Advertisment

தடுப்பூசிக்கு பிறகு ஒமிக்ரானுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி எப்படி உள்ளது? புதிய ஆய்வு முடிவுகள்

நடுநிலைப்படுத்தும் திறன் குறைவாக இருப்பது ஒட்டுமொத்த தடுப்பூசி செயல்திறனும் குறைந்துவிடும் என்று அர்த்தமாகாது. தடுப்பூசிக்கு முன்பு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியே அறிகுறிகளுடன் கூடிய தொற்றுகளை சமாளிக்க போதுமானதாக இருக்கும் என்ற சீரான செய்திகளை நாம் மக்களிடம் வழங்க வேண்டும்

author-image
WebDesk
New Update
Omicron and immune response after vaccination

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பயனர் (Express photo by Abhinav Saha)

Anuradha Mascarenhas |

Advertisment

Omicron and immune response after vaccination : தடுப்பூசிகள் மற்றும் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் நடுநிலைப்படுத்தப்படும் ஆண்ட்டிபாடிகளின் திறனை, பல்வேறு பிறழ்வுகள் கொண்டு உருமாற்றம் அடைந்திருக்கும் கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் குறைத்துள்ளது என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் அறிவித்துள்ளன. பரவலாக தடுப்பூசி அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருந்தாலும் ஒமிக்ரான் தீவிரமான பரவலை விளைவிக்க கூடும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த ஆய்வு டி.எச்.எஸ்.டி.ஐ என்ற அமைப்பால் (Translational Health Science and Technology Institute (THSTI))நடத்தப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட நடுநிலைமைப்படுத்தும் திறன் தடுப்பூசிகளின் செயல்திறனை குறைக்கும் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Sub Optimal neutralisation of Omicron (B.1.1.529) variant by antibodies induced by vaccine alone or SARS CoV2 infection plus vaccine (hybrid immunity) post six months என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், தற்போது டிஜிட்டல் தளங்களில் bit.ly/31Jht9Z வெளியிடப்பட்டுள்ளது.

ஒப்பீடு

ஆராய்ச்சியாளர்கள் ஒமிக்ரானை நடுநிலைப்படுத்தும் ஆண்டிபாடிகளின் திறனை தடுப்பூசிகள் மட்டும் செலுத்திக் கொண்ட நபர்கள் மற்றும் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதித்து மீண்டு, தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் மத்தியில் ஆராய்ச்சி செய்தனர். ”நாங்கள் மொத்தமாக 80 பங்கேற்பாளர்களிடம் சோதனைகளை மேற்கொண்டோம். அதில் 20 நபர்கள் கோவிட்ஷீல்டையும், கோவாக்சின் தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டவர்கள். 20 நபர்கள் கோவிஷீல்ட் +கோவாக்‌ஷினுடன் மற்றும் தொற்றால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பை கொண்டவர்கள் என்று THSTI அமைப்பின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் ப்ரமோத் கார்க் கூறினார்.

ஆராய்ச்சியில் நடுநிலைத்தன்மையை ஆராய ஜியோமெட்ரிக் மீன் டைட்ரே (Geometric Mean Titre (GMT) என்ற அளவீடு பயன்படுத்தப்பட்டது. உண்மையான கொரோனா வைரஸ் திரிபுக்கு எதிரான ஆண்ட்டிபாடிகள், கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களிடம் 384 ஜி.எம்.டியாகவும், கோவிட்ஷீல்ட் போட்டவர்களிடம் 383 ஜி.எம்.டியாகவும் இருந்தது. நோய் தொற்றால் ஏற்பட்ட நோயெதிர்ப்பு சக்தியுடன் கோவாக்சின் மற்றும் கோவிட்ஷீல்ட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட நபர்களிடம் முறையே ஜி.எம்.டி. அளவுகள் 795 மற்றும் 1424 இருந்தது.

ஒமிக்ரானுக்கு எதிராக நடுநிலைத்தன்மையை பரிசோதனை செய்த போது தடுப்பூசிகளை மட்டும் செலுத்திக் கொண்ட நபர்களில் 20ல் 5 பேருக்கும், கோவாக்சின் + நோய் தொற்றால் ஏற்பட்ட நோயெதிர்ப்பு சக்தி கொண்ட கொண்ட நபர்களில் 19-ல் 5 பேருக்கும், கோவிட்ஷீல்ட் + நோய் தொற்றால் ஏற்பட்ட நோயெதிர்ப்பு சக்தி கொண்ட கொண்ட நபர்களில் 20-ல் 9 பேருக்கு மட்டும் தான் ஜி.எம்.டி. அளவுகள் வரம்பிற்கு மேலே அதிகமாக காணப்பட்டது. முந்தைய தொற்று ஏற்பட்டவர்கள் மத்தியில் நடுநிலைத்தன்மை அதிகமாக இருப்பதை பரிந்துரை செய்தது.

அசல் திரிபு மற்றும் டெல்டாவுடன் ஒப்பிடும்போது, நியூட்ராலைசர்களின் விகிதம் ஒமிக்ரானுக்கு குறைவாகவே உள்ளது. முன் தொற்று இல்லாதவர்களில், அசல் திரிபு மற்றும் டெல்டாவைக் காட்டிலும் ஓமிக்ரானுக்கு எதிரான ஜி.எம்.டி. அளவுகளும் குறைவாகவே உள்ளன. முந்தைய நோய்த்தொற்று உள்ளவர்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் நடுநிலைப்படுத்தும் திறன் இதற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத நபர்களை விட சிறப்பாக இருந்தது.

தடுப்பூசியின் பங்கு

ஆனாலும், நடுநிலைப்படுத்தும் திறன் குறைவாக இருப்பது ஒட்டுமொத்த தடுப்பூசி செயல்திறனும் குறைந்துவிடும் என்று அர்த்தமாகாது. தடுப்பூசிக்கு முன்பு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியே அறிகுறிகளுடன் கூடிய தொற்றுகளை சமாளிக்க போதுமானதாக இருக்கும் என்ற சீரான செய்திகளை நாம் மக்களிடம் வழங்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு குறைவான தாக்கம் இருப்பதற்கு காரணம் மனித உடல்களில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தான் என்று மருத்துவர் கார்க் தெரிவித்தார். ஒமிக்ரான் கட்டுக்கு அடங்காமல் பரவினாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வது 80%-90% மக்களில் கடுமையான நோயை குறைக்க உதவுகிறது என்றும் மருத்துவர் கார்க் கூறியுள்ளார். இரண்டு தடுப்பூசிகளுக்கும் இடையில் நடுநிலைப்படுத்தல் அளவுகளில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்டிபாடிகள், டி செல்கள் & பூஸ்டர்கள்

தி லான்செட் இன்ஃபெக்‌ஷியஸ் டிசீசஸ் இதழில் வெளியிடப்பட்ட THSTI அமைப்பின்ன் சமீபத்திய ஆய்வு, ஆன்டிபாடிகளை நடுநிலையாக்குவதைத் தவிர, SARS-CoV-2 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த டி-செல் நோயெதிர்ப்பு ரெஸ்பான்ஸ் முக்கியம் என்பதைக் காட்டுகிறது. தென்னாப்பிரிக்க ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டபடி, ஒமிக்ரான் விஷயத்தில் இந்த கூற்று சரியாகவே உள்ளது.

கொள்கை ரீதியான கண்ணோட்டத்தில், சீரம் அமைப்பின் IgG டைட்ரே மற்றும் ஜி.எம்.டி. சமநிலைக்கும் இடையேயான குறிப்பிடத்தக்க தொடர்பு, நோயேதிர்ப்பு சக்தியில் இருந்து விலகிச் செல்லும் புதிய மாறுபாட்டை சமாளிக்க கூடுதல் தடுப்பூசியின் ஆதரவு உதவும் என்பதை நிரூபிக்கிறது. இது இந்தியா உட்பட ஒரு சில நாடுகளில் செயல்படுத்தப்பட்டு, பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அந்த ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருபிரசாத் மெடிகேஷி மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் நடுநிலைப்படுத்தல் வீழ்ச்சி ஆபத்தானதாக இருக்கலாம் என்று ஆய்வில் கூறியுள்ளனர், ஆனால் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள் மற்றும் இறப்பு விகிதங்களில் இந்த குறைக்கப்பட்ட நடுநிலைப்படுத்தல் ஜி.எம்.டி அளவுகளுடன் நோயின் தாக்கம் மற்றும் பிற காரணிகளுடன் விளக்கம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment