Advertisment

முரளிதரன் படத்தை நிறுத்துவது இலங்கை தமிழர்களுக்கு உதவாது ஏன்?

இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும், போருக்குப் பிந்தைய நல்லிணக்கமும் இப்போது 800 படம் குறைத்துள்ளதா என்று எம்.ஆர். நாராயண் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Muttiah Muralitharan, Muttiah Muralitharan biopic, 800 movie controversy, முத்தையா முரளிதரன், முத்தையா முரளிதரன் பயோபிக், 800 திரைப்படம், Muttiah Muralitharan controversy, Muttiah Muralitharan Sri Lankan Tamils, முத்தையா முரளிதரன் பயோபிக் சர்ச்சை, இலங்கை தமிழர்கள், Vijay Sethupathi, tamil Indian Express, விஜய் சேதுபதி

புகழ்பெற்ற இலங்கை தமிழ் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் இருந்து தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி விலகிய முடிவு இலங்கையுடன் தமிழ்நாட்டின் வெறுப்பு உறவில் ஏற்படுகிற மற்றொரு சோகம் என்று புலிகளின் வரலாற்றாசிரியர் எம்.ஆர்.நாராயண சுவாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

“தமிழ் தேசியவாதிகள், தமிழக அரசியல்வாதிகளின் பிரிவுகள் மற்றும் தமிழ் திரைப்பட உலகில் உள்ள நபர்கள் இந்த விவகாரத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகக் கோரலாம், ஆனால், திரைப்படத்தை நிறுத்தியிருப்பது (இப்போதைக்கு) இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஏதாவது நல்லது செய்யுமா என்பது சந்தேகமே” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். அது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸில் விளக்குகிறது.

மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான முரளிதரனின் (டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளும் வீழ்த்தியவர்) ஒரு தனி வாழ்க்கை கதையைக் கொண்டுள்ளார். அடையாளம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது என்றால், அவர்கள் அவருடைய சாதனை வாழ்க்கையை கொண்டாட வேண்டும். இங்கே கிரிக்கெட்டுக்கு தமிழர்களின் பங்களிப்பு உந்துததலக இருக்கிறது.

முரளிதரனுக்கு எதிரான குற்றச்சாட்டு என்னவென்றால், 2009ல் எல்.டி.டி.இ-யின் அழிவுக்கு தலைமை தாங்கிய அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் இப்போது ஜனாதிபதியுமான கோட்டபய ராஜபக்ச-வை ஆதரித்தார். கிரிக்கெட் வீரர் முரளிதரன் 2009-ஐ தனது வாழ்க்கையின் சிறந்த ஆண்டு என்று வர்ணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போரில் பல அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு ஆதரவளித்தார் என்பதே அந்த குற்றச்சாட்டு. அவர் ஒருபோதும் கொலைகளை ஆதரிக்கவில்லை என்று முரளிதரன் மறுப்பு தெரிவித்தபோதும் அவரது விமர்சகர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

“இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும் போருக்குப் பிந்தைய நல்லிணக்கமும் இப்போது இந்த படம் குறைத்திருக்கிறதா?” என்று நாராயண சுவாமி கேட்கிறார்.

முரளிதரன், எப்படியிருந்தாலும், ஈழத்தின் புவியியல் பிரதேசமான இலங்கையின் வடக்கு அல்லது கிழக்கிற்கு சொந்தமானவர் அல்ல. அவர் மலையகத் தமிழர் சமூகத்தைச் சேர்ந்தவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்). அவர்கள் ஈழப் பிரச்சாரத்தில் எந்தப் பங்கும் இல்லாவிட்டாலும் சிங்கள பேரினவாதிகளால் பாதிக்கப்பட்டார்கள்.

இலங்கை தமிழர்கள் அவர்களைப் பற்றி கலவையான உணர்வுகளைக் கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த்தேசியவாதிகள் விடுதலைப் புலிகளின் சண்டையிலேயே உள்ளனர். அவர்களுக்கு ஒரே ஒரு இலங்கை தமிழ் ஹீரோ மட்டுமே இருக்கிறார். தமிழ் தேசியவாதிகளின் பார்வையில் உள்ள ஆபத்து இதுதான்: முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் 800 வேறு ஒரு தமிழ் ஹீரோவைக் காட்டியிருக்கும். இதனால்தான் அவரை ஒரு துரோகி என்று அழைக்கிறார்களா?” என்று நாராயண சுவாமி கேட்கிறார்.

இலங்கை தமிழ்த் தேசியவாதம் குறித்து தமிழ் தேசியவாதிகள் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய இன்னும் காலம் உள்ளது. சென்னையில் இருந்து அவர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும் அது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு குறைவாகவே உதவப்போகிறது.

“இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழர்கள் இன்று விரும்புவது பொறுப்புக்கூறல், நீதி, சமத்துவம்தான். ஒரு தமிழ் கிரிக்கெட் வீரர் மீது ஒரு திரைப்படத்தை எதிர்ப்பதால் அவை அவர்களுக்கு கிடைக்காது” என்று கூறி நாரயாண் சுவாமி முடிக்கிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Sri Lanka Ltte Muttiah Muralitharan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment