Advertisment

இட ஒதுக்கீடு அரசியல்: எந்த சமூகத்திற்கு எத்தனை சதவிகிதம்? குழம்பும் கர்நாடகா

Karnataka Reservation Policy Issues: ஒட்டுமொத்த வீரசைவ லிங்காயத்து சமூகங்களும் தங்களை மாநில இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இட ஒதுக்கீடு அரசியல்: எந்த சமூகத்திற்கு எத்தனை சதவிகிதம்? குழம்பும் கர்நாடகா

கல்வி நிலையங்களிலும், அரசு பணிகளிலும்  பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் (அல்லது) தற்போது இருக்கும் பட்டியலில் இருந்து வெளியேறி வேறு பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று பல்வேறு சாதிகளின் கோரிக்கைகளால் கர்நாடக அரசு ஸ்தம்பித்துள்ளது.

Advertisment

இட ஒதுக்கீடுகள் 50 சதவிகித உச்ச வரம்பை மீறக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த நிலையில், வகுப்பினர்களுக்குள்ளாக உட்பிரிவு செய்ய வேண்டும் என்ற முற்பட்ட சாதிகளின் கோரிக்கை அம்மாநிலத்தில் வலுப்பெற்று வருகிறது.

அனைத்து சாதிக் குழுக்களின் கோரிக்கையையும் பரிசீலிப்பதாக அம்மாநில முதல்வர் பி எஸ் எடியூரப்பா உறுதியளித்துள்ளார்.  எடியூரப்பாவின் வீரசைவ லிங்காயத் சமூகமும், பஞ்சமசலி-லிங்காயத் சமூகம்  என்ற அதன் உட்பிரிவும் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓபிசி) சேர்க்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பலதரப்பட்டவர்களிடம் கருத்து கேட்டு , இந்திய அரசியலமைப்பு சட்டத் திட்டத்திற்கு உட்பட்டு கோரிக்கைகள் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று  கடந்த 18 ம் தேதி நடந்த மாநில அமைச்சரவை கருத்து தெரிவித்தது.

கர்நாடகாவின் தற்போதைய இட ஒதுக்கீடு கொள்கை என்ன?

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பட்டியல் சாதியினர்,  பழங்குடியினர், இதரபிற்படுத்தப்பட்டோர் மற்றும் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 50% ஆக உள்ளது.

கர்நாடகாவில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு  விகிதாச்சார முறை பின்வருமாறு:

கர்நாடகத்தில் 1962 முதல் ஐந்து தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது.

முதல் தொகுப்பு (பிற்படுத்தப்பட்ட வகுப்புகள்) - 4%;

இரண்டாவது தொகுப்பு  ஏ ( இதர பிற்படுத்தப்பட்டோர் ) - 15%;

இரண்டாவது தொகுப்பு  பி  (முஸ்லிம்கள்) - 4%;

மூன்றாவது தொகுப்பு  III ஏ (வொக்கலிகர் மற்றும் பல ) - 4%;

மூன்றாவது தொகுப்பு  பி (லிங்காயத்துகள், மராட்டியர்கள்,  கிறிஸ்தவர்கள்)  - 5%;

பட்டியல் சாதியினர் - 15%;

பழங்குடியினர் -  3%.

95 சமூகங்கள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும், 102 சமூகங்கள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மக்கள் தொகை அடிப்படையில் கர்நாடகாவின் முக்கிய சமூகங்கள் யாவை?

ஆறு கோடியே பதினொன்று இலட்சம் மக்கள்தொகை கொண்ட கர்நாடக மாநிலத்தில் , 17 சதவீத மக்கள் வீரசைவ லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். வோக்கலிக சமூகத்தினர் 15 சதவீதமாகவும், இஸ்லாமியர்கள் 9 சதவீதமாகவும், குருபா சமூகத்தினர் 8 சதவீதமாகவும் , குருபா சமூகத்தைத் தவிர்த்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் எண்ணிக்கை 25 சாதவீதமாகவும், பட்டியல் சாதியினர் 15 சதவீதமாகவும், பழங்குடியினர் 3 சதவீதமாகவும் உள்ளனர்.

இடஒதுக்கீடு கொள்கையில் கோரப்படும்  புதிய கோரிக்கைகள் என்ன? 

ஒட்டுமொத்த வீரசைவ லிங்காயத் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பஞ்சமசாலி லிங்காயத்து வேளாண்  சாதியினரும், கால்நடை வளர்ப்பைச் சேர்ந்த குருபாஸ் சாதியினரும்; பழங்குடிகளான வால்மீகி நாயக் சாதியினரும்; வேளாண் தொழில் செய்யும் வோக்கலிக சாதியினரும் தற்போது இடஒதுக்கீடு கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.

பஞ்சமசாலி லிங்காயத்து சாதியினர் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் 15% இடஒதுக்கீடு பட்டியலில் தங்களை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அதுதவிர, ஒட்டுமொத்த வீரசைவ லிங்காயத் சமூகமும் தங்களை 15% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது. குருபா சமூகத்தினர் பட்டியல் சாதி  பிரிவில் தங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோருகின்றனர். வால்மீகி நாயக்கர்கள் பட்டியல் பழங்குடியினர் இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்த்த கோரிக்கை வைக்கின்றனர்.

இதுதவிர, முற்பட்ட சாதியாக விளங்கும் வோக்கலிகா தங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அரசியல் அழுத்தங்கள்:

ஆரம்ப நாட்களில் யெடியூரப்பாவின் அமைச்சரவையில்  இடம் பெறாத பாஜக தலைவர் ஒருவர் பஞ்சமசலி லிங்காயத்து இடஒதுக்கீடு பிரச்சனையை முன்னெடுத்தார். ஆனால், இந்த கோரிக்கை தற்போது இன்று புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது. அச்சமூகத்தை சார்ந்த சில மதகுருமார்கள் ஆர்ப்பாட்டங்களை கைப்பற்றியுள்ளனர். எடியூரப்பா தலைமைக்கு எதிராக செயல்படும் ஒரு குழுவின் மறைமுக ஆதரவும் இவர்களுக்கு உண்டு.

வீரசைவ லிங்காயத் சமூகத்தின் சில உட்பிரிவுகள்  மத்திய ஓபிசி பட்டியலில் உள்ளன. இச்சமூகத்தை சார்ந்த மேலும் சில உட்பிரிவுகள் தங்களை மத்திய பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்ளுள்  சேர்க்க வேண்டும் என்று கடந்த 25 வருடங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 2020 நவம்பரில் இதுதொடர்பான சில நடவடிக்கைகளில் எடியூரப்பாவின் அமைச்சரவை வேகம் செலுத்தத் தொடங்கியது. ஆனால், பாஜகவின் மத்திய தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த முயற்சியை கைவிடத் தொடங்கினார்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உட்பிரிவு: தற்போதைய நிலை என்ன?

பஞ்சமசலி லிங்காயத்து சமூகத்தினரின் கிளர்ச்சியை அடுத்து, தற்போது ஒட்டுமொத்த வீரசைவ லிங்காயத்து சமூகங்களும் தங்களை மாநில இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்பட வேண்டும் (15%) என்ற கோரிக்கையை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

குருபா சாதிக்களின் இடஒதுக்கீடு கோரிக்கையை  தற்போது கர்நாடகா மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா  முன்னெடுத்துள்ளார். குருபா சமூகத்தைச் சேர்ந்த இவரின் கோரிக்கையை பாஜக, காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சித் தலைவர்களும், சமூக ஆர்க்வலர்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

பட்டியல் பழங்குடியினர் இடஒதுக்கீட்டை 7.5% ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அச்சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பி.ஸ்ரீராமுலு,  ரமேஷ் ஜர்கிஹோலி ஆகியோர் முன்னெடுத்துள்ளனர். இக்கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.

வொக்கலிகா வகுப்பினருக்குள்ளாக உட்-பிரிவு இடஒதுக்கீடு கோரிக்கை அச்சமூகத்தைச் சார்ந்த முக்கிய குருமார்களிடமிருந்து வந்துள்ளது.

கோரிக்கைகளை பாஜக அரசு நிறைவேற்ற முடியுமா?

மாநில அமைச்சரவை தனது நிர்வாக பரிந்துரைகளை  மத்திய அரசுக்கு அனுப்ப முடியும். ஆனால், பின்தங்கிய நிலை மற்றும் தனித்துவமான பழங்குடியின கலாச்சார வேற்பாடு போன்ற அளவுகோலை பூர்த்தி செய்ய வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு, பஞ்சமசலி லிங்காயத்து சமூகத்தின் பின்தங்கிய நிலையை மதிப்பீடு செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டது. குருபா சமூகத்தின் தனித்துவமான  பழங்குடி கலாச்சார வேறுபாடுகளை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

இதனால், எந்த சமூகங்கள் மோசமாக பாதிக்கப்படும்?

கர்நாடகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டு முறையை உதாரணமாக மேற்கோள் காட்டுகின்றனர் . ஆனால் பல மாநிலங்களில் 50% என்ற உச்ச வரம்பை மீறுவதற்கான கோரிக்கைகள் வெற்றிபெறவில்லை.

மேலும், கர்நாடகாவில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட சாதிகள் இதர பிற்படுத்தப்பட்டோராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், மக்கள் தொகையில் பெரும் பங்கு வகிக்கும் லிங்காயத்து மற்றும் வொக்கலிக சமூத்தினரை அப்பட்டியலில் சேர்த்தால், ஏற்கனவே அப்பட்டியலில் உள்ள புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தினருக்குப் பின்னடைவாக அமையும்.

இதேபோல், பழங்குடியினர் பட்டியலில் குருபாக்களைச் சேர்த்தால் மற்ற பழங்குடியின வகுப்புகள் இடஒதுக்கீடு பலன்களை அனுபவிக்க முடியாத சூழல் உருவாகும். பழங்குடியினர் ஏற்கனவே 3% ஒதுக்கீடு போதாது என்று கருதுகின்றனர். இதன் காரணமாக, குருபா தலைவர்கள் தங்களைச் சேர்ப்பதற்கு வசதியாக பழங்குடியினர் மக்களுக்கான இடஒதேகீட்டை 13.5% ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

Explosion of quota demands: Who wants what, why in Karnataka 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Karnataka Reservation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment