Advertisment

NIRF: கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்த அரசு முடிவு செய்தது ஏன்?

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை (NIRF) என்பது நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களை (HEI) மேம்படுத்தும் அரசின் முயற்சியாகும்.

author-image
WebDesk
New Update
NIRF

2021ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை வியாழக்கிழமை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் மும்பை ஐஐடியும் உள்ளன.

Advertisment

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை என்றால் என்ன?

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை (NIRF) என்பது நாட்டில் உயர்கல்வி நிறுவனங்களை (HEI) மேம்படுத்தும் அரசின் முயற்சியாகும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய தரத்தை உயர்த்தும்பொருட்டு கடந்த 2016 முதல் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

2016 இல் என்ஐஆர்எஃப் தொடங்குவதற்கு முன்பு, உயர்கல்வி நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களால் குறிப்பாக பத்திரிகைகளால் தரவரிசைப்படுத்தப்பட்டன. ஆரம்ப ஆண்டுகளில் என்ஐஆர்எஃப்-இல் பங்கேற்பது தன்னார்வமாக இருந்தபோதிலும், 2018-ல் அரசு நடத்தும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஏறக்குறைய 6,000 நிறுவனங்கள் என்ஐஆர்எஃப்-இல் பங்கேற்றுள்ளன.

அனைத்து கல்வி நிறுவனங்களும் கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை செயல்பாடுகள், பட்டப்படிப்பு முடிவுகள், பட்டாதாரி உருவாக்க வெளிப்பாடு, நிறுவன சென்றடைவு, உள்ளீடு மற்றும் நிறுவன கண்ணோட்டம் ஆகிய . அளவுருகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்த தரவரிசை, பல்கலைக்கழகங்கள், பொறியியல், கல்லூரி, மருத்துவம், மேலாண்மை, மருந்தகம், சட்டம், கட்டிடக்கலை, பல் மற்றும் ஆராய்ச்சி ஆகிய 11 பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களை NIRF பட்டியலிடுகிறது.

உயர் கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்த மத்திய அரசு ஏன் முடிவு செய்தது?

உலகளாவிய பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல்தான் NIRF உருவாவதற்கு காரணமாக அமைந்தது. குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) உலக பல்கலைக்கழக தரவரிசை மற்றும் டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரிசை ஆகியவை வெளியிடும் நிறுவனங்களின் பட்டியலால் மத்திய அரசும், அரசால் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களும் சற்று வருத்தமடைந்தது. இதில் இந்திய நிறுவனங்கள் பின்னடைவு சந்தித்தன.

2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, ​​அப்போதைய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானி அகநிலை தரவரிசை முறைக்கு உலகளாவிய லீக் அட்டவணையில் மோசமான செயல்திறன் காரணம் என்றும் முதன்மையாக தரவரிசைக்கு ஏஜென்சிகள் பயன்படுத்தும் அளவுகோல்களின் காரணமாகும் என்றார். இது தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் குழுவின் உணர்வைப் பொறுத்தது என்று கூறினார்.

இதை எதிர்கொள்ள, சீன உதாரணத்தை பின்பற்ற இந்தியா முடிவு செய்தது. சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் சீனா இதே பிரச்சனையை சந்தித்தபோது, ​​அவர்கள் தங்களுக்கென ஒரு பல்கலைக்கழக தரவரிசை முறையை உருவாக்கினர். ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ஷாங்காய் தரவரிசை 2003 இல் நடைமுறைக்கு வந்தது. ஷாங்காய் தரவரிசையின் முதல் பதிப்பில் ஒன்பது சீன பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து மூன்று இந்திய கல்வி நிறுவனங்கள் (இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), IIT கரக்பூர் மற்றும் IIT டெல்லி)) இடம்பெற்றன.

இந்திய சூழலுக்கு மிகவும் பொருத்தமான அளவுருகள் மூலம் இந்தியாவும் அதன் சொந்த தரவரிசைகளைத் தொடங்க முடிவு செய்தது. எனினும் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது. ஷாங்காய் தரவரிசை முதல் வருடத்தில் இருந்தே சர்வதேச அளவில் இருந்தது, என்ஐஆர்எஃப் இந்திய உயர்கல்வி நிறுவனங்களை மட்டுமே தரவரிசைப்படுத்தியது. நீண்ட காலத் திட்டம் அதை ஒரு சர்வதேச லீக் அட்டவணையாக மாற்றுவதாகும்.

NIRF சர்வதே அளவில் மாறுமா?

என்ஐஆர்எஃப் அதன் ஆறாவது ஆண்டில் உள்ளது. ஆனால் அது இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே தரவரிசை அளிக்கிறது. வியாழக்கிழமை, தற்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், என்ஐஆர்எஃப் நாட்டில் மட்டுமல்ல, உலகளவில் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு ஒரு அளவுகோலாக இருக்க வேண்டும் என்று கூறினார். இந்தியாவிற்கு வெளியே உள்ள உயர்மட்ட உயரதிகாரிகளை வரையறுக்கும் யோசனையை அரசு கைவிடவில்லை என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Ministry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment