Advertisment

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு கட்டணம்… புதிய வழிகாட்டுதல் சொல்வது என்ன?

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட தனியார் மருத்துவக் கல்லூரிகள், தங்கள் நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மொத்த இடங்களில் 50 சதவீதம் இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு கட்டணம்… புதிய வழிகாட்டுதல் சொல்வது என்ன?

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, அடுத்த ஆண்டு முதல் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 85 ஆயிரம் MBBS இடங்களில், நான்கில் மூன்று பங்கு இடங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட தனியார் மருத்துவக் கல்லூரிகள், தங்கள் நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மொத்த இடங்களில் 50 சதவீதம் இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களிலும் ஏறக்குறைய பாதி அரசு கல்லூரிகளில் தான் உள்ளது. இவற்றுக்கான கட்டணம் மத்திய அரசால் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் நிர்ணயிக்கப்படுகிறது.

எந்த சீட் குறைந்த விலையில் கிடைக்கும்? யாருக்கு லாபம்?

நாட்டில் உள்ள 85,000 மருத்துவ இடங்களை பொறுத்தவரை, 276 தனியார் கல்லூரிகளில் 41 ஆயிரத்து 190 இடங்களும், 286 அரசு கல்லூரிகளில் 43 ஆயிரத்து 237 இடங்களும் உள்ளன. புதிய வழிகாட்டுதல்படி, அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் தவிர, தனியார் கல்லூரிகளில் உள்ள பாதி இடங்கள் (அல்லது சுமார் 20,000 இடங்கள்) அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த கல்விக் கட்டணத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பேசிய எய்ம்ஸ் முன்னாள் இயக்குநரும், மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் எம்.சி.மிஸ்ரா, "இது ஒரு பெரிய மைல்கல் ஆகும். ஏனெனில் மொத்த மருத்துவ இடங்களில் 75% சதவீதம் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது. சில மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு கல்லூரியை தவறவிட்ட மாணவர்களால், தனியார் கல்லூரிகளில் குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அதிக பணம் செலுத்தி படிக்க முடியவில்லை என்றார்.

NMC உறுப்பினர் ஒருவர் கூறுகையில், " நீட் இளங்களை தேர்வின் தகுதிக்கேற்ப மாணவர்களுக்கு இந்த இடங்கள் வழங்கப்படும். மாணவர்களுக்கு முதலில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் வழங்கப்படும். பின்னர், அரசு கட்டணங்களை கொண்ட தனியார் மருத்துவக் கல்லூரி இடங்கள் வழங்கப்படும். கடைசியாக, தனியார் கல்லூரிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். அனைத்து சேர்க்கைகளும் மெரிட் மூலம் நடைபெறும் என்றார்.

கடந்த காலங்களில், சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணத்தை சில மாநிலங்கள் கட்டுப்படுத்தின, ஆனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகள் இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வரம்புக்குட்பட்ட கட்டணத்துக்கும், அரசு மருத்துவக் கட்டணத்துக்கும் இடையே உள்ள இடைவெளி ஆண்டுக்கு சில ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை மாறுபடுகிறது.

மேலும் பேசிய அவர், " தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான கட்டணக் கட்டமைப்பில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவர்களின் கட்டணங்கள் உள் கமிட்டிகளால் தீர்மானிக்கப்பட்டது. தற்போது, ​​அவையும் மாநில ஒழுங்குமுறைக் குழுக்களின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், அரசு கட்டணத்திற்கான இடங்கள் போக மீதமுள்ள 50% இடங்களுக்கு கல்லூரிகள் தன்னிச்சையான கட்டணத்தை வசூலிக்க முடியாது. இந்த இடங்களுக்கான கட்டணத்தை மாநில ஒழுங்குமுறை கட்டணக் குழு நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்களுக்கு எப்படி கட்டணம் நிர்ணயிக்கப்படும்?

புதிய வழிகாட்டுதலின்படி, மருத்துவக் கல்லூரிகளால் எந்தக் கட்டணமும் வசூலிக்க முடியாது. லாப நோக்கற்ற அடிப்படையில் மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

மருத்துவக் கல்லூரியின் செயல்பாட்டுச் செலவே கட்டணக் கட்டமைப்பிற்கு அடிப்படையாக அமையும். எனவே, இயக்கச் செலவு முந்தைய நிதியாண்டின் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படும். (குறிப்பு: கொரோனா காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளும் கணக்கில் கொள்ளப்படும்). அதேபோல், தணிக்கை அறிக்கை இல்லாத புதிய கல்லூரிக்கு, மாநிலத்தில் அண்மையில் நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரியின் தணிக்கையின் அடிப்படையில் தற்காலிக கட்டணக் கட்டமைப்பு கணக்கிடப்படும்.

கல்லூரியில் சேரும் மாணவருக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், படிப்பு முடியும் வரை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முந்தைய செலவுகள் மற்றும் தற்போதைய வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்து மருத்துவக் கல்லூரிகள் 6 முதல் 15% வரையிலான மேம்பாட்டுக் கட்டணத்தை இயக்கச் செலவில் வசூலிக்க அனுமதிக்கப்படும்.

மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய மருத்துவமனையை நடத்துவதற்கான எந்தச் செலவையும் மாணவர் கட்டணத்தில் சேர்க்க முடியாது. ஒருவேளை, மருத்துவமனை அதிக நஷ்டத்தில் இயங்கும் பட்சத்தில், மாநிலக் கட்டண ஒழுங்குமுறைக் குழு, கல்லூரியின் ஒரு பகுதியை ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு மாணவர்களிடமிருந்து வசூலிக்க அனுமதிக்கலாம்.

அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ரோஹன் கிருஷ்ணன் கூறுகையில், " மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் செலவை கட்டணக் கட்டமைப்பில் சேர்க்க வேண்டும். ஏனெனில் இந்த மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் வர சிகிச்சை செலவில் மானியம் வழங்கப்படுகிறது. இது மாணவர்கள் சிறப்பாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது. இது அதிக கட்டணத்தை ஏற்படுத்தும். எனவே அரசாங்கம் PPP மாதிரியை பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரியாக்ஷன்

பாரதி வித்யாபீத் ஹெல்த் சயின்சஸ் நிர்வாக இயக்குநர் டாக்டர் அஸ்மிதா ஜக்தாப் கூறுகையில், "அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் மானியம் மற்றும் கட்டணத்தில் 50 சதவீத இடங்கள் வழங்கப்பட்டால், அதன் செலவு மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாற்றப்படும்.

பாரம்பரியமாக, 80% இடங்கள் மெரிட் மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்திலும், 20% இடங்கள் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களாகவும் உள்ளன. இந்த இடங்களில், மெரிட் வரவழியாக வர முடியாத மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்த தயாராக இருப்பவர்களுக்கானது. நான் இன்னும் வழிகாட்டுதல்களை விரிவாகப் படிக்கவில்லை. ஆனால், 50 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றால், செலவுகளை ஈடுகட்ட வேண்டும். அதற்கு, மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களின் கட்டணங்கள் அதிகரிக்கலாம். இந்தியாவில் மருத்துவ படிப்புக்கான இருக்கை பற்றாக்குறை காரணமாகவே, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் அதிக இடங்களை வழங்க மருத்துவ கவுன்சில் அனுமதித்தால், இந்த செலவினங்களை ஈடுகட்ட முடியும் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Medical Seats
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment