Advertisment

நியூயார்க் நகரில் ஏன் இவ்வளவு கொரோனா வைரஸ் தொற்று?

நியூயார்க்கில் உள்ளவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்ற அமெரிக்கர்களை விட வேறுபட்டதல்ல. நாங்கள் நியூயார்க்கர்ஸ் என்பதால் கொரோனா வைரஸ் தொற்று இங்கு அதிகமாக இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நியூயார்க் நகரில் ஏன் இவ்வளவு கொரோனா வைரஸ் தொற்று?

நியூயார்க் நகரில் மட்டும் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகின் ஐந்து சதவீத வழக்குகள் கொண்ட நியூயார்க் நகரம், தற்போது, அமெரிக்கா நாட்டின் கொரோனா வைரஸ் மையமாக மாறியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவில் பதிவான மொத்த வழக்குகளில்(69,171) பாதிக்கு மேல் நியூயார்க் நகரத்தில் இருந்தது வந்தது தான்.

Advertisment

மார்ச் 13 அன்று, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ),நியூயார்க் நகரத்தில் இயங்கும் அனைத்து ஆய்வகங்களும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. இதுவே,அந்நகரத்தில்  கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு வழிவகுத்தது. அதாவது, ஒரு நாளைக்கு 1,000 பேர் என்ற கணக்கில் இருந்த ஆய்வக சோதனை, எஃப்.டி.ஏ அறிக்கையின் பின் 16,000 என்ற கணக்கில் உயர்த்தப்பட்டது.

நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ, நியூயார்க்கில் தற்போது நடப்பது "அதன் தனிப்பட்ட பிரத்தியோக நிகழ்வு இல்லை" என்று தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஆண்ட்ரூ கியூமோ, “நியூயார்க்கில் உள்ளவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்ற அமெரிக்கர்களை விட வேறுபட்டதல்ல. நாங்கள் நியூயார்க்கர்ஸ் என்பதனால் கொரோனா வைரஸ் தொற்று இங்கு அதிகமாக இல்லை. கடந்த சர்வதேச விமானப் பயணிகள் முதலில் நியூயார்க் நகருக்கு தான் வருகை புரிந்தார்கள், அமெரிக்காவில் முதலில் இங்கு தான் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது, மேலும், அமெரிக்காவில் மற்ற நகரங்களை விட மிகவும் அடர்த்தியான நகரம் நியூயார்க், எனவே, கொரோனா வைரஸ் தொற்றின் அதிவேக உயர்வை நாங்கள் காண்கிறோம்" என தெரிவித்தார்.

நியூயார்க்கில் அதிவேக உயர்வு:

மார்ச் 1 ம் தேதி நியூயார்க் நகரம் தனது முதல் கொரோனா வைரஸ் தொற்று வழக்கைப் பதிவு செய்தது, இது மார்ச் 7-ம் தேதி பன்னிரெண்டாகவும், மார்ச் 9 ஆம் தேதி இருபத்தைந்தாகவும், மார்ச் 13 ஆம் தேதி 137 வழக்காகவும், மார்ச் 18 ஆம் தேதி 2,000 க்கும் மேற்பட்ட வழக்காகவும், மார்ச் 23 அன்று 13,000 க்கும் அதிகமான வழக்காகவும் அதிகரித்தது.

எவ்வாராயினும், மார்ச் 22-ம் தேதியன்று தான், நியூயார்க் நகர மக்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டார்கள். ஏனெனில், அன்று ஒரு நாளில் மட்டும் 2,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் நகரத்தில் பதிவு செய்யப்பட்டது.

மக்கள் தொகை அடர்த்தி: நியூயார்க் நகரத்தின் மக்கள் தொகை மற்றும் அடர்த்தியி ஆகியவற்றால் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் அங்கு எளிதாக இருந்திருக்கலாம். அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 8.4 மில்லியன் மக்களைக் கொண்ட நியூயார்க் நகரம் அமெரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது. 3.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எண்ணிக்கை கொண்ட லாஸ் ஏஞ்சல்ஸில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது. அதாவது, மக்கட் தொகையில் இரண்டாவது இடத்தில் லாஸ் ஏஞ்சல்சை விட 4 மில்லியன் மக்கள் அதிகமாக கொண்டுள்ளது நியூ யார்க்.

Explained: Why New York has emerged the epicentre of the US’s COVID-19 outbreak

மேலும், அமெரிக்காவின் பிற முக்கிய நகரங்களுடன் ஒப்பிடும்போது நியூயார்க் நகரமே அதிக அடர்த்தியைக் கொண்டுள்ளது. நகரத்தில் ஒரு சதுர மைலுக்கு 27,000 க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.

பொது போக்குவரத்து: நியூ யார்க் நகரத்தின் பொது போக்குவரத்து அமைப்பும் நோய்த்தொற்று எளிமையாக பரவுவதற்கு வழிவகுத்தது. பெருநகர போக்குவரத்து ஆணையத் தரவுகளின் படி, (எம்.டி.ஏ) தினசரி சராசரியாக 5.4 மில்லியன் நியூ யார்க் மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். அங்கு 472 சுரங்கப்பாத நிலையங்கள் உள்ளன.

விமான பயணம் :கொரோனா வைரஸ் தொற்று பரவிய காலத்தில் சீனாவின் வுஹான் மாகாணாத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணித்திருக்கின்றனர். சமீபத்திய நியூயார்க் டைம்ஸ் பகுப்பாய்வின்படி, நியூ யார்க் நகரத்திற்கு மாதம் தோறும் சராசரியாக 900க்கும் மேற்பட்ட மக்கள் பயணித்துள்ளனர். ஜனவரி பிற்பகுதியில் தான் வுஹான் மாகாண எல்லையை பூட்டுவதாக சீனா அறிவித்தது. அதற்குள் நியூ யார்க் நகரம் உட்பட உலகின் பல்வேறு நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயணித்திருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment