Advertisment

புதிய ஆய்வு: கோவிட் -19 தடுப்பூசி கர்ப்பிணிப் பெண்களில் நஞ்சுக்கொடியை சேதப்படுத்தாது

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்குவதற்கான பாதுகாப்பு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

author-image
WebDesk
New Update
புதிய ஆய்வு: கோவிட் -19 தடுப்பூசி கர்ப்பிணிப் பெண்களில் நஞ்சுக்கொடியை சேதப்படுத்தாது

கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பினிப் பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வில், தடுப்பூசி எடுத்துக்கொண்ட கர்ப்பினிப் பெண்களின் நஞ்சுக்கொடியில் காயம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. கோவிட் -19 தடுப்பூசி கர்ப்பமாக இருக்கும்போது போடுவது பாதுகாப்பானது என்று வளர்ந்து வரும் கருத்துகளுக்கு இந்த கண்டுபிடிப்பு வலுசேர்க்கிறது. இந்த ஆய்வு மகப்பேறியல் மற்றும் பெண்கள் தொடர்பான நோய் இயல் இதழில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

Advertisment

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான பாதுகாப்பு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தியாவின் தடுப்பூசி நெறிமுறை கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு எதிராக பரிந்துரைத்தபோது, ​​அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற சில நாடுகள் அத்தகைய பெண்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதை தடை செய்யவில்லை.

புதிய ஆய்வின் ஆசிரியர்கள் தங்கள் அறிவுக்கு எட்டியவை, கர்ப்பத்தின் முக்கிய உறுப்பான நஞ்சுக்கொடியின் மீது கோவிட் -19 தடுப்பூசிகளின் தாக்கத்தை ஆராயும் முதல் ஆய்வு இது என்று கூறியுள்ளனர். நஞ்சுக்கொடி கர்ப்ப காலத்தில் உருவாகும் முதல் உறுப்பு ஆகும். கருவில் இருக்கும் சிசுவுக்கு பெரும்பாலான உறுப்புகள் உருவாகும்போது, நுரையீரல் உருவாகும்போது ஆக்ஸிஜனை வழங்குதல், குடல் உருவாகும்போது ஊட்டச்சத்து வழங்குதல் போன்ற முக்கிய வேலையைச் செய்கின்றன. கூடுதலாக, நஞ்சுக்கொடி ஹார்மோன்களையும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் நிர்வகிக்கிறது.

“நஞ்சுக்கொடி ஒரு விமானத்தில் உள்ள கருப்பு பெட்டி போன்றது. கர்ப்பத்தில் ஏதேனும் தவறு நடந்தால், நஞ்சுக்கொடியின் மாற்றங்களை பொதுவாகக் காண்கிறோம். அது என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க உதவும். அதனால், நாங்கள் சொல்லக்கூடிய விஷயம் கோவிட் தடுப்பூசி நஞ்சுக்கொடியை சேதப்படுத்தாது” இது தொடர்பான ஆசிரியர்கள் டாக்டர் ஜெப்ரி கோல்ட்ஸ்டைன் நார்த்வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். அவர் இந்த பல்கலைக்கழகத்தில் நோயியல் உதவி பேராசிரியராக உள்ளார்.

அறிவியலாளர்கள் மே, 2020-ல், அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் பேத்தாலஜியில் ஒரு ஆய்வை வெளியிட்டனர். அந்த ஆய்வில், SARS-CoV-2 கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் நஞ்சுக்கொடி காயம் இருப்பதற்கான ஆதாரங்களைக் காட்டியது (கருப்பையில் தாய் மற்றும் குழந்தைக்கு இடையில் அசாதாரண இரத்த ஓட்டம்).

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அறிவியலாளர்கள் அமெரிக்கன் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ ஆய்விதழில் ஒரு ஆய்வை வெளியிட்டனர். கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு கோவிட் ஆன்டிபாடிகளை உருவாக்கி வெற்றிகரமாக அவற்றை தங்கள் கருவில் உள்ள சிசுவுக்கு மாற்றுவதைக் காட்டியது. குழந்தைகளுக்கு கோவிட் ஆன்டிபாடிகள் கிடைப்பதற்கான ஒரே வழி அவர்களின் தாயிடமிருந்துதான் கிடைக்க முடியும்.

மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ ஆய்விதழில் வெளியான புதிய ஆய்வில், இந்த ஆய்வை மேற்கொண்ட ஆசிரியர்கள் சிகாகோவில் உள்ள ப்ரெண்டிஸ் மகளிர் மருத்துவமனையில் பிரசவித்த 84 தடுப்பூசி போட்டுக்கொண்ட நோயாளிகளிடமிருந்தும், 116 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நோயாளிகளிடமிருந்தும் நஞ்சுக்கொடியை சேகரித்தனர். குழந்தை பிறப்பைத் தொடர்ந்து, அவர்கள் நஞ்சுக்கொடியை முழுவதுமாக நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தனர். இதில் பெரும்பாலான நோயாளிகள் - மாடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளைப் அவர்களின் மூன்றாவது மாதத்தில் பெற்றுக்கொண்டனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Covid 19 Vaccine Coronavirus Pregnant Women
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment