Advertisment

Explained : புதிய ஆசிய உயர்க்கல்வி தரவரிசை பட்டியல், இந்திய கல்வி நிறுவனங்களின் நிலை என்ன ?

இந்தியாவில் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனமாக மும்பை ஐ.ஐ.டி உள்ளது. இருந்தாலும், கடந்த ஆண்டை விட ஆசிய அளவில் ஒரு இடம் கீழிறிங்கி 34வது இடத்தில் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உலகத் தரவரிசையில் பின்தங்கிய இந்திய கல்வி நிறுவனங்கள்: சென்னை ஐஐடி நிலை என்ன?

QS World University Rankings,india higher education institution ranking, IOE Status

கியூஎஸ் (QS) உலக பல்கலைக்கழக தரவரிசை என்பது குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் என்ற நிறுவனத்தால் (QS) வெளியிடப்படும் உயர்க்கல்வி நிறுவனங்கள் பற்றிய  தரவரிசையாகும். சமீபத்தில் ஆசியாவின் சிறந்த பலகலைக்கழகம் என்ற தரவரிசையும் வெளியிட்டது. ஆசிய கண்டத்தில் கணக்கீடு செய்யப்பட்ட 550  பல்கலைக்கழக பட்டியலில் இந்தியாவின் 96 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. அதிலும், 20 கல்வி நிறுவனங்கள் மிகவும் புதியவை, முதல் முறையாக கணக்கீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Advertisment

மெயின்லேண்ட் சீனாவின் 118 உயர்க்கல்வி நிறுவனங்கள் இந்த தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .

publive-imageசிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதல் இடத்தை பிடித்தது. அதைத் தொடர்ந்து நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்( கடந்த ஆண்டு மூன்றாவது இடம்) மூன்றாவது இடத்தில்  ஹாங்காங் பல்கலைக்கழகம் இருக்கின்றது.

இந்தியா- சீனா சிறந்த பலகலைக்கழகம் பற்றி:  

இந்த ஆண்டு தரவரிசையில் முதல் பத்து இடங்களில் சீனா கல்வி நிறுவனங்கள் நான்கு இடங்களை தக்க வைத்தன. முதல் முப்பது இடத்திற்கு இந்தியாவின் உயரக்கல்வி நிறுவனங்கள் எவையும் தகுதி பெறவில்லை. இருந்தாலும் முதல் நூறு இடங்களில் எட்டு உயர்க்கல்வி நிறுவனங்களும், முதல் 250 இடங்களில்  முப்பத்தி ஒன்று கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றன. இந்த முப்பத்தி ஒன்றில், பதினெட்டு கல்விநிறுவனங்கள் கடந்த ஆண்டை விட பட்டியலில் வீழ்ச்சியும், பன்னிரென்டு கல்வி நிறுவனங்கள் எற்றமும் பெற்றுள்ளன.  ஒரு கல்வி நிறுவனம் கடந்த  ஆண்டு தரவரிசைப் பட்டியலில் கிடைத்த அதே இடத்தை தக்கவைத்தது.

இந்தியாவில் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனமாக மும்பை ஐ.ஐ.டி உள்ளது. இருந்தாலும், கடந்த ஆண்டை விட ஒரு இடம் கீழிறிங்கி 34வது இடத்தில் தான் உள்ளது . ஐ.ஐ.டி டெல்லி 43 வது இடத்திலும், ஐ.ஐ.டி மெட்ராஸ் 50-வது இடத்திலும் உள்ளன.

publive-image

இந்த, கியூஎஸ் தரவரிசை 11 குறியீட்டின் உயரக்கல்வி நிறுவனங்களை அளவிடுகிறது. இதில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது  'Academic Reputation Indicators'. உலகம் முழுவதும் இருக்கும் 94,000 கல்வியாளர்களிடம் பல்கலைக்கழகத்தின் தரத்தை பற்றி கருத்து கேட்கப்படும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும். இந்த  'Academic Reputation Indicators' மட்டும் கணக்கீடு செய்தால் ஐஐடி மும்பை 32வது இடத்திலும், டெல்லி ஐஐடி 34வது இடத்திலும், டெல்லி பல்கலைக்கழகம் 50வது இடத்திலும் இடம்பெற்றிருக்கின்றன.

'Employer Reputation ' என்ற குறியீட்டில் மும்பை  ஐ.ஐ.டி ஆசியாவில் 21 வது இடத்தில் உள்ளது.  டெல்லி ஐஐடி, சென்னை  ஐஐடி, டெல்லி பல்கலைக்கழகம் , ஐ.ஐ.டி கரக்பூர் போன்ற கல்வி நிறுவனங்கள் இந்த குறியீட்டில் முதல் ஐம்பது இடத்திற்குள் உள்ளனர். 44,000 தொழில் நிறுவன முதலாளிகளிடம் கருத்து கேட்பதன் மூலம் இந்த குறியீடு அளவீடு செய்யப்படுகிறது.

 

‘Staff with PhD’ என்ற குறியீட்டில் இந்தியாவில் உள்ள ஏழு உயர்கல்வி நிறுவனங்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.  மெட்ராஸ், கரக்பூர், கான்பூர், புவனேஸ்வர், இந்தூர், பாட்னா , ரோப்பர் போன்ற ஏழு ஐ.ஐ.டி.க்கள் இந்த ‘Staff with PhD’ குறியீட்டில் முதலிடத்தை பெற்று இருக்கின்றன.

ஆராய்ச்சியைக் குறிக்கும் ‘Citations per Paper’ குறியீட்டில், முதல் ஐம்பது பல்கலைக்கழகங்களில் இந்தியாவில் ஐந்து பல்கலைக்கழகங்கள் இடம் பெற்று இருக்கின்றன. ‘Papers per Faculty’ குறியீட்டில் முதல் ஐம்பது பல்கலைக்கழகங்களில் ஆறு பலகலைக்கழகங்கள் இடம் பெட்டரு இருக்கின்றன.

கியூஎஸ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பென் சவ்ட்டர்  ஒரு அறிக்கையில் “கடந்த ஒரு தசாப்தத்தில் இந்திய உயர் கல்வி முறை அதிவேகமாக வளர்ந்துள்ளது. பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காகவும், கல்லூரிகளின் எண்ணிக்கை 50 சதவீதத்திலும்  அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி உண்மையில் மிகவும்  பிரமிக்க வைக்கிறது” என்று சொல்லப்பட்டிருந்தது.

Iit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment