Advertisment

576 மொழிகள்… இந்தியாவின் தாய்மொழிகள் கணக்கெடுப்பு தயார்; என்ன சொல்கிறது?

உள்துறை அமைச்சகம் நாட்டின் 576 மொழிகளின் கள வீடியோ பதிவுடன் இந்தியாவின் தாய்மொழி கணக்கெடுப்பை நிறைவு செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mother Tongue Survey of India, Ministry of Home Affairs, இந்தியாவின் தாய்மொழி கணக்கெடுப்பு , மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, Indian languages, Mother Tongue, National Informatics Centre, Express explained

இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் தாய்மொழி கணக்கெடுக்கும் திட்டம் தாய்மொழிகளைக் கணக்கெடுக்கிறது. இரண்டுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிற்றாண்டுகளில் இந்த கணக்கெடுப்பு வந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகளின் மொழியியல் அம்சங்களையும் இந்த கணக்கெடுப்பு ஆவணப்படுத்துகிறது.

Advertisment

உள்துறை அமைச்சகம் நாட்டின் 576 மொழிகளின் கள வீடியோ பதிவுடன் இந்தியாவின் தாய்மொழி கணக்கெடுப்பை நிறைவு செய்துள்ளது.

“ஒவ்வொரு பூர்வீக தாய் மொழியின் சலான தன்மையைப் பாதுகாக்கவும், பகுப்பாய்வு செய்யவும், தேசிய தகவல் மையத்தில் ஒரு இணையக் காப்பகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று 2021-22 ஆம் ஆண்டிற்கான உள்துறை அமைச்சகத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் தாய்மொழிகள் கணக்கெடுப்பு என்றால் என்ன?

இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் தாய்மொழி கணக்கெடுப்பு செய்யும் திட்டம் தாய்மொழிகளைக் கணக்கெடுக்கிறது. இந்த கணக்கெடுப்பு இரண்டுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிற்றாண்டுகளில் வந்துள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகளின் மொழியியல் அம்சங்களையும் இது ஆவணப்படுத்துகிறது.

தேசிய தகவல் மையம் மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் ஆகியவை கணக்கெடுக்கப்பட்ட தாய்மொழிகளின் மொழியியல் தரவுகளை ஆடியோ-வீடியோ கோப்புகளில் ஆவணப்படுத்தி பாதுகாக்கும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. காப்பக நோக்கங்களுக்காக தேசிய தகவல் மையம் கணக்கெடுப்பில் தாய்மொழிகளின் வீடியோ-பதிவு பேச்சுத் தரவுகளும் பதிவேற்றப்படும்.

இந்தியாவில் எத்தனை தாய்மொழிகள் உள்ளன. அதிகம் பேசப்படுவது எது?

2018-இல் 2011-ம் ஆண்டு மொழியியல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தகவல்களின் பகுப்பாய்வின்படி, இந்தியாவில் 19,500 க்கும் மேற்பட்ட மொழிகள் அல்லது பேச்சுவழக்குகள் தாய்மொழிகளாகப் பேசப்படுகின்றன என்று பி.டி.ஐ. செய்தி நிறுவனம் முன்பு தெரிவித்திருந்தது.

தாய்மொழி என்பது பதிலளித்தவர் அளித்த அந்தஸ்து. ஆனால், அது உண்மையான மொழியியல் ஊடகத்துடன் ஒத்ததாக இருக்க வேண்டியதில்லை. 19,569 மொழிகள் மொழியியல் ஆய்வு, திருத்தம் மற்றும் பகுத்தறிவுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, அவை 121 தாய்மொழிகளாகத் தொகுக்கப்பட்டன என்று இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் முன்பு கூறியிருந்தார்.

2011 மொழிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 52.8 கோடி மக்கள் அல்லது 43.6 சதவீத மக்கள் தாய் மொழியாக அறிவித்ததில் இந்தி மொழியே அதிகம் பேசப்படும் தாய்மொழியாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக 9.7 கோடி பேர்கள் பெங்காலி தாய்மொழி என்று தெரிவித்துள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம் ஆகும்.

குழந்தைகளின் கல்வியில் தாய்மொழி எந்த இடம் வகிக்கிறது?

கடந்த மாதம் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களால் தொடங்கப்பட்ட கல்வியின் அடிப்படை நிலைகளுக்கான புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான பள்ளிகளில் தாய்மொழியே முதன்மையான பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

தாய்மொழி வழியில் பயிற்றுவிக்கும் திட்டம் குறிப்பாக ஆரம்பப் பள்ளி கல்வியை பயிற்றுவிப்பது என்பது பல ஆண்டுகளாகக் கல்விக் கொள்கைகளின் ஒரு அம்சமாக இருந்தபோதிலும், மீண்டும் மீண்டும் இந்த கொள்கை விளக்கங்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆதரவில் தாய்மொழியைப் பயன்படுத்துவதற்கான சமீபத்திய உந்துதல் வந்துள்ளது.

மழலையர் பள்ளி மற்றும் I-II வகுப்புகளைக் கையாளும் புதிய தேசிய பாடத்திட்ட அமைப்பு தாய்மொழியின் நற்பண்புகளை முதன்மையான கற்பித்தல் வழியாக வலியுறுத்துகிறது. குழந்தைகள் மழலையர் பள்ளியில் சேரும் நேரத்தில், அவர்கள் “வீட்டு மொழியில் குறிப்பிடத்தக்க திறனைப் பெறுகிறார்கள்.” என்று கூறுகிறது.

தேசிய பாடத்திட்ட அமைப்பின் கருத்துப்படி, கல்வி கற்கும் ஆரம்ப ஆண்டுகள் மற்றும் அதற்கு அப்பால் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிப்பதன் முக்கியத்துவத்தை ஆராய்ச்சியின் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

“குழந்தைகள் தங்கள் வீட்டு மொழியில் கருத்துக்களை மிக விரைவாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வதால், முதன்மையான பயிற்றுமொழியானது குழந்தையின் வீட்டு மொழி / தாய்மொழி / அடித்தள கட்டத்தில் பழக்கமான மொழியாக இருக்கும்” என்று அது கூறுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் நிலை என்ன?

1872 ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் இருந்து வரவிருக்கும் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு 16 வது மக்கள் தொகை கணக்கெடுப்பாக இருக்கும். இது சுதந்திரத்திற்குப் பிறகு எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு. மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 இல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கோவிட் -19 தொற்றுநோய் பரவலால் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. திறமையான செயலாக்கம் மற்றும் தகவல்களை விரைவாக வெளியிடுவதை உறுதி செய்வதற்காக, டிஜிட்டல் தகவல் செயலாக்கம் மற்றும் புவிசார் தொழில்நுட்பத்தின் பயன்பாடு உள்ளிட்ட சில புதிய முயற்சிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, நிர்வாக அலகுகளைக் காட்டும் வரைபடங்களைத் தயாரித்தல், புதுப்பித்தல் போன்ற மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முந்தைய மேப்பிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் இணைய அடிப்படையிலான ஊடாடும் வரைபடங்கள் மூலம் பரப்பப்படும்.

2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு 31.12.2019 வரை நாட்டில் ஏற்பட்ட அதிகார வரம்பு மாற்றங்கள் புவி-குறிப்பிடப்பட்ட தகவல் தளத்தில் புதுப்பிக்கப்பட்டு, 6 லட்சத்திற்கும் அதிகமான வரைபடங்கள் (மாவட்டம்/துணை மாவட்டம்/கிராம அளவில்) தயாரிக்கப்பட்டு, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியாளர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment