Advertisment

நீட் 2021 : ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்., மற்றும் அனைந்திந்திய இட ஒதுக்கீடு

2003ம் ஆண்டு முதன்முறையாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே அந்த நீட் தேர்வுகள் கைவிடப்பட்டன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET exam, Reservation

Shyamlal Yadav 

Advertisment

NEET’s All India Quota, and OBC & EWS reservation : நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கான அனைத்திந்திய இட ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தால் நலிவடைந்த பிரிவினரையும் (EWS) இணைத்து, புதன்கிழமை இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கியது மத்திய அரசு.

நீட் என்றால் என்ன?

National Eligibility-cum-Entrance Test (NEET) என்பது மருத்துவ இளம்நிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும். இது மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிக்க நாடு முழுவதும் நடத்தப்படும் தகுதி தேர்வாகும்.

2016ம் ஆண்டுக்கு முன்பு தேசிய அளவிலான மருத்துவப் படிப்புகளுக்கு All India Pre-Medical Test (AIPMT) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. மாநில அரசுகள் அம்மாநிலங்களில் இருக்கும் மற்ற இடங்களுக்கு நுழைவுத் தேர்வுகளை மாநில அளவில் நடத்தியது. 2003ம் ஆண்டு முதன்முறையாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டே நீட் தேர்வுகள் கைவிடப்பட்டன.

ஏப்ரல் 13, 2016 அன்று, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பிரிவு 10டியை உச்ச நீதிமன்றம் ஆதரித்தது. இது நாடு முழுவதும் உள்ள மருத்துவ படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களில் இளம்நிலை மற்றும் முதுநிலை மருத்துவம் படிக்க ஆங்கிலம் மற்றும் இதர இந்திய மொழிகளில் நுழைவுத் தேர்வு எழுதுவதை கட்டாயமாக்கியது.

அன்று முதல் நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே சீராக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த தேர்வுகளை சி.பி.எஸ்.இ. நடத்தியது. 2018ம் ஆண்டு முதல் இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 2020ம் ஆண்டில் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டு நீட் தேர்வு செப்டம்பர் 11 ( இளம்நிலை) மற்றும் செப்டம்பர் 12 (முதுநிலை) தேதிகளில் நடைபெற உள்ளது.

அனைத்திந்திய இட ஒதுக்கீடு என்றால் என்ன?

நாடு முழுவதும் ஒரே மாதிரியாக தேர்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு மாநிலத்திலும், அங்கு வாழும் மாணவர்களுக்காக குறிப்பிட்ட அளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 15% (இளம்நிலை) மற்றும் 50% (முதுநிலை) இடங்கள் மட்டும் அனைத்திந்திய இட ஒதுக்கீட்டிற்கு மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய இட ஒதுக்கீடு 1986ம் ஆண்டு, எந்த ஒரு மாநிலத்தில் பிறந்திருக்கும் மாணவர்களும், எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்ந்து படிக்க முடியும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் படி, அறிமுகம் செய்யப்பட்டது.

நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மாணவி, உதாரணமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு மாணவி, மேற்கு வங்கத்தில் ஒரு மாநில அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு தகுதியுடையவர் ஆவார். தேசிய இட ஒதுக்கீட்டில் அவர் நல்ல இடம் பெறவில்லை என்றால், அவருடைய மாநிலத்தில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் அவர் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பினை அவர் நம்பலாம். மத்திய பல்கலைக்கழகங்கள், ESIC மற்றும் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி (AFMC) போன்ற இடங்களில் உள்ள அனைத்து இடங்களும் அனைத்திந்திய இட ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது.

இதுவரை பின்பற்றப்பட்ட இட ஒதுக்கீட்டு கொள்கை என்ன?

அனைத்திந்திய கோட்டாவில் 2007ம் ஆண்டு வரை இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. ஜனவரி 31, 2007ம் ஆண்டு அன்று, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் இதர பல்கலைக்கழங்களுக்கு எதிரான அபய் நாத் என்பவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் 15% இட ஒதுக்கீட்டை பட்டியல் இன மாணவர்களுக்கும் 7.5% இட ஒதுக்கீடு பட்டியல் பழங்குடியினருக்கும் வழங்கி உத்தரவிட்டது.

அதே ஆண்டு, அரசு மத்திய கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம், 2007-ஐ நிறைவேற்றியது. அதில் 27% இட ஒதுக்கீடு ஓ.பி.சி. மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் என்பது முக்கிய சிறப்பம்சமாக இருந்தது. மாநில அரசு மருத்துவம் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் அனைத்திந்திய இட ஒதுக்கீட்டிற்கு வெளியே ஓ.பி.சிகளுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியது. ஆனால் இந்த ஒட ஒதுக்கீட்டின் பலன், அனைத்திந்திய இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்ட மாநில கல்லூரிகள் வரை சேரவில்லை. பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை வழங்கும் அரசியல் சாசன சட்டம் 2019 (103வது திருத்த சட்டம்) அனைத்து மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கொண்டு வரப்பட்டது. ஆனால் நீட் தேர்வுகளில் அது இணைக்கப்படவில்லை.

இப்போது என்ன மாறியுள்ளது?

ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைந்தவர்களுக்கான இட ஒதுக்கீடு அனைத்திந்திய கோட்டாவில் இந்த ஆண்டு முதல் இடம் பெறும். 1500 ஓ.பி.சி. மாணவர்களும், மருத்துவ மேற்படிப்பு படிக்க 2500 ஓ.பி.சி. மாணவர்களும் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பயன் அடைவார்கள். அதே போன்று முறையே 550 மற்றும் 1000 பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் இதன் மூலம் பயன் அடைவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துக் கல்லூரிகளில் அனைத்திந்திய கோட்டாவிற்காக 40,800 இடங்கள் ஒதுக்கப்பட்ட என்று இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்களின் நலத்துறை அறிக்கை அறிவிக்கிறது. ஓ.பி.சி. கோட்டாவின் கீழ் 10,900 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு வழி வகை செய்தது என்ன?

ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான ஒட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பல நாட்களாக போராட்டங்களுக்கு வழி வகுத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், தமிழகத்தின் தற்போதைய ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், அனைத்திந்திய கோட்டாவில் ஓ.பி.சி. மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அந்த ஆண்டுக்கான கல்வி ஆண்டில் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது சாத்தியம் ஆகாது ஆனால் 2021 - 22 கல்வி ஆண்டில் இருந்து இதனை அமல்படுத்தலாம் என்று கூறியது.

இருப்பினும், NEET-2021 க்கு அறிவிப்பு ஜூலை 13 ம் தேதி வெளியிடப்பட்டது போது, AIQ க்குள் OBC இட ஒதுக்கீட்டிற்கான எந்தவொரு ஏற்பாட்டையும் குறிப்பிடவில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்று இந்த ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி அன்று திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நடைபெறும் 2021-22 கல்வி ஆண்டில் மத்திய அரசு, ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை அனைத்திந்திய கோட்டாவில் வழங்காமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்” என்று கூறியது.

சமூக வலைதளங்கள் உட்பட பல இடங்களில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தியதற்கு மத்தியில், சோலிசிட்டர் துஷார் மேத்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 26ம் தேதி அன்று மத்திய அரசு அனைத்திய கோட்டாவில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவு அடுத்த கட்டத்தில் உள்ளது என்று பதில் தாக்கல் செய்தார். அடுத்த விசாரணை ஆகஸ்ட் 3க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சலோனி குமாரி உள்ளிட்ட பலரும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அரசு அதன் முடிவை அறிவிக்கும் நிலையில், தேசிய தேர்வு முகமையில் நீட்டுக்கான தகவல் பகுதியில், இந்த கல்வி ஆண்டியில், அனைத்திந்திய கோட்டாவில், மாநில அரசுகள் வழங்கி இருக்கும் இடங்களில் ஓ.பி.சி. மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ள சலோனி குமாரி வழக்கின் முடிவை பொறுத்தது என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment