Advertisment

NITI Health Index 2019 : சுகாதாரத்துறையில் 9வது இடத்தை பிடித்த தமிழகம்... 3வது இடத்தில் இருந்து சறுக்கியதற்கான காரணங்கள் என்ன?

வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களின் 2030ம் ஆண்டுக்கான இலக்கினை தமிழகம் கேரளா என்றோ எட்டிவிட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates by-election results

Tamil Nadu news today live updates by-election results

NITI aayog Health Index report 2017-2018 :  ஜூன் மாதம் 26ம் தேதி நிதி ஆயோக் "ஆரோக்கியமான மாநிலங்கள்” என்ற தலைப்பில் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் முதல் 10 இடங்களில் தமிழகம் இடம் பிடித்திருந்தாலும், மூன்றாவது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு பின்னடவை சந்தித்துள்ளது தமிழ்நாடு.

Advertisment

publive-image

2015 - 16க்கான ஆண்டில் தமிழகம் 3வது இடத்தில் இருந்தது. ஆனால் 2017 - 2018க்கான பட்டியலில் 9வது இடத்திற்கு சென்றுள்ளது. இதற்கு பல தரப்பில் இருணந்தும் ஆளுங்கட்சியினர் மீது குற்றம் சுமத்தினர். கன்னியாகுமரி முன்னாள் எம்.பி. பொன்.ராதாகிருஷ்னன், இந்த பின்னடைவிற்கு திமுகவும் தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : டி.என்.ஏ தொழில்நுட்பம் மசோதா 2019 முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் என்ன?

NITI aayog Health Index report 2017-2018 : தமிழகத்தில் சுகாதாரம், குழந்தை பிறப்பு / இறப்பு விகிதங்கள் குறித்து ஒரு பார்வை

சுகாதாரத்துறைக்கான பட்டியல் பிறக்கும் போது ஏற்படும் இறப்பு விகிதங்கள், ஐந்து வயதுக்குள் மரணத்தை தழுவும் குழந்தைகளின் எண்ணிக்கை, குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

பிறக்கும் போது இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை (neonatal mortality rate)

வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களின் 2030ம் ஆண்டுக்கான இலக்கினை தமிழகம் மற்றும் கேரளா என்றோ எட்டிவிட்டது என்று தான் கூற வேண்டும். பிறக்கும் 1000ம் குழந்தைகளில் இறப்பு விகிதத்தை 12 ஆக குறைக்க வேண்டும் என்பது தான் அந்த குறிக்கோள்.  2015ம் ஆண்டின் அறிக்கைப்படி தமிழகத்தில் 1000க்கு 14 குழந்தைகள் இறப்பு விகிதம் இருந்தது. ஆனால் 2016 ஆண்டில் அது 12 ஆக குறைக்கப்பட்டது. இந்த இரண்டு ஆண்டுகளிலும் கேரளாவில் குழந்தைகளின் இறப்பு விகிதமானது 6 தான்.

publive-image

5 வயதுக்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. 2015ல் 1000க்கு 20 என்றிருந்த நிலைமை மாறி 1000க்கு 19 என்று குறைந்தது. கேராளாவில் 13ல் இருந்து 11 ஆக குறைந்துள்ளது. உலக வங்கியுடன் இணைந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரகம் இந்த பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உத்திரப்பிரதேசம், பிகார், ஒடிசா, மத்தியபிரதேசம், மற்றும் உத்திரகாண்ட் மாநிலங்கள் கடைசி ஐந்து இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் ஐந்து இடங்கள்ளில் கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத், மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

எதிர்கட்சியினர் முன் வைக்கும் காரணங்கள் என்ன ?

விஜயபாஸ்கர் தலைமையில் இயங்கும் சுகாதாரத்துறை அமைச்சகம் டெங்கு காய்ச்சலை தடுக்காமல் விட்டது, கர்பிணி பெண்ணிற்கு எச்.ஐ.வி தொற்று இரத்தத்தை ஏற்றியது, செவிலியர்கள் பிரசவம் செய்ததால் ஏற்பட்ட தாய் - சேய் நல பிரச்சனைகள், சுகாதாரமற்ற மருத்துவமனைகள் தான் காரணம் என எதிர்கட்சியினர் தங்களின் கருத்தினை முன்வைக்கின்றனர்.

முரணான தகவல்களைக் கொண்டுள்ளது நிதி ஆயோக் அறிக்கை - தமிழக சுகாதாரத் துறை அமைச்சர்

கடந்த டிசம்பர் மாதம் நிதி ஆயோக் வெளியிட்ட சிறப்புப் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தில் இருந்தது. 6 மாதங்களில் எப்படி 9வது இடத்திற்கு பின்னடவை சந்திக்கும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பொதுச்சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் குழந்தைசாமி.   மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ஏகப்பட்ட முரண்கள் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 99% பிரசவங்கள் மருத்துவமனைகளில் தான் நடைபெறுகிறது என்றும் அதில் 70% அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டார். ஆனால் நிதி ஆயோக் வெளியிட்ட தரவுகளில் 20% பிரசவங்கள் வீட்டில் நடைபெறுவதாகவும், 80% தான் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது என்றும் முரண்பாடுகளை மேற்கோள்காட்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் 26ம் தேதி அவர் கூறினார்.

Tamil Nadu Niti Aayog
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment