Advertisment

Explained : என்ஆர்சி +சிஏஏ உங்களுக்கு பாதிப்பு விளைவிக்குமா ?

என்.ஆர்.சியும் நீங்களும் ? நாடு தழுவிய என்.ஆர்.சிக்கு கட் ஆப் தேதி எதுவாக இருக்கும்? அசாமில் மட்டும் ஏன் என்ஆர்சி? முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இந்த கவலைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்களா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
citizenship amendment bill,caa, detention camps, nrc, caa vs nrc, detention camps in India, nrc என்றால் என்ன

citizenship amendment bill,caa, detention camps, nrc, caa vs nrc, detention camps in India, nrc என்றால் என்ன

ஒரு வாரத்திற்கும் மேலாக, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட அகில இந்திய தேசிய குடிமக்களின் பதிவு (என்ஆர்சி) எதிராக நாடு பரவலான எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டுவருகிறது. இந்த சிஏஏ +என்ஆர்சி  இணைப்பு பல்வேறு பிரிவுகளுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எந்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்  என்று இந்தியர்கள்  கவலைப்படுகிறார்கள்.

Advertisment

என்.ஆர்.சியும் நீங்களும் ?

முன்மொழியப்பட்ட என்.ஆர்.சி உங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேளிவிக்கு ஏற்கனவே நடைமுறைபடுத்தப்பட்ட  அசாமில் நீங்கள் வசிக்கின்றவரா ? அல்லது  வேறு மாநிலத்தில் வசிப்பவரா? என்ற பதிலைப் பொருத்தது. என்.ஆர்.சி-யை செயல்படுத்தியிருக்கும் ஒரே மாநிலம் அசாம். முதலில் 1951 இல் தயாரிக்கப்பட்டு இறுதியாக 2019 இல் புதுப்பிக்கப்பட்டது. நாடு தழுவிய முன்மொழியப்பட்ட  என்ஆர்சி செயல்முறை இந்தியாவின் பிற பகுதிகளுக்கு முதல் முறையாகும். சட்டப்படி, நாடு தழுவிய என்.ஆர்.சிக்கு இன்னும் எந்த முன்னுதாரணமும் இல்லை.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க, கிளிக் செய்யவும்

டிசம்பர் 9ம் தேதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, நாடு தழுவிய என்.ஆர்.சி அரசின் செயல்திட்டத்தில் இருப்பதாகவும், எந்த மத வடிகட்டியும் என்ஆர்சிக்கு இருக்காது என்று குடியுரிமை திருத்தம் சட்டத்த்தை வேறுபடுத்தி பேசினார். நாடு தழுவிய என்.ஆர்.சி.யை கட்டாயப்படுத்த அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வருமா என்பதும் நமக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை . மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம்(பிஐபி) வெளியிட்ட அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பட்டியலில்,' தேசிய அளவில், என்.ஆர்.சி தொடங்க எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை ' என்று கூறியுள்ளது.

publive-image

அமித் ஷா பலமுறை கூறியது போல், இந்த என்.ஆர்.சி செயல்முறை,'இந்திய குடிமக்களிடமிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதை' முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியதால், ​​ஆளும் பாஜக முன்மொழியப்பட்ட குடிமக்கள் தேசிய பதிவேடு(என்.ஆர்.சி) தொடர்பான கருத்துக்களை சற்று குறைக்க ஆரம்பித்திருக்கிறது. உதாரணமாக, இந்த செயல்முறை  எப்போது தொடங்கும்? அதன் வரையறைகள் என்ன?  என்பதை அரசாங்கம் முடிவு செய்யவில்லை என்றார் உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி. மேலும், அவர் கூறுகையில்,“வரைவு இன்னும் தயாரிக்கப்படவில்லை. அமைச்சரவையோ அல்லது சட்டத் துறையோ இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. என்.ஆர்.சி உடனடியாக நடக்கப்போவதில்லை. என்.ஆர்.சி என்ற பெயரில் சிலர் அச்சத்தை பரப்ப முயற்சிக்கின்றனர், ”என்றார்.

அசாமில் மட்டும் ஏன் என்ஆர்சி?

அசாமில், என்.ஆர்.சி 2019 புதுப்பிப்பு உச்சநீதிமன்றத்தால் 2013 இல் கட்டாயப்படுத்தப்பட்டது. அசாமின் ஒட்டுமொத்த வரலாற்று தடங்களும் குடியேற்றம் தொடர்புடையதுதான்.  மேலும்,  அசாம் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் என்.ஆர்.சிக்கு எதிரானதல்ல, குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு மட்டுமே எதிராக உள்ளன. இதற்குரிய காரணங்களைப் பற்றி புரிந்துகொள்ள  நான் "அசாம் ஒப்பந்தம்" பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

ஆறு ஆண்டு வெகுஜன போராட்டத்திற்குப் பிறகு, அசாம் மாநில அரசு, இந்திய அரசு, அனைத்து அசாம் மாணவர் சங்கம், அனைத்து அசாம் கண சங்கம் பரிஷத் ஆகியோரால்  வரையறுக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் தான் இந்த அசாம் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம்  1985ம் ஆண்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அசாமில் வசிப்பவர் ஒரு இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டுமென்றால்,மார்ச் 25, 1971 க்கு முன்னர், அசாமில் தனது இருப்பையோஅல்லது தனது மூதாதையரின் இருப்பையோ நிரூபிக்க வேண்டும். இந்த மார்ச் 25, 1971 அசாமின் என்.ஆர்.சி.க்கான வெட்டு தேதி. ஆனால், குடியுரிமை திருத்தம் சட்டத்தில், மூன்று நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கு வெட்டு தேதி டிசம்பர் 31, 2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1971 க்கு முன்னர் தங்களின் ( அல்லது மூதாதையர்களின் ) இருப்பை நிரூபிக்க, அசாமில் விண்ணப்பதாரர்கள் 14 சாத்தியமான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க  வேண்டும்:

1951 என்.ஆர்.சி; (அல்லது)

மார்ச் 24, 1971 வரையில் தேர்தல்  வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள்; (அல்லது)

நிலம் & குத்தகை பதிவுகள் போன்ற 12 வகையான சான்றிதழ்களில் ஏதேனும் :  குடியுரிமை ஆவணங்கள்; கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்); வாரியம் / பல்கலைக்கழக சான்றிதழ்.

கூடுதலாக, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் தங்களது  மூதாதையரின் பெயரில் இருந்தால், உறவை நிரூபிக்கும் மற்றொரு ஆவணமும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  அதாவது ரேஷன் கார்டு, எல்.ஐ.சி / வங்கி ஆவணம், பெற்றோர் / மூதாதையரின் பெயர்களைக் கொண்டிருக்கும்  விண்ணப்பதாரரின் கல்விச் சான்றிதழ்

அப்படியானால் , அசாமுக்கு வெளியே என்.ஆர்.சிக்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும்?

இந்த கேள்விக்கு, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம்(பிஐபி) வெளியிட்ட அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பட்டியலில் கூறியிருப்பதாவது,“ என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தியர் என்பதை நிருபிக்க  ஆதாரம் கேட்கப்படும் என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை…ஆதார் அட்டை பெறுவதற்கோ அல்லது  வாக்காளர் பட்டியலில் நமது பெயரைப் பதிவு செய்வதற்கோ, நாம் சில  ஆவணங்களை முன்வைப்பது வழக்கம், அதுபோன்று  என்.ஆர்.சி செயல்முறை மேற்கொள்ளப்பட்டால் குடிமகன் பதிவேட்டில் தங்கள் பெயரை சேர்க்க அதற்கேற்ற ஆவணங்களை காண்பிக்கப் படவேண்டும்' என்று கூறியுள்ளது.

publive-image   பெற்றோர் தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்கள் குறித்து இன்னும் ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறும் அதே வேளையில், “ அரசு அதிகாரிகளால் விநியோகிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார், உரிமங்கள், காப்பீட்டு ஆவணங்கள், பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ்கள், நிலம் அல்லது வீடு தொடர்பான ஆவணங்கள் போன்றவைகள் ஏற்றுக்கொள்ளப்படலாம்  என்ற கூறியுள்ளது. எந்தவொரு இந்திய குடிமகனும் இந்த செயல்முறையால் தேவையில்லாமல் வருந்தாத வகையில், இந்த பட்டியலில் கூடுதல் ஆவணங்கள் இடம்பெறக்கூடும் என்றும் பத்திரக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கல்வியறிவற்ற மக்கள் எந்தவொரு ஆவணங்களும்  இல்லாத சூழ்நிலையில், அதிகாரிகள் அந்த நபர் தனது சாட்சியைக் கொண்டு வந்து நிரூபிக்க அனுமதிப்பார்கள் என்றும், சமூக சரிபார்ப்பு மற்றும் பிற ஆதாரங்களும் அனுமதிக்கப்படும்" என்று கூறியுள்ளது.

என்.ஆர்.சி செயல்முறை குடிமக்களை அடையாளம் காண்பது என்று பத்திரிக்கை தகவல் அலுவலகம் கூறினாலும்,“இந்திய குடிமக்கள்” பற்றிய குறிப்புகள் முழுமையாக  விவரிக்கப்படவில்லை.

பாகிஸ்தானில் தான் பிறந்தேன்... இந்தியனுக்கான ஆதாரம் கேட்டால்? - மணி சங்கர் அய்யர்!

நாடு தழுவிய என்.ஆர்.சிக்கு கட் ஆப் தேதி எதுவாக இருக்கும்?

இது வரையறுக்கப்படவில்லை என்றாலும், இந்தியாவில் குடியுரிமை தொடர்பான பல சட்டங்கள் நடைமுறையில் தான் உள்ளன. குடியுரிமைச் சட்டம் 1955, 1986ல் திருத்தப்பட்டது. அதன்படி, ஜூலை 1, 1987 வரை இந்தியாவில் பிறந்த எவரும் பிறப்பால் இந்திய குடிமக்களாக கருதப்படுவர். ஜூலை 1, 1987 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என்று சட்டம் ஒரு புதிய நிபந்தனையையும் வகுத்தது. இந்த சட்டம்  2003ம் ஆண்டு மீண்டும் திருத்தப்பட்டது.

அதன்படி,  டிசம்பர் 3, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த ஒரு நபர் இந்திய குடிமகனாக கருதப்பட வேண்டுமென்றால், அவரின் பெற்றோர் ஒருவர் கட்டாயம் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும், மற்றொருவர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவராக இருத்தல் கூடாது.

1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதிக்குப் பிறகு, இந்திய நாட்டிற்கு வெளியே பிறந்தவர்கள், சரியான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் வசிப்பவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று சட்டம் சொல்கிறது.  இது அசாமிற்கு பொருந்தாது - ஏனெனில் அசாமின் கட்- ஆப் தேதி : மார்ச் 25, 1971.

குடியுரிமை திருத்தம் சட்ட பாதுகாப்பு, கர்நாடகாவின் சிக்மகளூர், மத்திய பிரதேசத்தின் சந்தேரி அல்லது கேரளாவின் கோழிக்கோடு பகுதிகளில் வசிக்கும் இந்து குடியிருப்பாளர்களுக்கு  கிடைக்குமா?

உண்மையில் இதற்கு பதில், தெளிவாக இல்லை. இந்த பகுதிகளில் வசிக்கும் ஒரு இந்து மக்கள் என்.ஆர்.சி செயல்முறையில் தங்களை இந்தியர்கள் என்று நிரூபிக்க வேண்டும், சி.ஏ.ஏ விண்ணப்பங்களில் தங்களை அண்டைநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் அடைக்கலம் புகுந்தவர்கள் என்று கூற வேண்டியதிருக்கும்.  இது நிச்சயமற்ற ஒரு கூடுதல் கேள்வியை நம்மில் எழுப்புகிறது. அசாம் அல்லது மேற்கு வங்கத்தில் வாழும் ஒரு வங்காள இந்து பங்களாதேஷைச் சேர்ந்தவர் என்று கூறலாம். ஆனால்,மத்திய மற்றும் தென்னிந்தியாவில் வாழும் வங்காள இந்து மக்கள் குடியுரிமை சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து வந்ததாக கோர முடியுமா ?  என்பது இன்னும் ஒரு கேள்வியாகத் தான் உள்ளது.

இந்த குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கான விதிமுறைகள்  இன்னும் வடிவமைக்கப்படவில்லை என்பதால், முஸ்லிமல்லாதவர்களுக்கு விரைவான குடியுரிமைக்கு விண்ணப்பிக்க பின்பற்ற வேண்டிய செயல்முறை தெளிவாக இல்லை.

நாடு தழுவிய என்ஆர்சி உடன் இணைந்த குடியுரிமை திருத்தம்  சட்டத்திற்கு  முஸ்லிம்கள் குறிப்பாக கவலைப்படுவதற்கு இதுவே காரணமா?

ஆம், குடியுரிமை திருத்தம் சட்டத்தில் இருக்கும் பாதுகாப்பு கவசம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால், கவலைகள் எழுகின்றன. ஒரு இஸ்லாமியர், என்.ஆர்.சி.க்கான தகுதிகளை பூர்த்தி செய்ய முடியாமல், இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்ட  என்ஆர்சி பட்டியலில் தனது பெயர் இடம்பெறாமல் போவாராயின், அவர் இந்திய குடியுரிமையைத தானாகவே  இழப்பார்.

என்.ஆர்.சி செயல்முற்றையாகும் விதங்களைப் பற்றியும் அவர்களுக்கு அதிகமான கவலை உண்டு. முஸ்லிம் சமூகத்தில், பலர் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எழுத்துப் பிழைகள் போன்ற ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக பலர் குடிமக்கள் பதிவேட்டில் இருந்து விலக்கப்படுவார்கள் என்ற அச்சம் அவர்களிடம் அதிகமாக உள்ளது. அசாமின் என்.ஆர்.சி செயல்பாட்டின் போது பல விண்ணப்பதாரர்களுக்கு (இந்து மற்றும் முஸ்லீம்) இது நிகழ்ந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், புலம்பெயர்ந்த வம்சாவளியைச் சேர்ந்த அசாம் முஸ்லிம்கள் தங்கள் ஆவணங்களை தலைமுறைகளாகப் பாதுகாப்பதில் மிகவும் கவனம் செலுத்தும் அசாம் மாநிலத்தில் கூட அவர்கள் ஆவணங்கள் குறைபாடு காரணமாக விலக்கப் பட்டிருக்கின்றனர்.

என்.ஆர்.சி-யிலிருந்து வெளியேறப்படுபவர்களை தங்க வைப்பதற்காக, தற்போதுள்ள அல்லது வரவிருக்கும்  தடுப்பு  மையங்களுக்கும்  இஸ்லாம் மக்களின் கவலைகளைத தூண்டுகிறது. அசாமில் ஏற்கனவே ஆறு தடுப்புக்காவல் நிலையங்கள் சிறைகளோடு இணைக்கப்பட்டுள்ளன. மேலும் அசாம், கோல்பாராவில் பிரத்தியேகமான ஒன்றை அமைத்து வருகிறது.மும்பை மற்றும் பெங்களூரில் நகரங்களில் இந்த ஆண்டு தடுப்பு மையங்களை உருவாகின.

"புத்தர், இந்துக்கள் மற்றும் சீக்கியர்களைத் தவிர நாட்டிலிருந்து ஒவ்வொரு ஊடுருவலையும் நாங்கள் (பிஜேபி) அகற்றுவோம்" என்று ஷா ஏப்ரல் 11 அன்று மேற்கு வங்கத்தில் நடந்த பேரணியில் கூறினார். பாஜக இந்த அறிக்கையை ட்வீட் செய்தது, ஆனால் பின்னர் அதை நீக்கியது.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இந்த கவலைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்களா?

மக்களவையில் நடந்த விவாதத்தின் போது அசதுத்தீன் ஒவைசி (ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன்), முஸ்லிம்களை நிலையற்றவர்களாக மாற்றுவதே  சட்டத்தின் நோக்கம் குற்றம் சாட்டியிருந்தார். "இந்த மசோதா அனுமதிக்கப்பட்டால், வெளிநாட்டு தீர்ப்பாயங்கள் முஸ்லிம்கள் தொடர்பான வழக்குகளை மட்டுமே கையாளும்," என்று அவர் கூறினார்.

சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் எஸ்.டி ஹசன் குடியுரிமைச் சட்டத்தை என்.ஆர்.சிக்கு முன்னோடி என்று அழைத்திருந்தார். "ஐந்து ஆண்டுகள் கூட இந்தியாவில் வசித்ததற்கான ஆதாரங்கள் இஸ்லாமியர்களிடம் இல்லை ...எனவே , ஊடுருவல்காரர்களாக அறிவிக்கப்படும் பயம் முஸ்லிம்களிடம் உள்ளது ," என்றார்.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த நான்கு  நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியுரிமை திருத்தம் சட்டம் மற்றும் நாடு தழுவிய என்ஆர்சி செயல்முறையை  உச்சநீதிமன்றத்தில் சவால் செய்துள்ளது. அரசியலமைப்பின் 14 வது பிரிவை குடியுரிமை திருத்தம் சட்டம் மீறுவதாகவும் கூறியுள்ளது .

முஸ்லிம்களின் இத்தகைய அச்சங்களை நிவர்த்தி செய்ய அரசாங்கம் என்ன கூறியுள்ளது?

இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில், உள்துறை அமைச்சர் ஷா, குடியுரிமை சட்டமும், குடிமக்கள் பதிவேடும் இணைக்கப்படாது" என்றார். எந்த இந்திய குடிமகனும் கவலைப்பட தேவையில்லை, யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள். என்.ஆர்.சி செயல்பாட்டில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த எந்த இந்திய குடிமகனும் பாதிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்வோம். ஆனால், நாட்டின் எல்லைகள் எப்போதும் திறந்து வைக்கப்படாது. நாடுகள் அவ்வாறு இயந்குவதில்லை,”என்றார்.

மேலும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்துக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் கிடைத்த வளங்களையும்,  வாய்ப்புகளையும் குறைக்கின்றனர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய குடிமகனாக இருக்கும் சிறுபான்மையினரின் ஒரு நபர் கூட என்.ஆர்.சி.யில் பாதிக்கப்பட மாட்டார், ஆனால் ஒரு ஊடுருவாதியும் காப்பாற்றப்பட மாட்டார்,” என்றார்.

 

அரசியல் சூழ்நிலையில் என்.ஆர்.சி-ஐ பெரிதுபடுத்தி பேச பாஜக தயக்கம்

 

முன்மொழியப்பட்ட  நாடு தழுவிய என்.ஆர்.சி.யின் ஒதுக்கி வைக்கப்பட்டால், குடியுரிமை திருத்தம் சட்டம் அதன் கொடூரத்தை இழக்குமா?

மக்களவையில் அசதுத்தீன் ஒவைசி துன்புறுத்தப்பட்ட அனைத்து மத சிறுபான்மையினருக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்ற திருத்தத்தை கொண்டுவந்தார்.

இதன் மூலம், நாடு தழுவிய என்.ஆர்.சி கொண்டுவந்தாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு குடியுரிமை திருத்தம் சட்டம் பாகுபாடு காட்டாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்த  ஒவைசி  முயற்சிக்கிறார்  என்பதை நாம்  பொருளாய் கொள்ள முடிகிறது.

(அல்லது)

நாடு தழுவிய என்.ஆர்.சி செயல்முறை படுத்த வில்லையென்றால், தற்போதைய குடியுரிமை திருத்தம் சட்டம்  இந்திய இஸ்லாமியர்களின் பார்வையில் மிகவும் கொடூரத்தன்மையாக தெரியாது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சுகத ராய், ஜனவரி மாதம் குடியுரிமை திருத்த மசோதாவின் முந்தைய பதிப்பை எதிர்த்து பேசியபோது,வங்கதேசத்தை விலக்கினால் இந்த சட்டம் வரவேற்கப்படும் என்று கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், உச்சநீதிமன்றத்தின் முன் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கான சவால்கள் அரசியலமைப்பு மூலம் (ஆர்டிகல் 14, 15(2))  விவாதிக்கப்படலாம். இருந்தாலும், நாடு தழுவிய என்.ஆர்.சி மனதில் வைத்து குடியுரிமை திருத்தம் சட்டத்தை பரிசீலிக்குமா?  என்பது தெளிவாக இல்லை.

ஆவணமற்ற இந்தியர்கள் பலர் இருக்கிறார்களா?

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கட்தொகை 121 கோடியாகவும் , 2017ல் உலக வங்கிவெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்தியாவின் மக்கட்தொகை 133.9 கோடியாகவும் இருந்தது.

இந்த ஆண்டு டிசம்பர் 21 வரை 124.95 கோடி நபர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று யுஐடிஏஐ  வலைதளத்தில் சொல்லப்பட்டுள்ளது.  தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்-ன் தகவலின் படி , இந்தியாவில் 2018ம் ஆண்டின் இறுதிவரையில்  102.6 கோடி மொபைல் பயனர்கள் இருந்துள்ளனர்..

அனுமானம் என்னவென்றால், பெரும்பாலான நாட்டு மக்கள் ஆதார் அட்டை அல்லது மொபைல் இணைப்பின் கீழ்  ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்கள் என்பதாகும்.

இருப்பினும், இவை இரண்டும் குடியுரிமைக்கான சான்று அல்ல.

குடியுரிமையை நிரூபிக்க ஒரு ஆதார் அட்டை போதுமானதாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருந்தாலும், ஆதார் சட்டம் பிரிவு 9ன் கீழ், ஆதார் எண் அல்லது அதன் அங்கீகாரம் தானாகவே, எந்தவொரு உரிமையையும் வழங்காது, குடியுரிமை மற்றும் குடியிருப்புக்கான சான்றாக இருக்காது என்று கூறுகிறது. .

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, 90 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில், 60 கோடிக்கும் அதிகமான நபர்கள் (அப்போதைய மக்கள்தொகையில் 59%) 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர்.  இருந்தாலும், வெவ்வேறு குறிப்பு ஆண்டுகளைக் கொண்டிருப்பதால், இதன் மூலம் எந்தவொரு அனுமானத்தையும் எடுப்பது கடினம்.

நாடு தழுவிய என்.ஆர்.சி அமல்படுத்தப்படுவதை பல மாநிலங்கள் நிராகரித்தன. அவர்களின் எதிர்ப்பின் அர்த்தம் என்ன?

எதிர்க்கட்சி ஆளும் மேற்கு வங்கம், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகியவை என்.ஆர்.சி தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தப்படாது என்று தங்களது அரசியல் கருத்தை முன்வைக்கின்றன.

குடியுரிமை, ஏலியன்ஸ் மற்றும் இயற்கைமயமாக்கல் ஆகியவை ஏழாவது அட்டவணையின் பட்டியல் ஒன்றில் பட்டியலிடப்பட்டுள்ள விஷயங்களாகும், அவை பாராளுமன்றத்தின் களத்தின் கீழ் மட்டுமே வருகின்றன.

கூடுதலாக, 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்னதாக நடத்தப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு  (என்.பிஆர்) புதுப்பித்தல் பணியை கேரளா -  மேற்கு வங்காள மாநிலங்கள் நிறுத்தின.

குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள், 2003  (குடிமக்களை பதிவு செய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் வெளியீடு) ஆகியவற்றின் கீழ் "நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர்களின்" பட்டியலான தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளருக்கும் இது கட்டாயமாகும்.

ஆவணங்களுடன் இந்தியர்கள்

இந்தியாவின் மக்கள் தொகை- 134 கோடி

அது 2017 ம் ஆண்டிற்கான உலக வங்கி எண்ணிக்கை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்திய அரசு 121 கோடியை கணக்கிட்டுள்ளது.

ஆதார் எண்கள் - 125 கோடி(டிசம்பர் 2019 நிலவரப்படி)

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் - 90 கோடி(2019 மக்களவைத் தேர்தலில்)

2001 ஆம் ஆண்டில், மக்கள்தொகையில் 59% (60 கோடிக்கு மேல்) வாக்களிக்கும் வயதைக் கொண்டிருந்தனர்.

ரேஷன் கார்டுகள் -  23 கோடி - நவம்பர் 2019 வரை, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்

பாஸ்போர்ட் - 6.60 கோடி (டிசம்பர் 21, 2019 வரை)

வருமான வரி - 42 கோடி( பிப்ரவரி 2019 வரை பான் எண்ணிக்கை (சிபிடிடி தலைவர் சுஷில் சந்திராவின் கூற்றுப்படி)

மொபைல் தொலைபேசி பயனர்கள் - 102 கோடி

 

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment