்தில் கபில் தேவ், ரிச்சர்ட் ஹாட்லியின் 432 டெஸ்ட் விக்கெட்டுகளை கடந்தார்.

பழைய ஸ்டேடியம் 1983 மற்றும் 2014 க்கு இடையில் 12 டெஸ்ட் மற்றும் 24 ஒருநாள் போட்டிகளை நடத்தியது. 2011ல் நடந்த உலகக் கோப்பைத் தொடரிலும், 2006ல் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரும் இங்கு நடைபெற்றிருக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close