Advertisment

நிலவில் நீர் : நாசாவின் இந்த கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

நாசாவின் அகச்சிவப்பு வானியல் (சோஃபியா) தொலைநோக்கி முதல் முறையாக நிலவில் சூரிய ஒளி படும் இடங்களில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நிலவில் நீர் : நாசாவின் இந்த கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

நாசாவின் அகச்சிவப்பு வானியல் (சோஃபியா) தொலைநோக்கி முதல் முறையாக நிலவில் சூரிய ஒளி படும் இடங்களில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, நிலவின் துருவங்களில் நிரந்தரமாக இருட்டாக உள்ளப் பள்ளங்களில் நீர் இருப்பதாகக் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது நிலவின் மேற்பரப்பின் அனைத்து பகுதிகளிலும் நீர் இருக்காலம் என்று கண்டறியப்பட்டுள்ளன.

Advertisment

சோஃபியா மேற்கொண்ட ஆய்வு என்ன?

நாசா, ஜெர்மனி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கூட்டுத் திட்டமான சோஃபியா, 45000 அடி உயரத்தில் பறந்து உலகின் மிகபெரிய பறக்கும் ஆய்வக விமானமானமாகும்.

சோஃபியா ஆய்வகம் FORCAST எனப்படும் பெயின்ட் ஆப்ஜெக்ட் அகச்சிவப்பு கேமராவைப் பயன்படுத்துகிறது. இது, நிலவின் மேற்பரப்பில் உள்ள நீர் மூலக்கூறுகளின் குறிப்பிட்ட அலைநீளத்தை படம் பிடிக்கிறது. நிலவின்  தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள, ‘கிளாவியஸ்’ பள்ளத்தில்  உள்ள நீரின் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டன. ‘கிளாவியஸ்’ பூமியில் இருந்து தெளிவாக தெரியும் மிகப் பெரிய நிலவின் பள்ளமாகும்.  இதற்கு, முந்தைய ஆய்வுகள் நிலவின் மேற்பரப்பில் ஹைட்ரஜன் சேர்ந்த சேர்மங்கள் சிலவற்றை கண்டறிந்தன. ஆனால், இவை நீரியமா (அல்லது)  ஹைட்ராக்சைல் அயனிகளா என்பதை வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.

சோஃபியா ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில்,  ஒரு மில்லியன் பங்கில் 100-412 பங்கு பங்கு அளவில் நீர் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.  காணப்படும் நீரின் அளவு இம்மியளவில் தான் உள்ளது. உதாரணமாக,சோஃபியா ஆய்வகம் கண்டறிந்ததை விட  சகாரா பாலைவனத்தில் நீரின் அளவு 100 மடங்கு அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிறிய  விண்மீன் மோதலினால் (collision) (அ) சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் ஆற்றல்மிக்க துகள்களின் தொடர்புகளால் கிளாவியஸ் பள்ளத்தில் நீர்  உருவாகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். சூரியக் காற்று (solar wind)  மூலம் ஹைட்ரஜன் நிலவின் மேற்பரப்பில் காணப்படும்  ஆக்ஸிஜன் தாங்கும் தாதுக்களுடன் வினைபுரிந்து ஹைட்ராக்சைலை உருவாக்கக்கூடும். இந்த ஹைட்ராக்சைல் பின்னர் தண்ணீராக மாற்றப்படலாம்.

இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன?

முதல் முறையாக நிலவில் சூரிய ஒளி படும் இடங்களில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தப்பட்டது அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில், இது தற்போது நிலவின் மேற்பரப்பின் அனைத்து பகுதிகளிலும் நீர் இருக்காலம் என்பது அறியப்படுகிறது. இரண்டாவதாக, கண்டுபிடிக்கப்பட்ட நீரின் அளவு மிகச் சிறியது என்றாலும், காற்று இல்லாத நிலவில் நீர்  எவ்வாறு உருவாக்கப்படுகிறது, சேமிக்கப்படுகிறது, தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது  என்ற ஆக்கபூர்வமான கேள்விகளை எழுப்புகிறது.

 

மேலும், 2024-ம் ஆண்டிற்குள் நிலவின் மேற்பரப்பிற்கு ஓர் ஆண் மற்றும் முதல் பெண்ணையும் அனுப்பத் திட்டமிட்டுள்ள தன்னுடைய ஆர்ட்டெமிஸ் (Artemis) திட்டத்திற்கு இந்த முடிவுகள் பயனளிக்கக்கூடும் என்று நாசா  உறுதியாக நம்புகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், நீர் வாழ்க்கைக்கு ஒரு முக்கிய மூலப்பொருள். “…. ஏறக்குறைய எல்லா இடங்களிலும் நாம் பூமியில் தண்ணீரைக் காண்கிறோம், உயிரைக் காண்கிறோம், ”என்று நாசா முன்பு கூறியது

எனவே, நிலவின் மேற்பரப்பில் நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?

நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அங்கு அடர்த்தியான வளி மண்டலம் இல்லை. எனவே, சூரிய ஒளி படும் இடங்களில் இருக்கும் நீர் துளிகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே, இந்த கண்டுபிடிப்பு  மிகுந்த முக்கியத்துவம் கொண்டுள்ளது. நிலவில், ஏதோ, ஒரு செயல்முறை நீரை இழுத்துப் பிடித்து வைத்திருக்க வேண்டும் என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் தனது  அறிக்கையில் தெரிவித்தார்.

 

Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment