Advertisment

வங்கக்கடலில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் புயல்: எங்கு, எப்போது தாக்க வாய்ப்பு

சித்ராங் சூறாவளி: வங்காள விரிகுடாவில் 2018 ஆம் ஆண்டு முதல் அக்டோபரில் உருவாகும் முதல் சூறாவளி இதுவாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
October storm in Bay of Bengal after 3 years: When, where it is likely to hit

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை

2022 ஆம் ஆண்டு பருவமழைக்கு பிந்தைய பருவத்தின் முதல் வெப்பமண்டல சூறாவளி அக்டோபர் 24 ஆம் தேதி வங்காள விரிகுடாவில் உருவாகலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

Advertisment

வங்காள விரிகுடாவில் 2018 ஆம் ஆண்டு முதல் அக்டோபரில் உருவாகும் முதல் சூறாவளி இதுவாகும். இதற்கு சித்ரகாங் என்று தாய்லாந்து பெயரிட்டுள்ளது. முன்னதாக வங்காள விரிகுடாவில் கடந்த அக்டோபர் மாதம் 2018 ஆம் ஆண்டு திட்லி புயல் ஏற்பட்டது.

ஏன் அக்டோபரில் புயல்கள்

அக்டோபர்-நவம்பர் மற்றும் மே-ஜூன் மாதங்களில் வட இந்தியப் பெருங்கடலில் - வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் ஆண்டில் சராசரியாக ஐந்து கடுமையான தீவிரம் கொண்ட புயல்கள் உருவாகின்றன.

கடந்த 131 ஆண்டுகளில், அக்டோபர் மாதத்தில் வங்காள விரிகுடாவில் 61 புயல்கள் உருவாகியுள்ளன என்று பிராந்திய சிறப்பு வானிலை மையம் (RSMC) தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒடிசா, 1999 இன் சூப்பர் சூறாவளி உட்பட, அக்டோபரில் அதன் பல கடுமையான புயல்களை எதிர்கொண்டது.

"தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, கடல் வெப்பம் அதிகரித்து வருகிறது, இது வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர வழிவகுக்கிறது. கடல் பகுதியில் வளிமண்டல ஈரப்பதம் அதிகமாக உள்ளது. எனவே, தென் சீனக் கடலில் இருந்து எஞ்சியிருக்கும் அமைப்புகள் வங்காள விரிகுடாவை அடையும் போது, அக்டோபரில் சூறாவளி உருவாகவும், தீவிரமடையவும் உதவுகிறது" என்று புவனேஷ்வரில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் IMD விஞ்ஞானி உமாசங்கர் தாஸ் கூறினார்.

சில ஆண்டுகளில், கடல்-வளிமண்டல காரணிகள் இந்த நிகழ்வைத் தடுக்கின்றன. உதாரணமாக, 2020 ஆம் ஆண்டில், பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் பலவீனமான லா நினா நிலைமைகள் இந்தியாவின் கடற்கரைகளுக்கு அருகில் ஒரு சூறாவளி உருவாவதைத் தடுத்தன.

சித்ராங் சூறாவளி

இந்த நிலையில், வியாழக்கிழமை (அக்.20) IMD அதிகாரிகள் கூறுகையில், அக்டோபர் 24 ஆம் தேதி கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவாகும் சூறாவளி புயல் அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் மேற்கு வங்கம் - வங்காளதேசத்தின் கடற்கரைகளை அடையும்.

சித்ராங் (Si-trang) என்ற பெயர் தாய்லாந்தால் வழங்கப்பட்டது. மேலும், IMD ஆனது சூறாவளி ஆலோசனைகள் மற்றும் விழிப்பூட்டல்களை வழங்க வேண்டிய உலகின் ஆறு RMSC களில் ஒன்றாகும். வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் உள்ளிட்ட 13 உறுப்பு நாடுகளுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்குகிறது.

எந்தெந்த மாநிலங்கள் பாதிக்கப்படலாம்?

தற்போதுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, வரும் நான்கு நாட்களில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும். முக்கியமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு ஏற்படுத்தலாம். இதுமட்டுமின்றி வங்கதேசத்திலும் பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடும். மேலும் கடலோர மாவட்டங்களில் கன மழை மற்றும் புயல் காற்று வீசக் கூடும்.

இந்த நிலையில், குறைந்த அழுத்த அமைப்பு (காற்றின் வேகம் 31 கிமீ/மணி) அக்டோபர் 22 ஆம் தேதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (31 முதல் 50 கிமீ/மணி வரை காற்றின் வேகம்) வலுவடையும் என்றும் மேலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வாகவும் (காற்றின் வேகம் 51- ஆக இருக்கும்) 61கிமீ/மணி) அக்டோபர் 23க்குள் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

அதன்பிறகு, பெரும்பாலும் வடகிழக்கு நோக்கி வளைந்து, ஒடிசா கடற்கரையை கடந்து செல்லும். இது முன்னேறும்போது, ​​அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் ஒரு சூறாவளி புயலாக (மணிக்கு 62 - 87 கிமீ வேகத்தில்) வலுவடையும்.

இந்த புயல் அக்டோபர் 25 ஆம் தேதி வடக்கு வங்காள விரிகுடாவில் மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேச கடற்கரையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை (24 மணி நேரத்தில் 15.6 முதல் 64.4மிமீ வரை) சனிக்கிழமை வரை தொடரும்.

புயல் ஒடிசா கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அக்டோபர் 22-25 தேதிகளில் பூரி, ஜகத்சிங்பூர் மற்றும் கேந்திரபர்ஹா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை (24 மணி நேரத்தில் 64.5 முதல் 204.4 மிமீ வரை) பெய்யும்.

இந்த கடலோர மாவட்டங்களுக்கு IMD மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு வங்க கங்கையை ஒட்டிய மாவட்டங்களிலும் அக்டோபர் 24 மற்றும் 25 தேதிகளில் மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

சூறாவளி உருவானவுடன், அக்டோபர் 24 ஆம் தேதி மயூர்பஞ்ச், பாலேஷ்வர், பத்ரக், ஜாஜ்பூர், கட்டாக், கோர்டா, நயாகர், பூரி, கேந்த்ராபர்ஹா மற்றும் ஜகத்சிங்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளிலும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் சூறாவளிகள்

வங்காள விரிகுடாவுடன் ஒப்பிடுகையில், 1891 அக்டோபரில் இருந்து அரபிக்கடலில் 32 புயல்கள் மட்டுமே உருவாகியுள்ளன.

காலநிலை ரீதியாகவும், ஒரு ஆண்டில் வட இந்தியப் பெருங்கடலில் உருவான ஐந்து புயல்களில் நான்கு புயல்கள் வளைகுடாவில் உள்ளன என்று ஐஎம்டி கூறுகிறது. ஆனால், வங்காளம் மற்றும் அரபிக்கடலில் ஒன்று உருவாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment