Advertisment

பெருவெள்ளம் முதல் விமான விபத்து வரை: பேரிடர் மீட்புப் படையின் பணிகள் என்ன?

தேசிய பேரிடர் மீட்புப் படை  உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இயக்குநர் ஜெனரல் இதற்கு  தலைமை தாங்குகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெருவெள்ளம் முதல் விமான விபத்து வரை: பேரிடர் மீட்புப் படையின் பணிகள் என்ன?

கேரளா விமான விபத்து வரை பேரிடர் மீட்பு படையினரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.    உதாரணமாக, உம்.பன் புயல் தாக்குதலின் போது, தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்கூட்டியே செயல்திறனால், மேற்கு வங்கத்தில் 5 லட்சம் மக்களையும், ஒடிசாவில் 2 லட்சம் பேரையும், அப்புறப்படுத்த முடிந்தது.

Advertisment

மேலும், கொரோனா பொது முடக்கநிலை காலத்தின் போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நகர்வு குறித்த தகவல்களைப் பதிவு செய்யவும், மாநிலங்களில் சிக்கித் தவித்து வரும் அவர்கள் எளிதாக இடம் பெயரவும் உதவும் வகையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் புலம்பெயர் தொழிலாளர் குறித்த தேசிய இணைய வழி பதிவேட்டை உருவாக்கியது.

இந்தியாவில், தேசிய பேரிடர் மீட்புப் படை எப்படி இயங்குகிறது என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.

பேரிடர் மேலாண்மைச் சட்டம்: 

பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005), (டிசம்பர் 23, 2005) எண். 53, இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையால் 28, நவம்பர் 2005 லும், கீழவையான மக்களவையால் 12 டிசம்பா் 2005 லும் நிறைவேற்றப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள் இச்சட்டம் இந்திய குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றது. இச்சட்டம்  "பேரிடா்களின் திறமையான மேலாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர நிகழ்வுகைளத் தவிா்த்தல் குறித்தும் விளக்குகிறது.

இந்த சட்டம் தேசிய மற்றும்  மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை நிறுவுவதற்கும், தேசிய பேரிடர் மீட்புப் படை அமைப்பதற்கும் வழிவகுத்தது.

தேசிய பேரிடர் மீட்புப் படை : 

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) 2006ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்புப் படையாகும். இயற்கைச் சீற்றங்களும் மனிதர்களால் நேரும் விபத்துகளின்போது மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக உருவாக்கப்பட்டது. தற்போது நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 22 பட்டாலியன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பட்டாலியனிலும், அதிகபட்சமாக 1,150 மீட்புப் படையினர் இடம் பெற்றிருப்பர். நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த    பட்டாலியன்கள் அந்தந்த மாநிலங்களை தங்கள்  கடமைகளை செய்து வருகின்றன. இருப்பினும், அவசரகால நிலைகளில் பட்டாலியன்கள் மற்ற மாநிலங்களுக்கு நகர்த்தப்படுகின்றன.

தேடல், மீட்பு மற்றும் வெளியேற்றம் போன்ற பணிகளில் ஈடுபடும் சிறப்பு மீட்புக் குழுக்கள், பொறியியல் குழு, தொழில்நுட்ப குழு, மின்சாதன வல்லுநர்கள் குழு, மோப்ப நாய் பிரிவு, அவசரகால மருத்துவ உதவிகளுக்கான துணை மருத்துவ அலுவலர்கள் குழு என  பட்டாலியன்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படை  உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இயக்குநர் ஜெனரல் இதற்கு  தலைமை தாங்குகிறார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில்   நிறுத்தப்பட்டிருக்கும்  சிறப்பு மீட்புக் குழுக்கள், செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை முன்கூட்டிய மேற்கொள்வதினாலும், ஆபத்து நேரப் போகும் பகுதிகளில் முன்கூட்டியே படைகள் நிலை நிறுத்தப்படுவதாலும், ஆபத்து நிறைந்த பேரிடரின்  தாக்கங்களை குறைக்க முடியும் என்று மீட்பு படை  அதிகாரிகள் நம்புகின்றனர். சில, நாட்களுக்கு முன்பு , தேசிய பேரிடர் மீட்புப் படையில் (NDRF) கூடுதலாக நான்கு பட்டாலியன்களை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்தது.

பல சந்தர்ப்பங்களில்,தேசிய பேரிடர் நிவாரணப் படையைச் சேர்ந்த குழுக்கள், இந்திய விமானப் படையின் விமானங்கள் மூலம் ஏற்றிச் செல்லப்படுகிறது. உதாரணாமாக, உம்பன் புயலின் போது  நிலையான இறக்கைகள் (fixed wings) கொண்ட 25 விமானங்கள் மற்றும் 31 ஹெலிகாப்டர்களும் உட்பட 56 கனரக மற்றும் நடுத்தர ரக லிப்ட் அசெட்டுகள் (assets) இந்திய விமானப் படையால் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

மீட்புப் படை வீரர்கள்: 

மத்திய ஆயுத படைப்பிரிவில் இருந்து டெபிடேஷன்  மூலம் (Deputation basis )7 வருட காலத்திற்கு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை  தேசிய பேரிடர் மீட்புப் படை பெறுகிறது. பணி ஒப்பந்த காலத்திற்குப் பிறகு, பணியாளர்கள் தங்கள் படைக்குத் திரும்பிச் செல்கின்றனர்.

இந்திய திபெத் எல்லை போலீஸ் படையி(ITBP), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அசாம் ரைஃபிள் படை (ARs), மத்திய ஆயுத காவல் படை (CRPF), மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை (CISF), சாஸ்த்ரா சீமா பால் (SSB) படை ஆகியவற்றில் இருந்து பேரிடர் மீட்புப் படை பட்டாலியன்கள்  உருவாக்கப்படுகிறது.

பணியாளர்கள் என்.டி.ஆர்.எஃப்-க்கு அனுப்பப்பட்ட பிறகு,  அவசர உதவிகளுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஐந்து மாத கால பயிற்சிக்கு உட்படுத்தப்படுகின்றனர். டீப் டைவிங், சிறப்பு தேடல் மற்றும் மீட்பு, இடிந்து விழுந்த கட்டமைப்பில் தேடல் மற்றும் மீட்பு, வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும்  அணுசக்தி அவசரநிலைகளை கையாளுதல் போன்ற  சிறப்பு பயிற்சிகளைப் பெறுகின்றன.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment