Advertisment

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் உடனே கிடைக்காது: இந்திய மருத்துவ நிபுணர்

தடுப்பூசி போடப்பட்டாலும் பாதுகாப்பு முழுமை அடையவில்லை என்பதை நாம் எச்சரிக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
‘Not all will get vaccine quickly, need to come up with strategy’: Dr Gagandeep Kang

‘Not all will get vaccine quickly, need to come up with strategy’: Dr Gagandeep Kang : இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் மிகவும் முக்கியமான வரும் குரானா மருந்து மற்றும் வைரஸ் தயாரிப்பிற்கான இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவராக திகழ்ந்த டாக்டர் ககன்தீப் தேசிய அளவில் நடைபெற்ற ஜூம் கருத்தரங்கில் பங்கேற்றார் மக்கள் கரோனா வைரஸ் குறித்து எழுப்பிய சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்

Advertisment

2021ம் ஆண்டின் துவக்கத்திற்குள் மருந்து கிடைக்குமா?

இது மிகவும் சாத்தியமானது என நினைக்கின்றேன் இருப்பினும் அதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வில்லை. ஒரு தடுப்பூசியின் செயல்திறன் தரவு நம்மிடம் இல்லாத வரை ஒரு தடுப்பூசி மனிதர்கள் மீது வேலை செய்யுமா இல்லையா என்று கூற இயலாது. நாங்கள் நோய் எதிர்ப்பு திறன் குறித்த தரவை அதிகம் ஊக்குவிக்கிறோம் பிரமிட் மாதிரிகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் தடுப்பூசிகள் கடுமையான நோயை தடுக்கின்றன என்பதை குறிக்கிறது. இவை மிகவும் நல்லது ஆனால் இதற்கு முன்பு விலங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் நாம் தவறாக வழி நடத்தப்பட்டு இருக்கிறோம். எனவே மனிதர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில் இருந்து கிடைக்கும் தரவுகள் வரும் வரையில் அது குறித்து என்னால் எதுவும் கூற இயலாது.

ரஷ்யா தயாரித்திருக்கும் தடுப்பூசி குறித்து

மிகவும் குறைவான நேரத்தில் தயாரான ரஷ்யாவின் தடுப்பூசியை தடுப்பு ஊசி என்று கூற இயலாது. மனிதர்கள் மீதான சோதனையை ஜூன் 17ஆம் தேதி அன்று தான் துவங்கியது. ரஷ்யா பிறகு முதல் இரண்டு கட்டங்களை முடித்திருக்கிறது என்றால் அது மிகவும் குறைவான மக்கள் மீது மட்டுமே ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசியில் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் சாத்தியங்கள் குறைவு என்பதையும் நோய் எதிர்ப்பு திறன் கொண்டது என்பதையும் நாம் அறிவோம். ஆனால் ஒரு தடுப்பூசி நோய் கட்டுப்பாட்டாளரிடம் இருந்து உரிமம் பெற்றது என்பதற்காக அந்த தடுப்பு ஊசி நோயை தடுக்க உதவும் என்றும் கூறிவிட இயலாது. அதனை உறுதி செய்ய மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் நமக்கு தேவை. சீனாவிலும் தடுப்பூசி உரிமம் பெற்றது. ஆனால் செயல்திறன் தரவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

எவ்வளவு விரைவில் கொரோனாவிற்கு தடுப்பூசி கிடைக்கும்?

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி வேலை செய்கிறது என்றால், அது தான் முதன்மையான தடுப்பூசியாக இருக்கும். மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கும் இந்த தடுப்பூசியை தயாரிக்கும் பணியை ஏற்கனவே சீரம் நிறுவனம் துவங்கியுள்ளது. இதில் செயல்திறன் தரவுகள் இருக்கிறது என்பதால் நம்பிக்கையுடன் இந்த தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து சிந்திப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

விலை குறித்து :

தடுப்பூசிகள் முதலில் தயாரிக்க தொடங்கும் போது, அவை பன்னாட்டு உற்பத்தியாளர்களால் உருவாக்கப்படுகிறது. எனவே , செலவும் பல நூற்றுக்கணக்கான டாலர்களாக இருக்கும், இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு தடுப்பூசி ஒரு டோஸுக்கு 3 டாலருக்கும் அதிகமாக இருந்தால் நாம் அனைவரும் அதனை வாங்குவது கடினம். எனவே சீரம் தடுப்பூசிக்கு மேற்கோள் காட்டியுள்ள விலை, ஒரு டோஸுக்கு 900-1000 ரூபாய் என்றால் நிச்சயமாக அதைப் பற்றி சிந்திப்போம். துவக்க நிலையில் அனைத்து தடுப்பூசிகளும் விலை அதிகமானவை தான். நிறைய மற்றும் நிறைய தடுப்பூசிகளை தயாரிக்க ஆரம்பித்தவுடன் விலை குறைய துவங்கும்.

கொரோனா தடுப்பு மருந்தினை பெறுவது குறித்து

இது மிகவும் சிக்கலான பகுதி. ஒரு தடுப்பூசி வெற்றிகரமாக கண்டறியப்பட்டால், உடனே நம் அருகிலிருக்கும் மருத்துவரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியல்ல. ஒரு தடுப்பூசியை உருவாக்க அதிக காலமாகும் அதேபோன்று தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தடுப்பூசி தயாரிக்க தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஒரு தடுப்பு மருந்து முறையாக கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அதனை தயாரிக்க வேண்டிய அனைத்து வசதியையும் பெற்றிருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதனை அட் - ரிஸ்க் மேனுபேக்ச்சரிங் என்று அழைக்கின்றோம். சீரம் நிறுவனம் இதைத்தான் செய்துள்ளது. இதைத்தான் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் செய்து வருகின்றன. செயல்திறன் தரவுகளையும், தடுப்பூசி உரிமம் பெற்ற பின்பும் தேவையான அளவிற்கு அவர்கள் மருந்துகளைத் தயாரிக்கிறார்கள். இவ்வாறு தான் தடுப்பு மருந்துகள் விரைவாக சந்தைப்படுத்தப்படுகிறது. ஆனால் இது ஒழுங்குமுறைப்படுத்த அதிக காலம் ஆகும். ஆவணங்களை மறுசீராய்வு செய்யவும், தடுப்பூசிகள் உரிமம் பெரவும் காலம் ஆகும். ஒரு முறை தடுப்பூசி உரிமம் பெற்றுவிட்டால் பிறகு லாஜிஸ்டிக்ஸ் பற்றி யோசிப்போம். உங்களின் உள்கட்டமைப்பிற்கு பொருந்தும் வகையில் உங்களுக்கு ஒன்று தேவை, உங்களால் தடுப்பூசியை வாங்க இயல வேண்டும், அந்த தடுப்பூசியை உங்கள் நாட்டில் இறக்குமதி செய்ய வேண்டும், அதனை பிறகு விநியோகிக்க வேண்டும், பிறகு உங்களின் மருத்துவ ஊழியர்களுக்கு இதனை எப்படி நோயாளிகளுக்கு தர வேண்டும் என்று பயிற்சி தர வேண்டும் என பல்வேறு விசயங்கள் இதில் அடங்கியுள்ளது.

தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறித்து

முதல் விஷயம் தடுப்பூசி வேலை செய்யுமா? மக்களின் எந்த விகிதத்தில் எவ்வளவு காலத்திற்கு அந்த தடுப்பூசியின் பாதுகாப்பு நீடிக்கும்? தற்போது யூ.எஸ்.எஃப்.டி.ஏ மற்றும் உலக சுகாதார நிறுவனம் 50% என்ற மதிப்பீட்டை கூறியுள்ளது. அதாவது மருத்துவ பரிசோதனையின் போது நீங்கள் தடுப்பூசி மூலம் தடுக்கப்பட்ட நோயில் குறைந்தது 50 சதவீதத்தை பெற்றிருக்க வேண்டும். அமெரிக்காவில் நடத்தப்பட்ட சோதனைகள் இந்த மதிப்பானது 30% வரை குறைவாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே நோய்க்கான விகிதம் மற்றும் தடுப்பூசியை எதிர்பார்த்து இருக்கின்றோம். அது 50 சதவீதமாகும். தற்போது இந்த தடுப்பு மருந்து எவ்வளவு காலம் நமக்கு பாதுகாப்பு அளிக்கும்? எடுத்துக்காட்டுக்கு சில தடுப்பு ஊசிகள் எங்களிடம் உள்ளது. அதன் பாதுகாப்பு மிக நீண்ட காலம் கிடையாது . உருவாக்கப்படும் தடுப்பூசியின் பாதுகாப்பு எத்தனை மாதங்கள் வரை நீடித்திருக்கும் அல்லது எத்தனை வருடங்கள் வரை நீடித்திருக்கும் என்பது நமக்குத் தெரியாது. அதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்ட சோதனை முடிவுகளில் இருந்து தான் அறிந்து கொள்ள முடியும். பல்வேறு சோதனைகளில் திட்டமிடப்பட்ட பின்தொடர்தல் என்பது ஒருவருடம் மட்டுமே. அந்த ஒருவருடத்திற்குள் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நோய்த் தொற்றுகளை பெற வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அது நிச்சயமாக கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

தவறான உத்திரவாதங்கள் குறித்து

ஒருமுறை நீங்கள் தடுப்பூசியை பெற்றுக் கொண்டால் நீங்கள் பாதுகாக்கப்பட்டதாக உணர்வீர்கள். அது தான் பிரச்சனையே. பாதுகாப்பிற்கும், தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கும் மத்தியில் தொடர்பு இருந்தால், விவரிக்க கூடிய சமிஞ்சையை நீங்கள் பெற்றிருந்தால், உதாரணத்திற்கு ஆண்ட்டிபாடிகள், மட்டுமே நீங்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன், எவ்வளவு சிறப்பாக தடுப்பூசி வேலை செய்கிறது என்று கூற முடியும். அது போன்ற தரவுகள் நமக்கு கிடைக்கும் வரை, தடுப்பூசி பரிசோதனைகளுக்கு பிறகும் மக்களுக்கு எச்சரிக்கை தர வேண்டும். தடுப்பூசி போடப்பட்டாலும் பாதுகாப்பு முழுமை அடையவில்லை என்பதை நாம் எச்சரிக்க வேண்டும்.

தடுப்பூசியே இல்லாததை காட்டிலும் 40 முதல் 50 சதவீதம் செயல்திறன் கொண்ட தடுப்பூசி சிறந்ததா?

அவை சரிதான் இவை அனைத்தும் முதல் தலைமுறை தடுப்பூசிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொண்டால் அவற்றின் செயல் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய இயலும். அந்த தடுப்பூசிகளுக்கு அஜ்வண்ட்ஸ் அளித்து பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பினை அந்த தடுப்பூசி அதிகரிக்கிறதா அல்லது பாதுகாப்பின் கால அளவை அதிகரிக்கிறதா என்பதை ஆராய வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள இந்த குறைந்த காலத்தில் நிறைய தடுப்பூசிகள் உருவாக்கப்படும் என்பதால் தடுப்பூசிகளை கலப்பதற்கான சாத்தியக்கூறு பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் குறித்து

மக்கள் சுகாதார அமைப்பை நம்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் மக்கள் அனைவரும் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தங்களால் இயன்ற அளவு தரமான பாதுகாப்பான பாதுகாப்பு யுக்திகளை தர முயல்கிறார்கள் என்று நம்ப வேண்டும் என நினைக்கின்றீர்கள்.

செயல்முறைகளை பின்பற்றாமல் குறுகிய வழிமுறைகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் விசயங்களை பெறும் போது அது ஆபத்தில் முடியும். சீனாவையும் ரஷ்யாவையும் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவர்கள் செயல்முறைகளை சுருக்கி தடுப்பு மருந்துகளை கண்டறிந்துள்ளனர். அது போன்ற சமயங்களில் தான் மக்கள், வெளியாகும் தடுப்பூசிகள் தரமானவையா, தரமற்றவையா என்பதில் குழப்பம் அடைகின்றனர். ஒரு தடுப்பூசி சரியாக வேலை செய்கிறதா என்பதை நிரூபிக்காமல் பயன்படுத்தக் கூடாது என்று நான் கூற மாட்டேன். இப்போது இந்த அவசரகால பயன்பாட்டு அங்கீகாரங்களைச் செய்ய உங்களை அனுமதிக்கும் ஒழுங்குமுறை வழிமுறைகள் உள்ளன. தடுப்பூசிகள் பெற்றவர்களை நீங்கள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருக்கும் நபர்களாகவே பாவிக்க வேண்டும். அவர்களை நீங்கள் பின் தொடர வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா, பிரச்சனைகள் ஏதும் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இப்படி செய்தால் ஒரு சிக்கலை அடையாளம் கண்டு முழு சிஸ்டத்தையும் தவறு என்று சுட்டும் நிலை தவறு என்று உணர்வோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

தடுப்பூசிகள் உருவாவதற்கு முன்பே ஒப்பந்தங்கள் இடும் நாடுகளின் செயல்களால் மற்றவர்களுக்கு தடுப்பூசி கிடைக்காமல் போக வாய்ப்புகள் உள்ளது. எச்1என்1 தடுப்பூசியின் போதும் இதை நாம் பார்த்திருக்கின்றோம். உலக சுகாதார நிறுவனம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு மருந்துகளை வாங்குவதற்கு முன்பு பலரும் தடுப்பூசிகளை வாங்கியதால் WHO-விற்கு குறைவான மருந்துகளே கிடைத்தது. அதனை வாங்கி விநியோகம் செய்வது என்பது மதிப்பானதாக படவில்லை.

தடுப்பூசிகளை விநியோகிக்கும் கூட்டாளர் அமைப்பு காவி எனப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களும் தடுப்பூசி தயாரிப்பாளர்களும் உலக அளவில் செயல்படும் ஒதுக்கீட்டு பொறியாளர்களுக்கு தருவார்களா என்பது போன்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கு மாறாக, உலகளாவிய நன்மைகளுக்கு பதிலாக நாம் நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை காண இயலுகிறது. குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு பொறுப்பினைக் கொண்டுள்ளது. அமெரிக்கா அனைத்திற்கும் ஒரு படி மேலே சென்று, நாங்கள் உங்களின் நிறுவனத்தை வாங்க விரும்புகின்றோம். ஏன் என்றால் நாங்கள் எதிர்பார்க்கும் ஒரு மருந்து உங்களிடம் இருக்கிறது. நீங்கள் உங்களின் சோதனைகளை மேற்கொள்ள நாங்கள் நிதி உதவி செய்வோம் என்றெல்லாம் கூறியுள்ளது.

சில வழிகளில் நாம் உலகளாவிய குடிமகனாக இருந்து இருக்கும் வளங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் யாருக்கு இம்மருந்துகள் அதிகம் தேவைப்படுகிறதோ அங்கே அதிக அளவில் மருந்துகள் தர முடியும். ஆனால் அதற்கான தெளிவு இன்னும் கிடைக்கவில்லை. நாம் நம்மால் இயன்றவற்றை செய்ய வேண்டும் மேலும் 800 மில்லியன் மக்களும் அமெரிக்காவில்ல் இல்லை. அதனால் அமெரிக்காவில் 800 மில்லியன் மருந்துகள் இருந்தாலும் அதனை பயன்படுத்தப் போவதில்லை. எனவே அவர்கள் அதனை மற்ற நாடுகளுக்கு தந்துவிடுவார்கள். எனவே அண்டை நாடுகள் அந்த யாரிப்புகளை அணுகும் என்று எதிர்பாக்கிறேன்.

உலக மக்கள் தொகையில் பெரும்பகுதியை நாம் கொண்டுள்ளோம். நம் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புகள் குறைவு தான். அதனால் நம் மக்கள் தொகை குறித்து யோசிக்கும் போது எவ்வாறு தடுப்பூசியை பெற்று யாருக்கு, எப்போது தடுப்பூசி அளிக்க இருக்கின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும். டாக்டர் வினோத் கே பால் தலைமையில் இயங்கும் கமிட்டி இதனை சரியாக செய்து வருகிறது என்று நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

அனைத்து தடுப்பூசிகளுக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை இந்தியாவில் மேற்கொள்ள வேண்டுமா?

கடுமையான ஒழுங்குமுறை ஆணையங்கள் கொண்ட பல்வேறு நாடுகளில் உரிமம் பெற்ற தடுப்பூசி உங்களிடம் இருக்கும் போது, இந்தியாவில் அந்த தடுப்பூசிக்கு உரிமம் பெற மிகச்சிறிய அளவில் மட்டுமே சோதனைகள் தேவைப்படுகிறது. இவை ப்ரிட்ஜிங் ஆய்வுகள் என்று அழைக்கப்படுகிறது. இதனை நீங்கள் 100 அல்லது அதற்கும் குறைவானோர்கள் மீதே சோதிக்கலாம். ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளோடு சோதனை முடிவுகள் சரியாக இருக்கும் பட்சத்தில் தடுப்பூசி ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் தடுப்பூசி மிகவும் புதியது மற்றும் வேறெங்கும் அதற்கு உரிமம் வாங்கப்படவில்லை என்றால் மிகப் பெரிய அளவில் சோதனைகள் கட்டாயமாகிறது. ChAdOx1 தடுப்பூசி மூன்றாம் கட்டத்தில் இருப்பதாலும், ஏற்கனவே இந்தியாவில் இதற்கான ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாலும் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் கிடைத்திருக்கும். அதனை கொண்டும், 1600 பங்கேற்பாளர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகளில் உருவாக்கப்பட்ட தரவுகளை கொண்டும் இந்தியாவில் உரிமம் பெற இயலும்.

எதிர்கால தடுப்பூசி வளர்ச்சியின் தாக்கங்கள் குறித்து

நாம் இன்னும் பழைய முறைகளில் தான் நிறைய தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகின்றோம். 1950களில் நாம் செல் கல்ச்சரை கண்டறிந்தோம். அதன் மூலம் நமக்கு போலியோ மற்றும் ரோட்டா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 2010ம் ஆண்டில் டி.என்.ஏ. சீக்வென்ஸ்கள் கிடைத்த போது நாம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தினோம். தடுப்பூசிகளை தயாரிக்க தலைகீழ் அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டது. தடுப்பூசிகளுக்கான உரிமம் என்று வந்த போது, எபோலா நோய்க்கு தான் புதிய தொழில்நுட்பத்தின் கீழ் தடுப்பு மருந்தினை தயாரித்தோம். இதுவரை ஆர். என்.ஏ தடுப்பூசியோ, டி.என்.ஏ தடுப்பூசி உரிமமோ பெற்றிருக்கவில்லை. முதன்மை உந்து உக்திகளை நாம் இதுவரை முயற்சித்து பார்க்கவில்லை. இவை அனைத்தும் இந்த தொற்று நோயில் இருந்து கற்றுக் கொண்டது. இவை தான் வருங்கால தடுப்பூசி மேம்பாட்டிற்கு புது முகமாக இருக்கப் போகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment